பெண்களின் பரம்பரையலகிலேயே தாய்மை இருக்கின்றது. அவளின் முக்கால் வாசிக் கலங்களும் சொல்வது நீ ஒரு படைப்பாளி பாதுகாப்பாளி என்றுதான். ஆனால் இன்று படைப்பை மட்டுமே பெண் செய்து கொண்டிருக்கிறாள்.
யுத்தத்தினால் மட்டக்களப்பில் மட்டும் சுமார் 50,000 பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். தற்போது வன்னியில் யுத்தத்தால் விதவைகளான, தனிமைப்படுத்தப்பட்ட பெண்களின் புள்ளிவிபரங்களைத் தரும்படி அரசிடம் கோரியிருக்கின்றோம். யுத்தத்தால் துணையை இழந்த பெண்களின் மறுவாழ்வு, வாழ்வாதாரம் என்பனவற்றுக்கான திட்டங்கள் பற்றிச் சிந்திக்கும் அதேவேளையில், போரினால் ஏற்பட்ட உளப்பாதிப்புகளில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவசியம். கர்ப்பிணிப் பெண்களோ, விதவைகளோ அநேகர் தமது குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
யுத்தத்தின் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் சிதறி ஓடியதால் பிரிந்து போயுள்ள குடும்பங்கள் ஏராளம். கர்ப்பிணிகள், விதவைப் பெண்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற நடவடிக்கைகளில் பிரிந்த குடும்பங்களுடன் அவர்கள் ஒன்றிணைக்கப்படுவதற்கே முன்னுரிமையளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம்.
யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் சிறார்களும்தான். தமது வீட்டில், அயலவர்களுடன் தெருக்கோடியில் விளையாடிய சிறார்கள் இன்று முட்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களிலும் தமது தாய், தந்தையாரைப் பிரிந்து வாழும் சிறார்கள் ஏராளம் பேர் நலன்புரி நிலையங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் முதலில் செய்ய வேண்டியது, அவர்களது பெற்றோருடன், உறவினர்களுடன் அவர்களைச் சேர்ப்பதே.
நான் ஒரு குழந்தை நல அதிகாரி, என்னைப் பொறுத்த வரை ஒரு குழந்தையின் முதல் ஐந்து வருடங்களே முக்கியமானவை என்பேன். அதன் வாழ்க்கையின் அடித்தளமாக அமைவது அக்காலப் பகுதி. குழந்தையின் முதல் ஐந்து வருடங்களே அதன் எஞ்சிய காலத்தைத் தீர்மானிக்கின்றன. அதனை, குடும்பத்தவர்களைப் பிரிந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக நலன்புரி நிலையங்களில் கழித்தார்களானால் நிச்சயம் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது.
போஷாக்கின்மையாலும் அதிகளவில் சிறார்களே பாதிக்கப்படுகின்றார்கள். நலன்புரி நிலையங்களில், போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 37 சதவீதமாக அதிகரித்திருப்பதாக யூனிசெப்பின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
நீங்கள் இதற்கு முன்னர் இலங்கை வந்த போதும், வவுனியாவில் பல நலன்புரி முகாம்களுக்குச் சென்று வந்திருக்கிaர்கள். இம்முறையும் சென்றிருக்கிaர்கள். இடம்பெயர்ந்தவர்களிடம் சாதகமான மாற்றங்களைக் காணக் கூடியதாக இருந்ததா?
நிச்சயமாக, இடம்பெயர்ந்தவர்களின் நலன்களைப் பேணுவதிலும், அவர்களின் மீளக்குடியமர்வுக்கும் அரசு தன்னாலியன்ற முயற்சிகளைச் செய்கின்றது.
சிலரிடம் கேட்டால் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் ஆர்வமும், விருப்பமும் எமக்கு இருக்கின்றது. ஆனால் அதற்கான வழி தெரியவில்லை என்று பலர் சொல்கின்றனர். ஆனால் இங்கு வந்தால் அப்படித் தெரியவில்லை.
இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை இலகுவில் அணுகக் கூடியதாக இருக்கின்றது.
அதற்கு போராட்டம் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விமர்சித் தவர்கள் நாங்கள் என்பதும் அதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்.
பசில் ராஜபக்ஷ இடம்பெயர்ந்த மக்களின் மீளக்குடியமர்வு, நலன்புரி முகாம்களில் உள்ள பிரச்சினைகள் என்பன பற்றிய விபரங்களையெல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.
முசலியில் 30,000 பேரும், யாழ்ப்பாணத்தில் 35,000 பேரும் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று அவர் எங்களுக்கு நம்பிக்கை தந்தார். அவர்களில் அநேகர் விவசாயிகள். எனவே, விவசாயக் காலம் ஆரம்பிக்கும் முன்னர் அவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார்.
18 வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைப் போராளிகள் சுமார் 400 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் இணைந்து கொண்ட சுமார் 10,000 தீவிர உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண் போராளிகளின் புனர்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவர்களும் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களைச் சென்று பார்த்த போது புரிந்து கொண்டோம்.
புலம்பெயர் வாழ் தமிழர்களின் உதவிகள் எந்தளவில் இருக்கின்றன?
அல்லலுறும் தமது தாயக உறவுகளுக்காக உதவும் நல்ல உள்ளங்கள் நிரையவே இருக்கின்றன. ஆனாலும் இவர்கள் இடம்பெயர்ந்ததால் தான் போராட்டம் தோற்றதாகக் கூறி, உதவி மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.
போராட்டம் தவறான திசையில் செல்ல ஆரம்பிக்கையில் அதைத் தடடிக்கேட்க விமர்சிக்க இந்நாட்டின் புத்திஜீவிகள் முன்வரவில்லை. துணிந்து விமர்சித்தவர்களின் குரல்வளைகள் மெளனிக்கப்பட்டன. போராட்டம் என்று கூறிக் கொண்டு ஒரு சந்ததியை, புத்திஜீவிகளை, கலாசார பாரம்பரியங்களை இழந்து விட்ட பின்னரும் பழையதைக் கதைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. நோயாலும், பட்டினியாலும் எமது சகோதரர்கள் இறப்பதைத் தடுக்க, புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். நாங்கள் ழிittlலீ திiனீ என்றொரு அமைப்பை லண்டனில் தொடங்கியிருக்கின்றோம்.
நலன்புரி முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்தவர்களின் உடனடித் தேவைகளை வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ¤டன் தொடர்பு கொண்டு அறிந்து கொண்டு அவரின் ஊடாகவே அத்தேவைகளை இயலுமானவரை நிறைவேற்றுகின்றோம்.
இலங்கைக்கு வரும் நாங்கள் 21 பேரும் ஜேர்மனியின் ஸ்டூருட் கார்ட்டில் சந்தித்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு எந்த வகையில் உதவலாம் என்று ஆராய்ந்தோம்.
அங்கு சத்திர சிகிச்சைகளுக்காக தொடர்ச்சியாக தண்ணீர் வசதி தேவைப்படுவதாக அறிந்து தண்ணீர் பெளஸர் வழங்கியிருந்தோம்.
அறக்கட்டளையொன்றை உருவாக்கி அதனூடாக அரசின் மேற்பார்வையின் கீழ் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகள் இடம்பெயர்ந்த மக்களுக்கு போய்ச் சேர வேண்டுமென்பதில் முனைப்புக் காட்டுகின்றோம்.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கும் நீங்கள் உதவியிருக்கிaர்கள் அல்லவா?
ஆமாம், 83 ஆம் ஆண்டில் லண்டனுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு வீட்டு வசதிகள் பெற்றுக் கொடுப்பதில், லண்டனில் தமிழ் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் அக்கறையோடு செயற்பட்டிரு க்கிறேன். மகளிர் இயக்கம், லண்டன் இலக்கிய வட்டம் என்பனவற்றை அங்கு உருவாக்கியிருக்கிறேன்.thinakaran
0 commentaires :
Post a Comment