காலங்காலமாக எமது கிழக்கு மண்ணிலே ஏற்படுத்தப்பட்டு வந்த இன நல்லுறவு பலம் பெறுவதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது. இனங்களுக்கிடையேயான ஐக்கியம் ஏற்படுவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் பலம் சேர்க்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் சாந்தமருதில் இடம்பெற்ற நல்லுறவுக் கரம் என்கின்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதல்வர், இன்று இலங்கையிலே பல்வேறு பத்திரிகைகள் வெளிவருகிறது. அவையெல்லாம் தினசரி நிகழ்வுகளையும் ஏனைய பல முக்கிய செய்திகள் பல ஆக்கபூர்வமான நிகழ்வுகளைத் தாங்கி வருகின்றது. ஆனால் இப் பரதேசத்திலிருந்து வெளிவருகின்ற நல்லுறவுப் பத்திரிகையானது இனங்களுக்கடையேயான ஓற்றுமையினை ஏற்படுத்துகின்ற வகையிலே செய்திகள் மற்றும் ஏனைய விடயங்களைத் தாங்கி வருகின்றது. இதன் பெயரிலே அதன் இலக்கைக் காட்டி நிற்கின்றது. இதேபோல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலக்கியங்கள் , பத்திரிகைகள் பங்களிப்புச் செய்தாலும் மக்களாகிய எமது மனங்களில் நல்ல மாற்றம் வரும் போதுதான் அதனை வெளிப்படையாக அடைய முடியும். அதே போல் இன்று நாம் அனைவருமே ஒற்றுமையாக இருப்பதன் ஊடாகவேதான் எங்களது பிரதேசங்களை பாகு பாடின்றி அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில் நடைபெற இருக்கின்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையினை நடாத்தி அதில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் இங்கு கௌரவிக்கப்படுகினறார்கள். அதில் முஸ்லிம் மற்றும் தமிழ் மாணவாகள் தோற்றி பரிசில் பெறுகின்றார்கள். எதிர் வருகின்ற காலங்களில் சிங்கள மாணவர்களும் பங்குபற்ற வேண்டும் எனவும் கேட்;டுக் கொண்டார். இன நல்லுறவு என்பது மாணவர்கள் மத்தியில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மேலும் குறிப்பிடுகையில், எதிர் வருகின்ற காலங்களில் நாம் அனைவருமே ஒற்றுமையோடும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த அபிவிருத்தியினை வேண்டி நிற்க வேணடும். அதற்காக வேண்டி அனைவருமே தமிழ் சமூகமாக இருந்தாலும் சரி முஸ்லிம் சமூகமாகா இருந்தாலும் சரி சிங்கள சமூகமாகா இருந்தாலும் சரி ஒற்றுமையின் பலத்தின் ஊடாக எமது பிரதேசங்களை அபிவிருத்திப் பாதையில் பயனிக்க வழி கோல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.நு;லுறவுப் பத்திரிகையின் ஆலோசகர் நவாஸ் சௌபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் ஏ. எல். ஏம். அதாவுல்லா, கிழக்கு மாகாண போக்குவரத்து அமச்சர் எம். ஏஸ். உதுமாலெவ்வே, மாகாண சபை உறுப்பினர்களான துல்ஹர் நயீம், அப்துல் ரஸாக், அமீன் மற்றும் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் , பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment