நீண்ட காலத்துக்குப் பின் வட மாகா ணத்தில் இரண்டு தேர்தல்கள் நடந் திருக்கின்றன. யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலும் வவுனியா நகர சபைத் தேர்தலுமே அவை.
இத்தேர்தல்கள் நடந்து பல நாட்களின் பின் அவற்றைப் பற்றி இப்போது குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி பலரிடம் எழலாம். தேர்தல் முடிவுகள் பற்றித் தவ றான சில கருத்துகள் முன்வைக்கப்படு வதே இதற்குக் காரணம்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளையிட்டு மக் கள் விரக்தி அடைந்த நிலையில் இருப்ப தாலேயே யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவாக இருந்தது எனக் கூறுவதற்குச் சிலர் முற்படுகின்றனர். இது சரியான கருத்தல்ல.
இதேபோல, பெரும் பாலான தமிழ் மக்களின் ஆதரவு தங்களு க்கு இருப்பதையே தேர்தல் முடிவுகள் காட் டுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி னர் கூறுவதும் சரியான கருத்தல்ல.
யாழ்ப்பாணம் மாநகர சபைப் பிரதேசத் தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அப்பிரதேசத் தில் இப்போது இல்லை. பெரும்பாலா னோர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்ட னர். வெளிப் பிரதேசங்களில் வாழ்பவர்களி லும் கணிசமானோர் நடைமுறைச் சிரமங் கள் காரணமாக வாக்களிக்கவில்லை.
தமிழ் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் தங் களுக்கு இருப்பதாகத் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பினர் கூறுவதைப் போன்ற கற் பனை வேறெதுவும் இருக்க முடியாது.
தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகி க்கும் பிரதான கட்சிகள் அறுபது வருட கால மாக வடமாகாணத்தில் தமிழ் மக்கள் மத் தியில் மிகக் கூடுதலான ஆதரவைப் பெற் றிருந்தன என்பதை யாரும் மறுக்க முடி யாது.
இவ்விரு தேர்தல்களிலும் நிலைமை மாறிவிட்டது. கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகளிலும் பார்க்க மிகவும் கூடுதலானவை.
அளிக்கப் பட்ட மொத்த வாக்குகளில் அரைவாசிக்கு மிகவும் குறைவாகவே கூட்டமைப்பு பெற் றது. கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் ஆதரவை இழந்துவிட்டது என்பதே இதன் அர்த்தம்.
கூட்டமைப்புத் தலைவர்களின் அண்மைக் கால செயற்பாடுகளே இவ்வளவுக்குச் செல் வாக்கு வீழ்ச்சி அடைந்ததற்குக் காரணம். புலிகளின் பதிலிகளாக இவர்கள் செயற்ப ட்டதன் காரணமாகத் தமிழ் மக்கள் தாங்க முடியாத இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது.
தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கும் வேறு துன்பங்களுக்கும் புலிகள் எவ்வளவுக்குப் பொறுப்பாளி களோ அதே அளவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் பொறுப்பா ளிகள். புலிகள் மக்களால் தெரிவு செய்யப் படாதவர்கள்.
அவர்களை மக்களின் பிரதி நிதிகளாகக் கருத முடியாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்புத் தலை வர்கள் தங்களைத் தெரிவு செய்த மக்களை விமோசனப் பாதையில் இட்டுச் செல்லும் கடப்பாடு உடையவர்கள். ஆனால் அக்கட ப்பாட்டை இவர்கள் உதாசீனம் செய்து விட்டனர்.
தாங்கள் பிரதிநிதித்துவப்படுத் தும் மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் சென்ற தலைமை என்ற நிலையிலேயே இவர்கள் இன்று உள்ளனர். இதனாலேயே தமிழ் மக்கள் இவர்களை நிராகரிக்கின்ற னர்.
இப்போதும் கூட்டமைப்பினர் ஆக்கபூர்வ மாகச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. அரசி யல் தீர்வுக்கான திட்டம் எதுவும் இதுவரை இவர்களிடம் இல்லை. அரசியல் தீர்வு பற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்கான முய ற்சியையும் இவர்கள் மேற்கொள்ளவி ல்லை.
இனப் பிரச்சினை பற்றி வெளி நாடுகளுடனும் வெளிநாட்டு நிறுவனங்க ளுடனும் பேசுவதிலேயே கவனம் செலுத் துகின்றார்களேயொழிய அரசாங்கத்துடன் பேசுவதில் ஆர்வமற்றவர்களாகவே உள்ள னர். பதவியிலுள்ள அரசாங்கத்துடன் பேசா மல் அரசியல் தீர்வு சாத்தியமில்லை.
வெளி நாடுகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று இவர்கள் நினைப்பது பெரும்பாலான தமிழ் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் தங்களுக்கு இருப்பதாகக் கூறுவதைப் போன்ற கற்பனையாகும்.thinakaran
0 commentaires :
Post a Comment