By editor •
August 19, 2009
-->
கிழக்கு மாகாணத்திலே விவசாயத்தில் பாரிய அபிவிருத்தி நடைபெற்றுக்கொண்டு வருகின்ற இத்தருணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே நீர்ப்பாசனத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். கடந்த யுத்த காலங்களில் பாதிக்கப்பட்டிருந்த நீர்ப்பாசனக்குளங்கள், விவசாய வீதிகள் என்பன தற்போது செப்பனிடப்பட்டுவருகின்றது. அதில் ஓர் அங்கமாக செங்கலடி நீர்ப்பாசனத்திணைக்களத்தில் இன்று(17.08.2009) கிரான் கோஸ்வேயினை செப்பனிடுவதற்கான கொங்கிரீட் குளாய்கள் விவசாயப்பெருமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.எஸ் உதுமாலெஃப்பை அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மகாணசபையின் உருவாக்கத்தின் பின் கிழக்கிலே அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே விவசாய அபிவிருத்தியில் பாரிய புரட்சி ஏற்படுத்தப்பட்டிருப்பதனை கடந்த ஆண்டில் இருந்து நாம் கண்கூடாக அறிந்து கொள்ளலாம். இந்நிகழ்விலே வழங்கப்படுகின்ற இக்கொங்கிரீட் குளாய்களை சரியாக பதித்து வேலைகளை ஆரம்பிற்கின்ற போது இதனூடாக சுமார் 30ஆயிரம் ஏக்கர் காணிகளில் விவசாய செய்கையை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். இதனால் எமது பிரதேச விவசாய அபிவிருத்தி எமது மக்களுக்கு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதே போல் எதிர்வருகின்ற காலங்களில் கிரான் புல் அணைக்கட்டு புனருத்தாரனம் செய்ய நாம் திட்டமிட்டிருக்கின்றோம். இதனை வெற்றிகராமாக அமைப்பதனூடாக பெரும்பாலான விவசாயக்காணிகளில் விவசாயச் செய்கையினை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். எதிர்வருகின்ற காலங்களில் எம மாவட்த்தை விவசாயத்தில் ஒரு தன்னிறைவான மாவட்டமாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மாற்றிக்காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ் உதுமாலெஃப்பை, அமைச்சின் செயலாளர் செரீஃப், கிழக்கு மாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர், நீர்ப்பாசனத்துறை பொறியியலாளர் மாகாண சபை உறுப்பினர்கள் விவசாயப்பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment