8/28/2009

வெனிசூலாவுக்கெதிராக கொலம்பியா அமெரிக்க ஒன்றியத்தில் முறைப்பாடு



கொலம்பியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெனிசூலா தலையிடுவதாகக் குற்றம் சாட்டி யுள்ள கொலம்பிய அரசாங்கம் இது குறித்து அமெரிக்க நாடுகளின் ஒன்றியத்திடம் முறையிட் டுள்ளது. கொலம்பியாவின் இராணுவத் தளங் களை அமெரிக்க இராணுவம் பாவிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டதால் வெனிசூலா கடும் கோபமடைந்துள்ளது.
சென்ற புதன்கிழமை வெனி சூலா ஜனாதிபதி சாவெஸ் தொலைக்காட்சியில் உரையாற்றும் போது கொலம்பிய, ஒரு போதை வஸ்து நாடு எனக் குறிப்பிட்டார். வெனிசூலா வில் இயங்கும் கொலம்பியக் கம்பனிகளின் செயற் பாடுகளை உளவு பார்த்து அறிக்கை சமர்ப்பிக் கும்படி சாவெஸ் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

வெனிசூலாவின் நலன்களுக் கெதிராக இயங்கும் அனைத்துக் கொலம்பியர்க ளையும் நாடு கடத்தவும் ஜனாதிபதி சாவெஸ் உத்தரவிட்டார். இதனையடுத்தே கொலம்பியா இக் குற்றச்சாட்டைச் சுமத்தியது. அமெரிக்க நாடுகள் ஒன்றியத்துக்கான கொலம்பியாவின் தூதர் லூயிஸ் ஹொய்ஸ் வெனிசூலாவின் நடவடிக் கைகளைக் கண்டித்தார்.
தென்னமெரிக்காவில் அமெரிக்காவின் செல் வாக்கு வளர்வதைத் தடுக்க கியூபாவும், வெனி சூலாவும் இணைந்து செயற்படுகின்றன. கொலம் பியாவின் இராணுவத் தளங்களில் இருந்து அமெரிக்கப் படைகள் தாக்குதல்களை நடத்த அனுமதியில்லை. போதைவஸ்து ஆயுதக் கடத்தல் களைக் கண்காணித்து தகவல்களை வழங்குவதே அமெரிக்காவின் பணி. இவை பற்றி வெனி சூலா அச்சம் கொள்ளத் தேவையில்லையென லூயிஸ் ஹொய்ஸ் சொன்னார்.
அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை தென்னமெரிக் காவுக்குள் அனுமதிப்பதால் ஏற்படவுள்ள பாரிய கெடுதல்களையும் அபாயங்களையும் கொலம்பிய மக்களுக்குத் தெரியப்படுத்த தொடர்ந்தும் முயற் சிக்கவுள்ளதாக சாவெஸ் சொன்னார்.
இராணுவ, பொருளாதார நலன்களுக்காகவே அமெரிக்கா, கொலம்பியாவுக்குள் நுழைந்துள்ளதென்றும் சாவெஸ் கூறினார். இன்று வெள்ளிக்கிழமை ஆர்ஜன்டீனாவில் நடைபெறும் தென்னமெரிக்க நாடுகளின் மாநாட்டில் கொலம்பியாவுக்கெதி ராக பல நாடுகளை அணித்திரட்டவுள்ளதாகவும் சாவெஸ் குறிப்பிட்டார்.


0 commentaires :

Post a Comment