சமூக அரசியல் அல்லது சமூகத்திற்காகப் பணியாற்றுகின்றவர்கள் ஊடகவியலாளர்களாக இருந்தால் என்ன, அரசியல்வாதிகளாக இருந்தால் என்ன அல்லது வெவ்வேறு சமூக செயற்பாட்டாளர்களாக இருந்தால் என்ன இவர்கள் அனைவருக்கும் ஒரு தொலைநோக்கு இருக்கவேண்டும். மக்களை வழிநடத்துகின்ற ஆயுதம் எமது கையில் வந்துவிட்டால், அப்போதுதான் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். தனிநபராக இருக்கிறதைவிட எங்களுடைய ஆரூடங்கள், எதிர்வு கூறல்கள் இன்றைக்குச் சரிவந்ததற்குக் காரணம், நாங்கள் தொலைவில் பார்த்ததுதான்”
மனோரஞ்சன்
அதே தெளிவு, தீர்க்கதரிசனத்துடன் பேசுகிறார் எஸ்.மனோரஞ்சன். ஆறேழு வருடங்களுக்கு முன்பு இலங்கை ஊடகத்துறையில் ஒரு கலக்குக் கலக்கியவர். ஓர் ஊடகவியலாளராக, அரசியல், சமூக ஆய்வாளராகத் தீர்க்கதரிசனத்துடன் விமர்சனங்களைப் பரபரப்பாய் முன்வைத்ததால் குடும்பத்துடன் அரசியல் அகதியாய், கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். இப்போது மீண்டும் மண்ணின் உண்மை நிலவரத்தை நேரில் அவதானித்துக் கரம் கொடுப்பதற்காக புலம்பெயர் தமிழர் குழுவினருடன் இணைந்து தாயகம் வந்திருக்கிறார்.
2009 மே, 17 அந்த நந்திக்கடல் அந்திமத்திற்குப் பின்னர், சுமார் மூன்று இலட்சம் பேர் இடம்பெயர்ந்து நிவாரண இடைநிலை கிராமங்களில் வாழ்வுக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்களின் நிலவரம் தொடர்பில் உள்ளூரிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் வெவ்வேறு விதமான தகவல்கள் உலவி வருகின்றன. சிலவேளைகளில் விதாணையார் காகத்தை வாந்தி எடுத்தமாதிரியான கதைகளும் களைகட்டிக் கிலிகொள்ளச்செய்கின்றன.
எனவே, இதன் உண்மை நிலையை அறியவும் இடம்பெயர்ந்தவர்களின் மீள் வாழ்வாதாரத்திற்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுக்கவும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் நோயல் நடேசன் தலைமையிலான குழுவினர் இரண்டாவது தடவையாக இலங்கை வந்துள்ளனர்.
இறுதிக்கட்டப் போருக்குப் பின்னர் முதற் தடவையாக வந்துள்ள அவர்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தது மாத்திரமல்லாமல், அவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வலையமைப்பை ஏற்படுத்துவதுபற்றியும் அரச உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இது பற்றி விளக்குவதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கலந்துரையாடலை நடத்தியபோது ‘தினகரனின்’ பிரத்தியேகக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.
“இன்றைய நிலையில், தமிழ் மக்களின் அரசியல் கட்சிகள் அடுத்ததாக என்ன செய்யவேண்டும்? இதில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?” மனோரஞ்சனிடம் முன்வைத்த கேள்வி.
“தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தமட்டில், 1948 ற்குப் பிறகு பிளிரிஞிதிழி ஜிதிஞிஹிவீ என்ற ஒன்றை ஸ்தாபித்து, அதற்குத் தமிழ் அரசுக் கட்சி என்று பெயரிட்டார்கள். அதாவது சிங்கள தேசம் வருவதற்கு முன்னமே நாங்கள் தமிழ் அரசை நிறுவப்போகிறோம் என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது. மலையகம் வாழ் தமிழ் மக்களுடைய குடியுரிமையை அரசாங்கம் பறித்துவிட்டதென்று, நாங்கள் வேறு நாடாகப் போகிறோம் என்று சொல்லி, எந்த விதையை விதைக்கக் கூடாதோ அதை நாங்கள் விதைத்துவிட்டோம்.
அதற்குப் பிறகு நாங்கள் விதைத்த விதையே வளர்ந்து மரமாகி, முள்ளாகி, விருட்சமாகி திரும்பி எங்களையே அழித்து, மலையக மக்களுக்கு வாக்குரிமை பறித்த நிலையிலும் பார்க்க கீழ் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டிருக்கின்றது. வாக்குரிமை பறிக்கப்பட்ட மலையக மக்கள் இன்று வாக்குரிமை உள்ளவர்களாகவும் நாட்டின் அரசாங்களைத் தீர்மானிக்கின்ற சக்திகளாகவும் வந்திருக்கின்ற நிலையில், இவ்வளவு படிப்பறிவுள்ள சமூகம் அதைவிட கீழ்நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே, இன்றைய எமது தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியமான பணி என்னவென்றால், திருப்பித்திருப்பி இந்தக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற மாதியாக அல்லாமல், தமிழ்த் தேசியம் தமிழ்க் கட்சிகள் கூடிக் கதைத்தால் போதுமானது என்று குருடன் யானையைத் தடவுகிறதைப்போல் இல்லாமல், வெளியில் வரவேண்டும். இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் ஒரு சிறுபான்மையினம். ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழ்வது எப்படி என்று ஒரு பரந்த சிந்தனையில் பார்க்க வேண்டும். இது எமது பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுத் தலைவணங்கிப் போகச் சொல்வது அல்ல.
இராஜரட்ணம் சிவநாதன்
ஒரு பரந்த நோக்கில் பார்த்து தேசிய ரீதியாக செயற்படவேண்டும். இலங்கையின் தேசியத்திற்குள் எங்களின் பங்களிப்பு என்ன? தமிழ் மக்களுக்கு மட்டும் என்றில்லாமல் இந்தத் தேசத்தினுடைய பொருளாதாரத்திற்கு என்ன செய்யலாம்? இப்படி எவ்வளவோ தேசிய பிரச்சினைகள் உள்ளன. தமிழ் ஊடகங்களை எடுத்துப்பார்த்தால், திருப்பித் திருப்பி முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரைக்கும் தமிழ்ப் பிரச்சினைதான். வேறு பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்த காலமே மறந்துபோச்சு. ஆகவே, ஒட்டுமொத்த இலங்கை என்கிற அடிப்படையில், தமிழ் மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குத் தனியே தமிழ்க் கட்சிகளுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்தி பலனில்லை.
தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்ந்தபோது துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், வட-கிழக்குத் தமிழ் அரசியல் காரணமாகவே பாதிக்கப்பட்ட மலையக மக்களின் அரசியல் கட்சிகளுடன் நாங்கள் பேசவேண்டும். தவிரவும், இந்த நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுடனும் நாம் பேச வேண்டியிருக்கிறது. மேலும், புதிதாகத் தோன்றியிருக்கிற சிங்கள தேசியவாதக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள், ஜே.வி.பீ. மற்றும் மதத் தலைவர்கள் எனப் பலதரப்பட்டோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு எங்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எமது பிரச்சினைகளை அவர்கள் உண்மையாகவே உணரச் செய்ய வேண்டும்.
எங்களுடைய பக்கத்தைப் போலவே மறு பக்கமும் அதே குருட்டுத்தனமாக ஓடியதால்தான், 50 வருட சுதந்திரத்திற்குப் பின்பு இன்றைக்குத்தான் சுதந்திரத்தை அடைந்திருக்கின்றோம் என்று சொல்லும் அளவுக்கு அவர்களும் வந்து நிற்கிறார்கள். ஆகவே, நாங்கள் பல தரப்பினருடனும் கைகோர்க்க வேண்டியுள்ளது. இந்த நாட்டைவிட்டோடிய பெரும்பான்மையான புலம்பெயர் தமிழர்கள் இதே உணர்ச்சி அலைக்கு குருட்டுத்தனமாக ஆதரவு கொடுத்தார்கள்.
அதில் ஒரு சாரார் இலங்கையில் கூறிய அதே ஆருடத்தை வெளிநாட்டிலும் சொல்லி இருக்கிறோம். இன்றும் அந்த அக்கறையினால்தான் வந்துள்ளோம். ஆகவே எங்களுடைய பங்களிப்பு புதுவிதமானதாக இருக்கும். பழைய கண்ணாடியில் பார்க்காமல் கண்களைத் திறந்து அக விமர்சனம், புற விமர்சனம் போன்றவற்றைப் பயப்படாமல் திறந்த மனதுடன் முன்வைக்கின்ற பக்குவத்திற்கு அரசியல் கட்சிகள், அரசியல் சமூகம், ஊடகவியலாளர்கள் பங்குபற்ற வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். இது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிற அரசியல் கட்சிகளின் பிரதான பணி என ?!} நினைக்கின்றேன்”
டாக்டர் இராஜசிங்கம் நரேந்திரன்
“சிறுபான்மை இனம், பெரும்பான்மை இனத்துக்கு இசைந்துபோய் உரிமைகளையும், சலுகைகளையும் தந்திரோபாயமாகப் பெற வேண்டும் என்ற கருத்தியல் சரியானதா?”
“சிறுபான்மை இனம், பெரும்பான்மை இனத்துக்குத் தலை சொறிய வேண்டும் என்பதல்ல. இன்று பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தில் நம்பிக்கை இழந்துவிட்டது. அதாவது, சிறுபான்மை இனம் என்பது ஒரு தேசிய விரோத, சிங்கள மக்களுக்கு விரோதமான, நாட்டைப் பிரிக்கின்ற அரசியல் கட்சி என்றுதான் உறுதிப்படுத்தப்பட்டிருக்கு.
அதனை மாற்றியமைத்து சிங்கள மக்களைவிட சிறுபான்மை மக்கள் இந்தத் தேசத்தின் மீது அக்கறை உடைய ஒன்றாக வாழ விரும்புகின்ற மக்கள் சமுகம் என்று நிரூபிக்கவேண்டிய கடப்பாடு எங்களுக்கு வந்துவிட்டது. இதுவிடயத்தில் எமக்குக் இரண்டு விதமான பொறுப்புகள் உள்ளன. ஒன்று, எமது சமூகத்தின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது. இரண்டாவது, எமது ஜனநாயக உரிமைகள் நியாயமானவை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு விதத்தில் சிங்கள மக்களின் புதிய கதவுகளைத் திறப்பதற்கு நாங்கள் தான் முயற்சிக்க வேண்டும். மூடப்பட்ட கதவுகளைத் திறப்பதற்கான முயற்சிக்கு வேண்டிய திறவுகோலும் எங்களுக்குள்ளேதான் இருக்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் ஒட்டுமொத்தமான தமிழ் விரோதப்போக்கு இருக்கின்றது என்று கூற முடியாது. இதே சிங்கள மக்கள்தான் ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்தபோது சமாதானத்திற்காக வாக்களித்தார்கள். முழு சிங்கள மக்களும் யாழ்ப்பாணம் சென்றார்கள். எனவே, சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிரியாகப் பார்க்கும் நிலை நீங்கவேண்டும்” என்றார் மனோரஞ்சன்.
சவூதி அரேபியாவிலிருந்து வந்த டாக்டர் நரேந்திரன், அகதிகளின் நிலையை நேரில் அறிந்தது மாத்திரமல்லாமல் ஒரு காலத்தில் அகதி வாழ்க்கையை அனுபவித்தும் இருக்கிறார். தற்போது நிவாரண இடைநிலைக் கிராமங்களின் நிலைமை திருப்திகரமாக இருக்கிறது என்றார் அவர்.
“வலயம் நான்கில் நாங்கள் நேரடியாகப் பார்த்த ஒரு நிகழ்வு. மாலை 5 மணி. ஓர் இளம் குடும்பம் குளித்து, முழுகி அலங்கரித்துக் கொண்டு நடைப்பயிற்சிக்குப் போகின்றது. இது எதனைக் காட்டுகிறது. பிள்ளைகள் சிரிக்கின்றார்கள். ஒரு நரகத்திலிருந்து அந்த மக்கள் சொர்க்கத்திற்கு வந்துவிட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், பாதுகாப்பான ஓர் இடத்துக்கு வந்துள்ளார்கள். பிரச்சினைகள் இருந்தாலும் உயிருக்குப் பயம் இல்லாமல் இருக்கின்றார்கள். அகதி முகாம் வீடாகமாறாது, முடியாது.
டாக்டர் நொயல் நடேசன்
அந்த வகையில் அரசாங்கம் செய்யக்கூடியதைச் செய்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், அரசாங்கம் அமைத்துள்ள வீடுகளுக்கும் ஐ.நா. நிறுவனம் நிர்மாணித்த வீடுகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இங்கு நிலவரத்தைப் புரியாமல், இத்தாலிக்கு வடிவமைக்கப்பட்ட கூடாரங்களைக் கொண்டுவந்து செட்டிக்குளத்தில் பொருத்தியிருக்கிறார்கள். நீர் ஊறாத பகுதியில் மலசல கூடத்தை அமைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஐ.நா.பெரிய பிழைகளைச் செய்திருக்கின்றது.
இந்த மக்களின் நிலவரங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்கள் அதனை இன்னமும் செய்யாது இருக்கின்றன. நந்திக்கடலில் கடைசியாக என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. இதனை ஆராய்ந்து அறிந்து எழுதி ஆவணப்படுத்த வேண்டும்”
முகாம்களில் இராணுவ நிர்வாகத்துக்குப் பதில். சிவில் நிர்வாகம் இருந்தால், சிறப்பாக இருக்கும் என்கிறார்களே, இதைபற்றி என்ன அவதானித்தீர்கள்?”
“இராணுவம் என்பது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு. சிவில் நிர்வாகத்தில் பல்வேறு விடயங்கள் நடக்கலாம். புதிய கட்டுமானங்களை இராணுவம் தான் செய்கின்றது. இருசாராரும் சேர்ந்து பணியாற்றலாம். ஓர் இராணுவ அதிகாரி பிரி. லக்ஷ்மன் பெரேரா. அவருக்கு உருவத்தைப் போல் உள்ளமும் பெரிது”
புலம்பெயர் தமிழர் குழுவுக்குத் தலைமை தாங்கி வந்தவர் டாக்டர் நொயில் நடேசன். அவரது ஏற்பாட்டில்தான் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“தமிழ் அரசியல் இந்தச் சீரழிவுக்கு வருவதற்கும், புலிகள் இயக்கத்தின் இந்த நிலைக்கும் புலம் பெயர் தமிழர்கள்தான் காரணம் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் ஏற்றுக் கொள்கிaர்களா?”
“இதுபற்றி ஏற்கனவே எழுதியும் இருக்கிறேன். தமிழ் அரசியல்வாதிகள், பழைய இலங்கை அரசுகள், புலிகள், இந்தியா, புலம்பெயர் தமிழர்கள் முக்கியமான காரணம். தமிழ்ப் பத்திரிகைகள் எதிர்மறையான கருத்துகளையே விதைத்து வந்தன. தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக வாழவேண்டும். பிரிக்க முடியாது. இந்தப் புரிந்துணர்வை ஏற்படுத்துவது ஊடகங்களின் கடமை. புலம்பெயர் தமிழர் மத்தியில் இந்த நிலையை விளக்குவதற்கு நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு வர்த்தக, பொருளாதார செயற்பாடுகளிலும் புலம்பெயர் தமிழர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்”
இராஜரட்ணம் சிவநாதன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்துள்ளார். மாணவ சமூகத்துக்குப் பல பணிகளைச் செய்து வரும் அவர் நிவாரண கிராமங்களின் பிள்ளைகளின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்குத் தமது ஒத்துழைப்பை நல்குவது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.
“தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை இங்குள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். நாம் உண்மையை அறியவே வந்துள்ளோம். வெளிநாட்டில் பலவிதமான செய்திகள் பரப்பப்படுகின்றன. பொய்களை நம்புவதற்கு 50% மக்கள் இருக்கிறார்கள். எமக்கு உண்மையை அறிந்து செயற்படத் தெரியும். ஒற்றுமையாக செயற்படாவிட்டால் இன்னும் 50 வருடம் பின்தள்ளப்பட்டுவிடுவோம். எனவே அகதிகளின் நிலை மாறுவதற்கு முன்னர் மீளக்கட்டியெழுப்பி ஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டும்.
ஜனாதிபதி இதனைச் செய்வார் என்ற நம்பிக்கை எமக்குண்டு”
இலண்டனிலிருந்து வந்த எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
0 commentaires :
Post a Comment