8/24/2009

தோட்டத் தொழிலாளரின் ஜீவனோபாயப் பிரச்சினை




மலையகப் பெருந்தோட்டத் தொழி லாளர்களின் சம்பள உயர்வு தொடர் பான சர்ச்சை தற்போது மீண்டும் உருவெடுத்திருக்கிறது.
தோட்டத் தொழிலாளர்களின் நாள்சம் பளத்தை உயர்த்துவது உட்பட ஏனைய பல்வேறு விடயங்கள் அடங்கிய கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதா லேயே மீண்டும் சர்ச்சைகள் தோன்றியு ள்ளன.
கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக முதலாளிமார் சம்மேள னத்துக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கம் எதுவும் ஏற்படாத நிலையில் ஒத்திவைக் கப்பட்டுள்ள இந்நிலையில், புதிய ஒப்பந்த மானது நன்மைகளை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் இன்று உள்ளனர்.
நியாயமானதொரு சம்பள அதிகரிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கை தோட்டத் தொழிலாளர் மத்தியில் இல்லை. நாள் சம்பளத்தை ஐநூறு ரூபாவாக அதிகரிப்ப தென்ற யோசனையை முதலாளிமார் சம் மேளனம் நிராகரித்ததையடுத்து தொழிலா ளர்கள் இப்போது நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர்.
அதேசமயம் முதலாளிமார் சம்மேள னத்தின் நிராகரிப்பையடுத்து மலையக தொழிற்சங்கங்களும் ஏமாற்றமடைந்துள் ளன. தொழிற்சங்கங்கள் அடுத்த கட்ட நடிவடிக்கைக்குத் தயாராவதாகவும் தகவ ல்கள் வெளிவருகின்றன. இவ்விடயம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் நாளை செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளரின் வாழ் க்கை நிலைமை திருப்தியளிக்கக் கூடிய நிலைமையில் இல்லையென்பதை அனை வரும் அறிவர். இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அவர்களின் சம்பளம் இல் லாததன் காரணமாக வாழ்க்கையில் துன்ப ப்படுகின்றனர். அவ்வப்போது வழங்கப் படுகின்ற சம்பள உயர்வுகள் குடும்பச் சுமையைக் குறைப்பதற்குப் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் ஜீவனோபாயம் மோச மான நிலைமையிலேயே இருந்து வருகிறது.
நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக முதலாளிமார் சம்மேள னத்துடன் தோட்டத் தொழிற்சங்கங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகள் எதிர்பார் க்கும் பலனைத் தந்து விடுவதில்லை. முரண்பாடுகளின் மத்தியில் கூட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதே வழ மையாகிவிட்டது.
இன்றைய நிலைமையிலும் கூட்டு ஒப்பந் தத்தைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற் போது கிடைக்கின்ற அடிப்படைச் சம்பளம் 195 ரூபாவாகும். மேலதிகமாகக் கிடைக்கும் கொடுப்பனவான நூறு ரூபாவுடன் நாளொ ன்றுக்கு 295 ரூபாவை தோட்டத் தொழி லாளர்கள் சம்பளமாகப் பெறுகின்றனர்.
இச்சம்பளமானது குடும்பத்தைக் கொண்டு நடத்துவதற்குப் போதுமானதல்ல என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தினச் சம்பளத்தை ஐநூறு ரூபாவாகவாவது அதி கரிக்க வேண்டுமென்பதே தொழிற்சங்கங் களின் கோரிக்கையாகும். ஆனால் ஐநூறு ரூபா சம்பளக் கோரிக்கையை முதலாளி மார் சம்மேளனம் நிராகரித்துவிட்டது.
அதேசமயம் நாள் சம்பளத்தை முப்பத்தைந்து ரூபாவினால் அதிகரிப்பதே முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானமாக உள்ளது. முப்பத்தைந்து ரூபாவுக்கு மேல் சம்பள உயர்வு வழங்க முடியாதென்பதில் முதலாளிமார் சம்மேளனம் விடாப்பிடியாக உள்ளதாகவும் தெரிகிறது.
இச்சம்பள உயர்வானது தோட்டத் தொழி லாளர்களின் கஷ்டங்களைத் தீர்த்து வைக்கப் போவதில்லை. அவர்களது வறுமை நிலை மையைப் போக்கும் வகையிலான நியாய மான சம்பள உயர்வொன்றே இன்றைய சூழ்நிலையில் அவசியம்.
தொழிலாளர்களுக்கு நியாயமான தீர் வொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் தோட் டத் தொழிற்சங்கங்கள் பொது இணக்கப் பாடொன்றுக்கு வருவதும் முதலில் முக்கியம்.


0 commentaires :

Post a Comment