8/27/2009

இலங்கை கொலைகள் தொடர்பாக வெளியாயுள்ள வீடியோ குறித்த சர்ச்சை

இலங்கையின் வடக்கே போர் நடந்த காலத்தில், ஜனவரி மாதத்தில், இலங்கைப் படையினர் போல் தோன்றும் சிலர், நிராயுதபாணிகள் சிலரை, கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட மற்றும் நிர்வாண நிலையில், குறைந்த தூரத்திலிருந்து தலைக்குப் பின்னாலிருந்து அவர்களை சுட்டுக்கொல்வது போல் தோன்றும் வீடியோ காட்சிகளை ஜெர்மனியிலிருந்து இயங்கும் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து வெளிவந்து ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் ஊடகவியலாளர்கள் உறுப்பினர்களாகக் கருதப்படும் இந்த அமைப்பு அனுப்பிய இந்த வீடியோ குறித்து, அந்த அமைப்பிடம் இருந்து மேலும் கூடுதல் தகவல்களைப் பெற முயன்றும், அவர்கள் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக பேச முடியாது என்று மறுத்துவிட்டனர்.
இந்த வீடியோ காட்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை வெளியுறவுச் செயலர் டாக்டர் பாலித கோஹன இது முற்றிலும் புனையப்பட்ட ஒரு வீடியோ என்றும் ஜனநாயகத்துக்கான செய்தியாளர்கள் என்கிற அமைப்பு குறித்து தாங்கள் இதற்கு முன்னர் கேள்விப்பட்டது இல்லை என்று கூறுகிறார். bbc

0 commentaires :

Post a Comment