8/14/2009

திருமலையில் சைக்கிளோட்ட களியாட்ட விழா செப்டம்பரில்

தேசிய மெளன்டன் சைக்கிள் சங்கம் கிழக்கு நவவோதய திட்டத்தின் கீழ் சைக்கிளோட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றை எதிர்வரும் செப் டம்பர் 12ம் திகதி திருகோணமலையில் நடத்துகிறது.
இக்களியாட்ட நிகழ்வு 25 மாவட்டங்களிலும் நடந்த தீர்மானிக்கப்பட்டுள்ளபோதும் முதல் முறையாக திருகோணமலையில் நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.
தேசத்தைக் கட்டி எழுப்பும் அமைச்சு தேசிய மெளன்டன் சைக்கிள் சங்கத்துடன் இணைந்து திருகோணமலையில் நடத்தும், கி.மீ. 40 சதுர சைக்கிள் ஓட்டப் பந்தயப் போட்டி மற்றும் பல்வேறு சைக்கிள் ஓட்டக்காரர்களினது அங்காடி (CARNIVAL) வைபவம் தொடர்பான பத்திரிகையாளர் மகாநாடு அண்மையில் கொழும்பு ‘சீநோர்’ ஹோட்டலில் நடைபெற்றது. அனுசரணைக்கான காசோலையை இதன்போது, k. ஐ. k. நிறுவன நிறைவேற்று அதிகாரியிடமிருந்து, அமைச்சர் சுசந்த புஞ்சிநிலம பெறுவதனையும் அருகில் அதிகாரிகளையும் காணலாம். (அ) (படம்: வடகொழும்பு குறூப் நிருபர்)
இப்போட்டிக்கு கிழக்கு மாகாண சபை, தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு அனு சரணை வழங்குகிறது.
இச் சைக்கிள் களியாட்ட நிகழ்வு பல்வேறு வகையினருக்கு இடையில் நடைபெறும் என சங்கத்தின் தலைவர் அமல் சூரியகே தெரிவித் தார்.
திருமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதா னத்தில் நடைபெறும் போட்டியில் 40 கிலோ மீட்டர் போட்டியாக நடைபெறும் என்றும் அதில் 10 கிலோ மீட்டர் ஒவ்வொரு குறிப் பிட்ட பிரிவுக்கு இடையில் அதாவது தபால் காரர், விவசாய விற்பனையாளர், மீன் வியாபாரி, குடும்ப போக்குவரத்தில் ஈடுபடு§ வார், பாண் விற்பனை செய்வோர், லொத்தர் விற்பனை செய்வோர், கிராம உத்தி யோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் 19 வயதுக்கு ட்பட்ட மாணவர்களும் இதில் பங்கு பற்றலாம்.
இதேவேளை, முதல் ஆறுபேருக்கு பணப் பரிசும் 10 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப் படவுள்ளன.
தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இங்கு கருத்துத் தெரிவிக்கையில் கிராமப்புறத்தில் உள்ள மக்களில் அதிகளவா னோர் சைக்கிளையே தங்களது போக்குவரத்தி ற்காக பயன்படுத்துகின்றனர்.
அத்துடன் சைக்கிளைப் பயன்படுத்துவதற்காக விசேட வீதியை நிர்மாணிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கிவுள்ளார் என்றார்.


0 commentaires :

Post a Comment