8/28/2009

மட்டு.- கொழும்பு கடுகதி ரயில் சேவையில் மாற்றம்

மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான கடுகதி ரயில் சேவையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாற்றம் கொண்டு வரப்படவிருப்பதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.பயணிகளின் நலன் கருதியே இம்மாற்றத்தைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் தற்போது காலை சேவையில் ஈடுபட்டுள்ள 'உதயதேவி' கடுகதி ரயில் சேவை இரவு ரயில் சேவையாக மாற்றப்படும்.ஆனால் உறங்கல் வசதிகள் இதில் இருக்க மாட்டா. அப்பெட்டிகளுக்குப் பதிலாக இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கை ஆசன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.தற்போது இரவு நேர சேவையில் ஈடுபட்டுள்ள ரயில், காலை நேர சேவையாக, இதற்குப் பதிலாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள இம் மாற்றம் காரணமாக மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான ஆசன முன்பதிவுகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

0 commentaires :

Post a Comment