மட்டக்களப்பில் இளைஞர் சேவை மன்றத்தின் கீழ் இயங்கும் 50 இளைஞர் கழகங்களுக்கு கிழக்கு மாகாண சபை புத்தகங்களை அன்பளிப்பு செய்யவுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் இணைப்புச் செயலாளர் பூ. பிரசாந்தனின் முயற்சியால் இப்புத்தகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் இளைஞர் கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இப் புத்தகங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அண்மைக் காலமாக இளைஞர் கழகங்கள் தங்கள் பகுதிகளில் வாசிகசாலை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. புத்தக அன்பளிப்பானது அவர்களின் இந்த முயற்சிக்குப் பெரும் ஊக்குவிப்பாக இருப்பதாக இளைஞர் சேவை மன்றங்கள் தெரிவிக்கின்றன.
(ஐ - க)
0 commentaires :
Post a Comment