8/19/2009

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் இன்றுடன் பூர்த்தி


மட்டக்களப்பு மாவட்டத்தில் 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களின் மீள் குடியேற்றம் இன்றுடன் பூர்த்தியடைந்துள்ளது.இதன் பிரகாரம் இறுதியாக பலாச்சோலை முகாம் மூடப்பட்டு அங்கு தங்கியிருந்த ஈரலற்குளத்தைச் சேர்ந்த 455 குடும்பங்களைக் கொண்ட 1967 பேர் இன்று 25 பஸ் வண்டிகளில் அதிகாரிகளினால் மீள் குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.2006 ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகவிருந்த பிரதேசங்களை நோக்கி கிழக்கில் மேற் கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 35 ஆயிரத்து 685 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்தி 35 ஆயிரத்தி 585 பேர் உள்ளக இடம் பெயர்விற்குள்ளாகி 91 முகாம்களிலும் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.இக் குடும்பங்களின் மீள் குடியேற்றம் பிரதேச ரீதியாக கட்டம் கட்டமாக 2007 ம் ஆண்டு முற் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டாலும் மிதி வெடி அகற்றும் பணிகள் ப_ர்த்தியடைதலைப் பொறுத்தே இம்மீள் குடியேற்றமும் இடம்பெற்று வந்தது.இன்று சித்தாண்டி மகா வித்தியாலய மைதானத்திற்கு பலாச்சோலை முகாமிலிருந்து அழைத்து வரப்பட்ட இக் குடும்பங்கள் தொடர்பான விபரங்கள் பொலிசாரால் பதிவு செய்யப்பட்ட பின்னர் பஸ் வண்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம்,நோர்வே அகதிகள் பேரவை உட்பட தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் அங்கு சமூகமளித்திருந்தனர்.அதிகாரிகளின் தகவல்களின் படி குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த சுமார் 60 குடும்பங்களே இன்னமும் மீள் குடியேற்றப்படவிருப்பதாகவும் உறவினர்கள் நண்பர்களுடன் தங்கியிருக்கும் இவர்கள் அடுத்த இரு வாரங்களில் அங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்கள்.


0 commentaires :

Post a Comment