கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை தொடர்பான சகல தரவுகளையும் கணனி மயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தகவல்களையும் சேகரிப்பதுடன் சமகால விடயங்களையும் ஒன்றிணைத்து தகவல்களைக் கணனி மயப்படுத்துவதற்கான ஒழுங்குகளை மாகாணக் கல்வித் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பாடசாலைக் கட்டமைப்புக்கள், அதிபர், ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர்களின் விபரங்கள், பரீட்சைப் பெறுபேறுகள், கோட்ட மற்றும் வலயக் கல்வி அலுவலகங்கள் என்பவற்றின் விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கியதாக இந்த தகவல் தளம் தயாரிக்கப்படவுள்ளது.
இந்த வேலைத் திட்டம்தொடர்பாக வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான மூன்று நாள் செயலமர்வு திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா வித்தியாலய கணனி வள நிலையத்தில் நடை பெறுகின்றது
0 commentaires :
Post a Comment