8/19/2009

முதலமைச்சரின் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெரிய போரதீவில் மிகப் பெரிய பொது விளையாட்டு மைதானம்



By editor
August 18, 2009

-->
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலரைமச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படடு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக இன்று பெரிய போரதீவ கிராமத்திலே பல நெடுங்காலமாக இருந்து வந்த குறை தீர்த்து வைக்கப்பட்டிருகின்றது. மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட இருக்கின்ற இவ்விளையாட்டு மைதானத்திற்கு முதற்கட்டமாக பத்து இலட்சம் ரூபா பணம் முதலமைச்சரினால் நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு மைதானம் அமைக்கும் வேலைத் திட்டம் இன்று ( 16.08.09) முதல்வரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய முதல்வர் சந்திரகாந்தன், இப் போரதீவுப் பிரதேசமானது மிகப் பழமை வாய்ந்த ஓர் கிராமமாகும். அப்போது மிகவும் பெரிய பெரிய தனவந்தர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இவ் ஊருக்கு மிகவும் பெருமை சேர்ப்பது இங்கு அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயமாகும். ஆனால் இங்குள்ள மக்கள் தற்போது மிகவும் கஸ்டப்படுகின்றார்கள். இதற்கு எல்லாம் காரணம் கடந்த கால யுத்த சூழலே ஆகும். ஆனால் தற்போது அவ்வாறான நிலமை மறைந்து புதிய ஓர் ஒளிமயமான காலத்திற்கான கதவு திறந்திருக்கின்ற நேரமாகும்.. எனவே இப்பிரதேச மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கூடிய அபிவிருத்தியனை வேண்டி நிற்பவர்களாக மாறவேண்டும். அப்போதுதான் நாம் இழந்த அனைத்து வளங்களையம் மீண்டும் பெற முடியும். இவற்றையெல்லாம் நாம் பெறுவற்கு கடந்த காலங்கள் போல் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு உணர்ச்சி வசப்படுத்தி வேடிக்கை பார்க்க இயலாது. மாறாக எமக்கென்று ஓர் தனித்துவத்தினைப் பேண வேண்டும். இதே போன்று தனித்தவத்தனைப் பேனுகின்ற ஓர் அரசியல் பலத்தினையும் பெறவேண்டும். அதற்காக அனைவருமே சிந்திக்கின்ற தருணத்திலெ நாம் அனைவரும் தள்ளப்பட்டிருக்ககின்றோம். அரசியலில் எமது பலத்தினை நிருபித்து எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரியவர்களாக மாறவேண்டும். இதையெல்லாம் செய்வதற்குhயி ஓர் கட்சி என்றால் ஆத வேறெந்த கட்சியும் இல்லை அதுதான் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகும். எனவே எதிர்வருகின்ற காலங்களில் நாம் அனைவரம் சிந்தித்து செயற்பட வேண்டும் எனக் கேடடுக் கொண்டார்.
இந்நிகழ்விற்கு போரதீவப் பற்று தவிசாளர் ஸ்ரீதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வவரராஜா,போரதீவுபற்று கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய தர்மகர்த்தாக்கள், ஊர் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.


0 commentaires :

Post a Comment