மாங்குளத்திலிருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் ஓட்டுசுட்டான் வரை யான 100 கிலோ மீட்டர் தூர பிரதேசத்துக்கு தேசிய மின்சார கட்டமைப்பினூடாக மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.
இதற்காக 300 மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் - கிளிநொச்சி, மாங்குளம் - முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் - ஓட்டு சுட்டானுக்கிடையில் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா கவும் அறிவிக்கப்படுகிறது.
இந்தப் பணிகள் 2 மாதத்தினுள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
வடக்கிலுள்ள சகல கிராமங்களுக்கும் 2 வருடங்களுக்குள் மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா - கிளிநொச்சி ஊடாக சுன்னாகம் வரை 132 கிலோ வோர்ட் மின் விநியோகத் திட்ட மொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பான் ஜெய்கா நிறுவனம் நிதி உதவி வழங்கியுள்ளது.
வவுனியாவிலிருந்து ஓமந்தையூடாக மாங் குளம் வரை 3 மின்மாற்றி கோபுரங்கள் அமைக் கவும் மாங்குளத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் இணைப்பு வழங்கவும் மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு கூறியது.
இதேவேளை வீதி விளக்குகள் அமைக்கவும் சேதமடைந்த மின் கட்டமைப்புகளை மறுசீர மைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் அறிவிக்கப்படுகிறது.
0 commentaires :
Post a Comment