8/14/2009

வெற்றிலைச் சின்னத்தில் வவுனியாவில் போட்டியிட்ட சிறீ- ரெலோக்கு அதிக வாக்குகள்



வவுனியா நகர சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் கட்சிகளில் சிறீ - ரெலோக்கு 1501 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்ப்பில் அதி கூடிய விருப்பு வாக்குகள் பெற்று வவுனியா நகர சபைக்கு எம். எஸ். எம். பாரி என்பவர் தெரிவாகியுள்ளார். இவர் பெற்ற விருப்பு வாக்குகள் 2270 ஆகும். இரண்டாவதாக லலித் என்பவர் 964 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளார். மூன்றாவது இடத்தில் சிறீ- ரெலோ செயலதிபர் ப. உதயராசா 955 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். நான்காவதாக சிறீ- ரெலோ சார்பில் போட்டியிட்ட சோ. சிவகுமார் 546 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 9 விருப்பு வாக்குகள் வித்தியாசத்தில் சிறீ- ரெலோ செயலதிபர் ப. உதயராசா வவுனியா நகர சபை உறுப்பினராகக் கூடிய வாய்ப்பு கைநழுவியுள்ளது. வவுனியா நகர சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் கட்சிகளில் சிறீ - ரெலோக்கு அதிகமான விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 commentaires :

Post a Comment