8/22/2009

வெளிநாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்கவும் - கோத்தபாய




வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அவர்களது கோடிக் கணக்கான அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களையும், குறித்த நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். மேற்குலக நாடுகள், உண்மையில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதனால் விடுதலைப்புலிகள் போன்றதொரு பயங்கரவாத இயக்கத்திற்கு அந்த நாடுகள் புலிகளிடம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் புதிய தலைவருமான குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு சிவ வாரங்கள் கழிந்த நிலையில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். புலிகளின் முதலீடுகள் சில்லறை வியாபாரக் கடையிலிருந்து, ரியல் எஸ்டேட் வரைக்கும், பெற்றோல் நிலையத்திலிருந்து கோயில் வரைக்கும், வர்த்தக கப்பல் சேவையிலிருந்து சினிமாவுக்கு நிதியளிப்பது வரை பரந்து விரிந்துள்ளது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை வேறு பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. எப்படி எனினும் புலிகளின் சொத்துக்களின் பெறுமதி கிட்டத்தட்ட 300 மில்லியன் டொலர்களிலிருந்து 1 பில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் எனவும், இதுபற்றிய போதிய தகவல்கள் கே.பி க்கு தெரிந்திருக்கும் எனவும் கோத்தபாய மேலும் கூறுகிறார், இந்த சொத்துக்கள் விடுதலைப்புலிகளினது என்று நிரூபிக்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட நாடுகள் அவற்றையும் மீதமுள்ள புலி உறுப்பினர்களையும் இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும்

0 commentaires :

Post a Comment