இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் தமக்கு தொழில் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல வருடங்களாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தற்போது அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே மீனவர்கள் இது தொடர்பாக கவலையடைந்துள்ளனர்.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடம் பொருத்தமற்றது என கூறும் கல்குடா மீனவர் சங்கத்தின் தலைவர் மயில்வாகனம் சுந்தரராஜா இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள போதிலும் இது வரை சாதகமான பதில் கிட்டவில்லை என்று கூறுகிறார்.
பொருத்தமான மாற்று இடத்தை வழங்கினால் தொழில் ரீதியான பாதிப்பில் இருந்து தங்களால் விடுபட முடியும் என அச்சங்கத்தின் செயலாளரான பெரியதம்பி நடராஜா சுட்டிக் காட்டுகின்றார்.
இவர்களின் இந்தப் பிரச்சினை குறித்து மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு பொருத்தமான மாற்று இடத்தை ஒதுக்கீடு செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
0 commentaires :
Post a Comment