தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
பர்கூர், தொண்டா முத்தூர், இளையான்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்த நிலையில், பிரதான எதிர்ககட்சி இல்லாமல் தேர்தல் நடைபெற்றது. பாமக மற்றும் மதிமுகவும் தேர்தலைப் புறக்கணித்தன. அதேநேரம் இடதுசாரிக் கட்சிகள் உள்ளி்ட்ட பிற கட்சிகள் தேர்தலில் பங்கேற்றன.
வெள்ளிக்கிழமை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.பர்கூர், இளையான்குடி, கம்பம் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
அந்த ஐந்து தொகுதிகளிலும் விஜய்காந்தின் தேமுதிக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த தேர்தல் முடிவுகளை அடுத்து, சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 99 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸின் பலம் 36 ஆக அதிகரித்துள்ளது.
0 commentaires :
Post a Comment