மட்/படுவான் கரைக்கென தனியான கல்வி வலயம்.
-->
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக கல்வி வலயமாக “படுவான்கரை வலயம்” தாபிப்பதற்கு கிழக்கு மாகாண அமைச்சர் வாரியம் ஏகமனதாக தீர்மானம். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நெடுங்காலமாக படுவான் கரைப் பிரதேசம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது. இதனைக் கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், படுவான்கரை பிரதேசத்திற்கான தனியான கல்வி வலையமாக “படுவான்கரை வலயம்” தாபிப்பது தொடர்பில் நேற்று (24.08.2009) நடைபெற்ற அமைச்சர் வாரியத்தின் அங்கிகாரத்திற்காக கோரப்பட்டது. இதற்கான முழு அங்கிகாரத்தினையும் அமைச்சர் வாரியம் அங்கிகாரம் வழங்கியுள்ளது.தற்பொழுது மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் கல்குடா, பட்டிருப்பு, மட்டக்ளப்பு வலய அலுவலகங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. ஆயினும் பிரயாணக் கஷ்ட்டங்கள் காரணமாக இவற்றை நகரிலிருந்து நிர்வகிப்பது சிரமமாய் இருந்து வந்துள்ளது. எனவேதான் இப்பாடசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளன.படுவான்கரை பிரதேசத்திலையே கல்வி வலய அலுவலகத்தைத் தாபித்து அங்கிருந்து படுவான்கரையிலுள்ள பாடசாலைகளை நிர்வகிப்பதனால் அப்பாடசாலைகளின் கல்வித்தரத்தை வெகு விரைவில் விருத்தி செய்வதுடன் சமூகத்தின் கல்வித்தரத்தினையும் உயர்த்த முடியும்.மட்டக்களப்பு கல்வி வலயத்துள் அடங்கும் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 27 பாடசாலைகள், பட்டிருப்பு கல்வி வலயத்துள் அடங்கும் மண்முனை வடமேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 பாடசாலைகள், மட்டக்களப்பு கல்வி வலயத்துள் அடங்கும் ஏறாவூர் பற்றிலுள்ள 20 பாடசாலைகளில் 11 பாடசாலைகளையும் கல்குடா கல்வி வலயத்துள் அடங்கும் ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள 24 பாடசாலைகளுள் 7 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய கல்வி வலையமான “படுவான்கரை” கல்வி வலயத்தை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான வலய அலுவலகம் வவுணதீவில் இருக்கும்.புதிய “படுவான்கரை” வலயம் தாபிக்கப்பட்டதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வலயங்கள் பின்வருமாறு பாடசாலைகளின் தொகையினைக் கொண்டு இயங்குமு; வகையில் இயங்கவும் உள்ளது.மட்டக்களப்பு வலயம் 66 பாடசாலைகள்
மட்டக்களப்பு மத்தி வலயம் 64 பாடசாலைகள்
படுவான்கரை வலயம் 63 பாடசாலைகள்
கல்குடா வலயம் 71 பாடசாலைகள்
பட்டிருப்பு வலயம் 66 பாடசாலைகள
0 commentaires :
Post a Comment