இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் திருமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற உயர்மட்டக்கலந்துரையாடலில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. திரியாய் பிரதேசத்தில் அமைந்துள்ள நீலப்பனிக்கன் குளத்தை புனரமைப்பு செய்து அப்பிரதேச மக்களை விவசாய செய்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் திரியாய் பிரதேசத்தில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மத்தியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்பு மிகவும் தேவையாக உள்ளதாக அப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மேற்படி கூட்டம் இன்று(24.08.2009) கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கலந்துரையாடலில் மாகாண விவசாய அமைச்சர் து. நவரெட்ணராஜா, மாகாண நீர்ப்பாசண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அமைச்சின் செயலாளர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான உய்ர்பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்ட விவசாய மற்றும் நீர்ப்பாசணப்பணிப்பாளர்கள் குறித்த பிரதேசத்தின் விவசாய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
8/25/2009
| 0 commentaires |
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் கிழக்கு பிரதேசத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசத்திலும் விவசாய செய்கை பண்ணுவதற்கு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி.
அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் குழாம் திரியாய் பிரதேசத்தில் அமைந்துள்ள நீலப்பனிக்கன் குளத்தினை புனரமைப்பது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டார்கள். இதன் பிரகாரம் அங்கு விவசாயச் செய்கையினை மேற்கொள்ள இருக்கின்ற மக்கள் தங்களிடம் விடுத்த வேண்டுகோளின்படி அப்பரதேசத்தில் விவசாய செய்கையினை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு தரப்பு தமக்கு இடையூறாக இருப்பதாக அப்பிரதேச விவசாய பெருமக்கள் அமைச்சர்கள் குழாமின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். இதற்கிணங்க இன்று (24.08.2009) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் பாதுகாப்பு பிரிவினருடன் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெஃப்பை பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள் என பலர் கலந்துர் கொண்டனர்.மேற்படி கூட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் கிழக்கைத் தவிர (அதாவது உயர்பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசம்) ஏனைய அனைத்துப்பிரதேசத்திலும் பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கி இருக்கின்றார்கள் எதிர்வருகின்ற 05.09.2009 அன்று திரியாயில் சம்பிரதாய பூர்வமாக ஏர்பூட்டு விழா விவசாய அமைச்சர் து. நவரெட்ணராஜா தலைமையில் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக அப்பிரதேச மக்கள் சுமார் 10000 ஏக்கர் காணியில் விவசாயச் செய்கையினை மேற்கொள்ள முடியும்.
0 commentaires :
Post a Comment