8/19/2009

சிறீ-ரெலோ தனது தேசிய மாநாட்டில் கட்சியின் பெயரை “புதிய தாயகம்” என மாற்றியுள்ளது.


ஊடகச் செய்தி
ஆகஸ்டு 10ம் திகதி கூடிய எமது கட்சியின் மத்திய குழு, நாட்டின் தற்போதய அரசியல் நிலைமைகளை கூர்மையாகவும் கவனமாகவும் ஆராய்ந்து, மாறிவரும் தேசிய, சர்வதேச அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலைமைகளுக்கேற்ப கட்சியின் புதியதோர் மூலோபாயத்தையும் அதை நடைமுறையில் யதார்த்தமாக்கக் கூடிய உபாயங்களையும் தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மேலதிக தேசிய மாநாட்டை உடனடியாக கூட்டுவதற்கு ஏகமனதாக முடிவெடுத்துள்ளது.
நாம் தற்போது அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலத்திற்கான திருத்தங்களை நிபந்தனையற்று ஆதரிப்பதெனவும் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்.
கட்சியின் எதிர்வரும் மேலதிக தேசிய மாநாட்டில் கட்சியின் பெயரை “புதிய தாயகம்” என மாற்றி ஒரு உண்மையான ஐக்கியப்பட்ட சமதர்ம ஜனநாயகத்தை எமது நாட்டில் உருவாக்கும் அரசியல் பிரவாகத்திற்கு உதவும் வகையில் கட்சியின் சட்ட திட்டத்தை (யாப்பை) திருத்துவதற்கான ஆலோசனையையும் மாநாட்டிற்கு வழங்குவதெனவும் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்.
மத்திய குழுவிற்காக
ப.உதயராசா(செயலாளர் நாயகம்)


0 commentaires :

Post a Comment