இலங்கையின் வடக்கே அண்மையில் நடைபெற்று முடிந்த யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த சபைக்கான மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கானவர்களின் பெயர்களை ஈபிடிபி கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் துணை மேயர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. இது குறித்து அக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அமிர் அலி கூறும் போது, இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த கணிசமான முஸ்லிம்கள் ஆதரவாக வாக்களித்ததால், தார்மீக அடிப்படையில் தங்களுக்கு இந்த பதவி கிடைக்க வேண்டும் என்றார்.
இது குறித்து ஈபிடிபி கட்சியின் தலைவரும் இலங்கை அரசின் சமூக சேவைகள் துறையின் அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா அவர்கள் கூறும்போது, இது குறித்து தனது கட்சியினருடன் தான் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் இது குறித்து தாங்கள் முடிவு எடுப்போம் என்றும் கூறினார்.
0 commentaires :
Post a Comment