8/31/2009

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில்ஆளணி ஒழுங்கமைப்புப் பணிகள்




கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் தற்பொழுதுள்ள ஆளணி வெற்றிடங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாக அலுவலகம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகம் கே. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆளணி மீளாய்வு தொடர்பாக ஆராயப்பட்டதாக உதவிச் செயலாளர் எம். ஏ. அனஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதித்துள்ள ஆளணி வெற்றிடங்களுக்கமைவாக மீள் ஒழுங்கமைப்புப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல் நிறைவுற்றதும் ஆளணி ஒழுங்கமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 commentaires :

Post a Comment