8/02/2009

பழுகாமம் பிரதேசத்தில் உள்ள சிறுவர் சிறுமியர் இல்லங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம்




கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பழுகாமம் பிரதேசத்திற்கு அபிவிருத்தி தொடர்பான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த போது பழுகாமம் பிரதேசத்தில் உள்ள விபுலானந்தா சிறுவர் இல்லம் மற்றும் திலகவதியார் மகளீர் இல்லங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு விஜயம் செய்த முதல்வர் அவ்வில்லங்களில் உள்ள சிறுவர் சிறுமியருடன் மகிழ்ச்சிகரமாக கலந்துரையாடியதுடன் அவ்வில்லங்களில் காணப்படுகின்ற குறைகளை கேட்டறிந்து அங்கு காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் அங்குள்ள நிர்வாகிகளிடம் குறிப்பட்டார்.
இவ்விஜயத்தின்போது மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லா மற்றும் போரதீவுப்பற்று தவிசாளர் சிறிதரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment