கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தியில் பாரியளவிலான மாற்றங்களைக் கொண்டுவரும் நீர்பாசனக் குளங்கள் புணரமைக்கப்பட்டு வருகின்றது. இன்று மட்டக்களப்பு மாவட்டக் கச்சேரியில் அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தலைமையில் விவசாயஅபிவிருத்திக் கூட்டம் நடைபெற்றது. இதில் ; பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிடுகையில், கிழக்கு மாகாணம் விவசாய உற்பத்தியிலே பாரியளவிலான மாற்றங்களைப் பெற்றுத் திகழவேண்டும். அத்தோடு நெற் செய்கை மாத்திரமின்றி மேட்டு நிலப் பயிர்ச் செய்கையிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற பெரும்பாலான நீர்ப்பாசனக் குளங்கள் இவ் வருட இறுதிக்குள் புணரமைக்கப்பட்டுவிடும். எதிர் வருகின்ற ஆண்டில் விவசாயத்திற்கான தண்ணீர்பிரச்சினை ஏற்படாத வண்ணம் சீர் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் இக் கூட்டத்தில் விவசாயிகள் எதிர் நோக்குகின்ற பல பிரச்சினைகள் ஆராயப்பட்டன. குறிப்பாக யானைப்பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு விவசாயிகளுக்கான விதை நெல் மறு;றும் பசளைகள் வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் தொடர்hபகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப் பெரிய குளமான உன்னிச்சைக் குளத்தின் திருத்த வேலைகளையும் மற்றும் வலதுகரை வாய்க்கால் என்பவற்றை முதல்வர் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இக்கூட்டத்pற்குகிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, பிரதேச தவிசாளர்கள், முதலமைச்சரின் செயலாளர் திருமதி ஆர். ரஞ்சினி, உதவி அரசாங்க அதிபர் திருமதி ஆர்.கேதீஸ்வரன், நீர்பாசனத்திணைக்களப் பொறியியலாளர் மோனதாஸ், பீரதேச செயலாளர்கள் மற்றும் விவசாயக் குழுக்களின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டார்கள்
0 commentaires :
Post a Comment