8/14/2009

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போகத்திற்கு இலவசமாக விதைநெல் வழங்க நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் இவ்வருட சிறு போகத்தின் போது செய்கை பண்ணப்படாத நெற்காணிகளுக்கும், வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நெற்காணிகளுக்கும் இலவசமாக விதைநெல் வகைகள் பெரும் போகத்தின் போது வழங்கப் படுமென அம்பாறை மாவட்ட விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நிமல் தயாரட்ண தெரிவித்தார்.
இக்காணிகளுக்காக 34,000 புசல் விதை நெல்லை வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ விவசாயத் திணைக்களத்திற்கு தேவையான பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் 8,000 ஏக்கர் நெற்காணி வரட்சியினால் கருகியும், சுமார் 30,000 ஏக்கர் நெற்காணி நீர்பற்றாக்குறை காரணமாக செய்கை பண்ண அனுமதி வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது

0 commentaires :

Post a Comment