8/20/2009

உறுகாமம் முதல் கித்துள் வரையான பாதை அபிவிருத்தி வேலைகள் அங்குரார்ப்பனம்

மட்டக்களப்பு மாவட்டத்திலே எல்லைக்கிராமமாகவும் தற்போது மீழ் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமமாகவும் இருக்கின்ற உறுகாமம் கிராமத்தில் இருந்து கித்துள் வரையான மிக முக்கியமான பாதையின் தொடக்கவேலைகள் இன்று(17.08.2009) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதில் பிரதமஅதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர், சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இப்பிரதேசத்திலே எமது முஸ்லிம் சகோதரர்கள் வாழந்திருக்கின்றார்கள் கடந்த யுத்த கால சூழ்நிலை காரணமாக இடம்பெயரவேண்டி ஏற்பட்டது ஆனால் தற்போது அந்நிலை மாறி எல்லைக்கிராமமான இவ்வுறுகாமப்பபிரதேசத்திலே எம் முஸ்லிம் சகோதரர்கள் மீண்டும் மீழ் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். இங்கு வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஆரம்பகாலங்களில் அந்நியொன்னியமாகா வாழ்ந்தார்களோ அதேபோல் இன்றும் மிகவும் நெருக்கமாகவும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழவேண்டும். கடந்த கால கசப்பான அனுபவங்களை நாங்கள் அடியோடு மறந்து புதிதான சமூக நல்லிணக்கத்துடன் கூடிய ஓர் அபிவிருத்தியை வேண்டிநிற்கின்ற சமூகத்தினை உருவாக்கவேண்டும். இன்று இங்கே முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் தமிழ் முதலமைச்சர் முஸ்லிம் மற்றும் தமிழi; அதிகாரிகள், முஸ்லிம் தமிழ் மக்கள் அனைவருமே இந்நிகழ்விலே ஒன்றிணைந்து இருக்கின்றோம். இதேபோல் எதிர்வருகின்ற காலங்களில் மிகவும் ஒற்றுமையோடும் ஒன்றிணைந்த பலத்தோடும் எமது சமூகங்களின் தேவைப்பாட்டினை எடுத்தியம்பக்கூடியவர்களாக நாம் மாறவேண்டும். இன்று கிழக்கு மாகாணத்திலே அபிவிருத்தி என்கின்ற போது எல்லைக்கிராமங்கள் மற்றும் மீழ் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களே முதன்மைப்படுத்தப்படுகின்றது. அதற்கேற்றாற்போல் இப்பிரதேசமும் அனைத்துவிதமான அபிவிருத்திகளையும் கொண்ட பிரதேசமாக மாற்றவேண்டியது இங்குள்ள அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஏன் மக்களாகிய உங்கள் எல்லோரினதும் கடமையாகும். ஏதிர்வருகின்ற ஒருசில ஆண்டுகளிலே நாம் எதிர்பார்க்கின்ற நல்லுறவு சமூகத்தினை காணக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கனரக வாகன சாரதிகளுக்கான நியமனங்களும் வழங்கிவைக்கப்பட்டது

0 commentaires :

Post a Comment