8/13/2009

கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் முயற்சிகள்

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேல் யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட பெண்களை கிராமசேவகர் பிரிவு ஊடாக இனம் கண்டு அவர்களுக்கு பொருத்த மான சுயதொழில் முயற்சிகளை ஏற்படுத் திக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதி யான சூழ்நிலையைத் தொடர்ந்து சமூகசேவை கள் அமைச்சு மேற்கொ ண்டுள்ளது.
பிரதேச செயலாளர் பிரிவு மட்ட த்திலே இதற்கான பயி ற்சி நிலையங்களும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. நெக்டோ கிழக்கில் பல்வேறு தேவைகளுக் காக பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைக்கப் பட்ட கட்டிடங்களிலே இந்த பயிற்சி வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவி ருக்கிறது.
முதல் கட்டமாக ஆலை யடிவேம்பு பிரதேசத் திலுள்ள வாச்சிக்குடா கிராமத்தில் பெண்களுக் கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இதேநேரத்தில் யுத்தத் தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை செல்லவேண் டியவர்கள் தொழில் செய்வதாக இருந்தால் அவர்களைக் கண்டுபிடி த்து மீண்டும் பாடசா லைகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் கிழக் கிலுள்ள 44 கோட்டக் கல்வி நிர்வாகத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


0 commentaires :

Post a Comment