8/12/2009

நாம் அரசியலில் மட்டுமல்ல, அபிவிருத்தியிலும் இணைந்து செயல்படுகின்றோம்



காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் கரீப் நவாஸ் பவுண்டேசன் ஏற்பாடு செய்த 23ஆவது வருடாந்த ஹாஜாஜீ மா கந்தூரி நடைபெற்றது.
இந்நிகழ்வில் இம்முறை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
பதுரிய்யாஹ் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் அல்ஹாஜ் அப்துர் ரஊப் மௌலவியும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,
“கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து செயல்படக் கூடிய வகையில் காலம் தற்போது மாறியிருக்கின்றது. நாம் அரசியலில் மட்டுமல்ல, அபிவிருத்தியிலும் இணைந்து செயல்படுகின்றோம்.
கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக இனங்களுக்கிடையிலும் முறுகல் நிலை ஏற்பட்டது. இனிமேல் அதற்கான வாய்ப்புகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது” என்றார்.
சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உரையாற்றுகையில்,
“தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தே எமது மாவட்டத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் நாமிருவரும் ஒருமித்த கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றோம்”என்று குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment