தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை மக்கள் மயப்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டங்கள் அண்மைக்காலங்களாக விரிவு படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் கட்டமாகவே கிராமிய மட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த கிராமியக்குழுக்களை மீள் நிர்மானம் செய்யும் வேலைத்திட்டத்தினை தற்போது கட்சி முன்னெடுத்துச் செல்கின்றது. கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பிரதேச்ங்களிலும் இவ் வேலைத்திடட்த்தினை விரிவு படுத்துவதாக கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளது. அதாவது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் மேற்படி கிராமியக் குழுக்கள் அமைக்கப்பட்டு மீள் நிர்மான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இதன் முதற்கட்டமாக இன்று வாகரைப் பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளுக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஓவ்வொரு கிராம மட்டத்திலிருந்தும் உறுப்பினர்கள் பலர் இன்று இணைந்து கொண்டார்கள். இணைந்து கொண்ட அனைவருக்கும் உறுப்புரிமை வழங்கப்பட்டது. கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு hகாண சபையின் உறுப்பினருமான நா.திரவியம்(ஜெயம்) மற்றும் வாகரைப்பிரதேச தவிசாளர் கணேசன்( சூட்டி) ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.இதற்குப் பரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன் கலந்துகொண்டார். அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற நிலையான அரசியல் கட்சி என்றால் அது எமது கட்சியேதான் ஆகும். அதே போல் நாம் அரசோடு கௌரவமான ஓர் உறவினைப் பேணிக் கொண்டு அபிவிருத்தி வேலைகளைச் செய்து வருகின்றோம். இவ்வாறு இருந்து கொண்டு எமது கட்சியின் தனித்துவத்தினையும் விட்டுக் கொடுக்காது செயற்பட்டுவருகின்றோம். ஆனால் ஒரு சிலர் அரசியல் ஞானம் புரியாதவர்கள் எமது கட்சியையும் எம்மையும் அரசோடு மூட்டிவிடுகின்ற பிராயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள். இதையெல்லாம் கண்டு நாம் அஞ்சப்போவதும் இல்லை அடி பணியப் போவதும் இல்லை எனத் தெரிவித்தார்.தொடர்ந்து குறிப்பிடுகையில், கிழக்கு மக்களுக்கான அரசியல் தேவைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துதக் கூறினார். நாங்கள் அனைவருமே ஒருமித்து நின்று பேரம் பேசுகின்ற சக்தியாக மாறி அதனூடாக அபிவிருத்திகளை நாம் ஈட்ட வேண:டும்.. அதே போல் தமிழ் மக்கள் அனைவருமே நிதானமாகச் சிந்திக்கின்ற காலத்தில் நாம் அனைவரும் நிற்கின்றோம். எனவே எதிர்வருகின்ற காலங்களில் எங்களுக்கென்று பலம் சேர்ப்பதற்கும் அரசியலில் எமது மாகாணத்தின் இருப்பிடத்தையும் நிலைப் படுத்துவதற்காக நாம் அனைவருமே ஒற்றுமைப்பட வேண்டும்.இந்நிகழ்வில் கட்;சியின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கட்சியன் உப செயலாளர் ஜெயராசி, கட்சியின் உயர்மட்ட குழுவினர் மற்றும் புதிதாக நியமனம் பெற்றோர் எனப்பலர் கலந்து கொண்டார்கள்.
8/11/2009
| 0 commentaires |
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் மயமாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக கிராமியக் குழுக்களை மீள்நிர்மானம் செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம

0 commentaires :
Post a Comment