8/10/2009

எமது மக்கள் சுயமாக சிந்தித்து செயற்படும் சூழல் - அமைச்சர் டக்ளஸ்




எமது மக்கள் சுயமாக சிந்தித்து சுதந்திரமாகத் தங்களது விருப்புக்களை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாகி வருவதை இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,
எமது மக்கள் சுயமாக சிந்தித்து சுதந்திரமாக தங்களது விருப்புகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாகி வருவதை இத்தேர்தல்கள் வெளிப்படுத்தி இருக்கிறது. இது குறித்து தான் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும், இவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஜனாதிபதி அவர்களுக்கு தான் தனது நன்றியை எமது மக்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபை தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் வாக்களித்த மக்கள் அனைவரையும் ஒரே மாநகர மக்களாக பாரபட்சமின்றி கருதி, சேவையாற்றவும் இழந்தவைகளை மீளப்பெற்று நடைமுறை சாத்தியமான தீர்வை வென்றெடுக்கவும் கரங்கோர்க்குமாறு அனைவரையும் உரிமையுடன் அழைக்கிறேன். வாக்களித்து எம்மைப் பலப்படுத்தியவர்களுக்கும் புதிய ஜனநாயக சூழலை சரியாகப் பயன்படுத்தி நேர்மையான தேர்தலை நடத்த உதவிய அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.


0 commentaires :

Post a Comment