
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் பிராந்திய காரியாலயம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் அல்ஹாஜ் எ.எல்.எம் அதாவுல்லா கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாகாண அமைச்சர் உதுமாலெஃப்பை ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் டொக்டர் உதுமாலெஃப்பை, தேசிய நீர்வழங்கல் அமைச்சின் பிராந்திய பிரதிப்பணிப்பாளர் லத்தீப், தேசிய நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் எ. அபேய குணசேகர தேசிய நீர்வழங்கல் மற்றும் அமைச்சின் பொது முகாமையாளர் லால் பிரேமானந், மற்றும் அமைச்சின் மேல் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மேற்படி பிராந்திய காரியாலயம் ஏற்கனவே திருமலையில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
0 commentaires :
Post a Comment