சிறுவர்களுக்குச் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் கற்பிப்பதற்கான வழிவகைகளை ஆராயவேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ள கருத்து காலோசிதமானது. ‘மொழிபெயர்ப்பு தொடர்பில் பொது நிர்வாகத்தில் காணப்படும் நெருக்கடி’ என்ற தலைப்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத் தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இக் கருத்தைத் தெரி வித்தார்.
பல்லின சமூகங்களைக் கொண்ட நாடாகிய இலங்கையில் மிகப் பெரும்பாலா னோரின் வீட்டு மொழியாகவும் நாட்டு மொழியாகவும் சிங்களமும் தமிழும் விள ங்குகின்றன. ஆனால் சிங்கள மக்களில் பெரு ம்பான்மையானோர் தமிழையும் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் சிங்க ளத்தையும் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதால் இலங்கையில் இரண்டு பிரதான இனங்களுக்கும் இடையிலான இடைவெளி பாரியதாக உள்ளது. ஒருவ ரையொருவர் புரிந்துகொள்வதற்கு இந்த இடைவெளி தடையாக விளங்குகின்றது. புரிந்துணர்வு வளர்வதற்குச் சாதகமான சூழ் நிலை இல்லாத நிலையைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் வேற்றுமையுணர்வை வளர்த்துவிட்டார்கள்.
வரலாற்றில் முதல் முறையாகச் சிங்களம் மட்டும் என்ற கோஷத்தை முன் வைத்தவர் ஜே. ஆர். ஜயவர்த்தன. சட்ட சபையில் சமர்ப்பித்த தனது பிரேரணை யைச் சில அரசியல் தேவைகள் காரணமா கச் சிங்களமும் தமிழும் எனத் திருத்திய போதிலும், சட்ட சபையில் அப்பிரே ரணை மீது ஆற்றிய உரை தமிழ் மக்கள் பற்றியும் தமிழ் மொழி பற்றியும் சிங்கள மக்களிடம் அர்த்தமற்ற அச்சத்தைத் தோற்றுவிப்பதாக இருந்தது. தமிழும் சிங்களமும் சமநிலையில் வைக்கப்பட்டால் காலப்போக்கில் சிங்களம் அழிந்துவிடும் என்ற அச்சம் தனக்கு இருந்ததாக அவர் கூறினார்.
இதேபோல, தமிழர் தரப்பிலும் சிங்கள மக்களுக்கு எதிரான உணர்வுகள் வளர்க்கப்பட்டன. சிங்களவர்கள் ஒருபோதும் இன பிரச்சினையின் தீர்வுக்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்றும் தமிழின அழிப்பிலேயே சிங்களத் தலைவர்கள் அக்கறை என்றும் தமிழ்த் தலைவர்கள் மேடைக்கு மேடை பேசினார்கள். ‘சிங்களத்தால் ஆறாத் துன்பம் செந்தமிழுக்கு மாறாப் பங்கம்’ என்று தேர்தல் மேடைகளில் சினிமாப் பாணி யில் பாடல்கள் பாடப்பட்டன.
அரசியல்வாதிகள் குறுகிய அதிகார நோக் கத்தோடு செயற்பட்டதன் பாரதூரமான விளைவை இன்று இன, மத பேதமின்றி எல்லோரும் அனுபவிக்கின்றோம். இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் மூலமே இப்பாதிப்பிலிருந்து விடுபட முடி யும் என்பதை இனத்துவ கடுங்கோட்பாட் டாளர்களைத் தவிர மற்றைய எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும், எதிர் கால சந்ததியினர் மத்தியில் புரிந்துணர்வு வளர்வதற்கு அரசியல் தீர்வு மாத்திரம் போதாது. ஒருவரையொருவர் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். ஒருவ ரின் மொழியில் மற்றவருக்குப் பரிச்சயம் ஏற்படுவதன் மூலமே அது சாத்தியமாகும்.
மாணவர்களுக்குச் சிறு பராயத்திலிருந்தே இரண்டாவது மொழியாகச் சிங்களத்தையும் தமிழையும் கற்பிப்பதற்கான ஏற்பாடு நீண்ட காலத்தில் சிறந்த பலனளிப் பதாக அமையும். இப்போது பாடசாலை களில் இரண்டாவது மொழி கற்பிக்கின்றார்கள். ஆனால் அது விருப்பத்தேர்வாகவே உள்ளது. சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியையும் இரண்டாவது மொழியா கக் கற்பதை ஊக்குவிப்பதற்கான வழிவகைகள் பற்றிச் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இருமொழி அறிவுள்ள மாணவ சமுதாயம் இருமொழி அறிவுள்ள பிரசைகளாக வளர்ச்சி பெறும். ஐந்தில் வளைந்தால் ஐம்பதில் சிறப்பாக வளையும்.
0 commentaires :
Post a Comment