8/13/2009

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்-9) எஸ். எஸ். எம். பஷீர்

எம்.ஐ.எம் முகைதீன் குழுவினர் இரண்டு தடவைகள் சென்னைக்கு விஜயம் செய்து முதலில் மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களுடனும் செப்டம்பர் 1987 ல் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். எனினும் இரண்டாவது தடவையான (சித்திரை 1988) விஜயத்திற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய ஆயதக் குழக்களின் முஸ்லிம்கள்மீதான அடாவடித் தனங்கள் குறித்து மு.ஐ.வி முன்னணி ஹர்த்தால்களை நடாத்தியிருந்தது. குறிப்பாக ஈ.என்.டி.எல்.எப், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகவே இவர்கள் இரண்டாவது விஜயத்தில் 17 முஸ்லிம்களை கல்முனையில் கொல்லப்பட்டமை குறித்து இவ்வாயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் இந்தப்படுகொலைகளுக்கு புலிகள்தான் பொறுப்பு என்று முஸ்லிம் குழுக்களிடம் குற்றம்சாட்டும் முயற்சியில் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்த இவர்கள் தங்கியிருந்த பிரசிடன்ற் ((President ) ஹொட்டலில் முற்பட்டனர்.
எனினும் மேலும் அவர்களிடம் புலிகளை மட்டும் சந்திப்பதற்கா வந்தீர்கள் என்றும் நீங்கள் நினைக்கின்றீர்களா புலிகளிடம் மட்டும்தான் ஆயதங்கள் இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பி எங்களிடமும் ஆயுதம் இருக்கின்றதெனச் சொல்லி இவ்விரண்டு ஆயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து தமிழகத்தில் வெளிவரும் யூனியர் விகடன் ((Junior Vikatan) என்னும் வாராந்த சஞ்சிகை முஸ்லிம் தலைவர்கள் மரியாதையுடனும். சாந்தமாகவும் அச்சுறுத்திய இளைஞர்களைநோக்கி “ இங்கே பாருங்கள் தம்பிமாரே நாங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் குறித்து சென்னையிலிருந்து அறிக்கைகளை விடுபவர்கள் அல்ல, நாங்கள் எல்லோரும் அங்கிருந்து வந்தவர்கள்தான். எங்களிடம் நீங்கள் கல்முனையில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு உங்களுடைய இயக்கம்தான் பொறுப்பு என்பதனை நிரூபணம் செய்வதற்கு எங்களிடம் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் அவ்வாறு விரும்புவீhகளானால் நாங்கள் அவற்றை பகிரங்கமாகவே வெளியிடத் தயாராக இருக்கின்றோம்
என்றும் தங்களிடம் ஆயுதம் இருக்கின்றதென குறிப்பிட்ட இளைஞர்களை நோக்கி “நாங்கள் ஆயுதங்களுக்குப் பயந்தவர்கள் என்று நினைத்திடவேண்டாம், நாங்கள் ஏன் புலிகளுடன் கதைக்க வந்தோமென்றால் அவர்களிடம் ஆயதம் இருப்பதென்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் தமிழர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகள் என்பதால் நீங்கள் எங்களை ஆயதத்தினால் அச்சுறுத்த முயற்சித்தால் நாங்களும் ஏராளமான ஆயதங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல நாங்கள் மூன்றாவது தரப்பினருக்குப் பின்னால் பாதுகாப்புத் தேடி பலத்தைக் காட்ட மாட்டோம்.” இது (ஐ.பி.கே.எப-IPKF )டன் இவர்கள் சேர்ந்திருப்புது குறித்தே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கெல்லாம் மூலகாரணமாக அமைந்தது என்னவென்றால் இந்தியப் பத்திரிகையாளரிடம் இம்முஸ்லிம் குழுவினர்; அந்தக்காலகட்டத்தில் கல்முனையில் இடம்பெற்ற முஸ்லிம்கள் 17 பேரின் படுகொலைக்கு புலிகள் காரணமல்ல வேறுஒரு ஆயதக்குழவினர்தான் காரணமென்று வெளியிட்ட அறிக்கைதான் இவ்விரு ஆயுதக்குழுவினரது கோபத்திற்கும் காரணமாயிற்று. முஸ்லிம் குழுவினரின் மூலம் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு மறுபுறத்தில் புலிகளும் உரம் சேர்த்தனர். இவ்வொப்பந்தத்தின சில அம்சங்களை இங்கு பார்ப்பதும் ஒருவரலாற்றினைப் பின்னோக்கிப் பார்ப்பதாக அமையும் என்பது மட்டுமல்ல தமிழ் தேசியவாதம் முஸ்லிம் அரசியலை தந்திரோபாயமாக எவ்வாறு முடக்கிவந்திருக்கின்றது என்பதற்கு ஆவணப்பதிவாகவும் அமைகின்றது. இவ்வொப்பந்தத்தின் அம்சங்களாக
இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழியினை பேச்சு மொழியாகக் கொண்டிருப்பினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்பட்ட ஒரு தனித்துவக்குழு.
•முஸ்லிம் மக்கள் தங்களுடைய அக்கறைகள் தங்களின் தாயகத்தில் மாத்திரமே பாதுகாக்கப்படுமென்றும் இது அனைத்து தமிழ் பேசும் மக்களிடையேயான பரந்துபட்ட ஒற்றுமையினூடாகவே அடையப்படக்கூடியது என்றும் நம்புகின்றார்கள்.
•முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுத,p ஏனைய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம்போல் தமக்கும் தாயகமே என்று புரிந்துள்ளார்கள்.
•முஸ்லிம் மக்கள் தமது தாயகத்தில் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்களது வாழ்க்கை அச்சம், பாதுகாப்பின்மையிலிருந்து சுதந்திரமாக வாழ்வதனை உறுதிசெய்வது முக்கியமானதாகும்.. புலிகள் இதனை உறுதிசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டவாக்கத்தினை உருவாக்குவதில் ஒத்துழைப்பு நல்குவார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சனத் தொகையில் 33 வீதமாகவும்; இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் 18 வீதமாகவும் உள்ளனர். ஆவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிசெய்யவும், நீதியான அதிகாரப் பகிர்வினை அனுபவிப்பதனை இயலுமாக்கவும், மாகாண சபையிலும் அதன் மந்திரி சபையிலும் 30 வீதத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு உரித்துடையவர்களாக இருக்கவேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
•மேலும் எதிர்கால நிலப்பங்கீடு எல்லாவற்றிலும் முஸ்லிம் மக்கள் 35 வீதத்திற்கு ற்கு குறையாத விழுக்காட்டினை கிழக்கு மாகாணத்திலும் 30 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை மன்னார் மாவட்டத்திலும் 5 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை ஏனைய பகுதிகளிலும் பெறுவதற்கு உரித்துடையவர்கள் ஆவார்கள் என்பதனை எற்றுக்கொள்ளள
•முஸ்லிம் ஒருவர் வடக்கு, கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக தோந்தெடுக்கப்படாதவிடத்து முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராக மேற்படி சபைக்கு நியமிக்கப்படுவதனை உறுதிசெய்யும் சட்ட எற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
ஆகிய விடயங்கள் ஏனைய சில இங்க குறிப்பிடப்படாத அம்சங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாகும் இவ்வாறான ஒப்பந்தத்தின்மூலம் முஸ்லிம் குழுவினர் புலிகளின் அரசியல் சாமாத்தியத்திற்குள் சிக்குண்டு வெற்றிப் பெருமிதத்துடன் இலங்கைக்கு திரும்பினர்.
தொடரும்
சகோதரத்துவ மக்களிடம் புலிகள் நடாத்திய இனவாத… இனப்படுகொலைகள்
இனவாதம் கொண்ட புலிகள்இலைபோட்டு ஒன்றாய் அமர்ந்துஇன்புற்று உண்டு மகிழ்ந்தஇஸ்லாமிய சமய நண்பர்களுக்குஇட்ட இன்னல்களில் ஒன்றுதான்இந்த படுகொலைகள்
இமைகள் மூடி திறக்குமுன்இடி விழுந்து அன்றுஇனம் ஒன்றின் மீதுஇதிகாசங்களில் கண்டிராதஇடர் தனை அனுபவித்தது யாரால்இறுமாப்பு கொண்ட பாவிகள்இரக்கமில்லாத காரியம்இறகுதனை துண்டாடிஇரண்டு இனத்துக்கும் பகைமூட்டிஇழிவாக வரையப்பட்ட ஓவியம்
இன்பமாக ஆடிப்பாடிஇணையவேண்டிய கைகளைஇருதுண்டாடிய பிற்போக்கு வாதிகள்இறைக்கைகளை இல்லாதொழித்துஇகழ்ந்து பறை சாற்றினர்
இன்னுமொரு இனத்தின் மீதுஇயற்கை இறப்புக்கள் அல்ல இவைகள்இரைதேடி உலாவந்த பாசிச தலைவனால்இடப்பட்ட ஆணையில் பிரசன்னமானதுஇந்த அப்பாவிகளின் படுகொலைகள்
வேதனையுடன்கிளியின் ஓர்கிராமத்து நாயகன்

0 commentaires :

Post a Comment