8/22/2009

சுற்றுலா, ஹோட்டல் முகாமைத்துவத்தில் கிழக்கில் 82 இளைஞர்,யுவதிகள் பயிற்சி பூர்த்தி



கிழக்கு மாகாணத்தில் உள்ள தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கென தொழில் துறைப்பயிற்சி நெறியினை வழங்கும் திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் சம்மந்தமான பயிற்சியினை நிறைவு செய்த ஒரு தொகுதியினர் வெளியேறியுள்ளனர்.கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி நிலையமும் அனுராதபுரத்தில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நிலையமும் இணைந்து இப்பயிற்சி நெறியினை வழங்கின. நிக்கோட் மற்றும் நெக்டப் ஆகிய நிறுவனங்களின் நிதி உதவியன் மூலம் நடைபெற்ற இந்த பயிற்சி நெறியினை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 82 இளைஞர் யுவதிகள் பூர்த்தி செய்திருந்தனர். இவர்களுக்கென சான்றிதள் வழங்கும் வைபவம் கிழக்கு தமாகாண முகாமைதத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் வி.திவாகரசர்மா தலைமையில் திருகோணமலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதள் வழங்கி வைத்தார்

0 commentaires :

Post a Comment