கிழக்கின் உதயம்’ வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாலயம் சகல வசதிகளையும் கொண்ட விளையாட்டு பாடசாலையாக அபிவிருத்தி செய்ய விளையாட்டு மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 500 மில்லியன் ரூபா செலவில் இப்பாடசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் சுமார் 25 மில்லியன் ரூபா செலவில் பாடசாலையின் விளையாட்டு மைதானம் புனருத்தாரணம் செய்யப்படுவதுடன், நீச்சல் தடாகம், மற்றும் வீர வீராங்கனைகளுக்குரிய சகல வசதிகளும் அமைக்கப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் அடிப்படையில் கடந்த வருடம் பிலியந்தல மத்திய மகா வித்தியாலயம், திக்வெல்ல மத்திய மகா வித்தியாலயம், திக்வெல்ல விஜித மத்திய மகா வித்தியாலயம், தொம்பே சேனநாயக்க மத்திய மகா வித்தியாலயம், தங்கல்ல விஜயபா மகா வித்தியாலயம் என்பன விளையாட்டு பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
0 commentaires :
Post a Comment