8/12/2009

அந்தமான் தீவு கடலில் 33 கி.மீ ஆழத்தில் ப+கம்பம்

திருகோணமலையிலிருந்து 1450 கிலோ மீட்டருக்கு அப்பால் அந்தமான் தீவுக்கு அருகில் கடலுக்கடியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று அதிகாலை முதல் சில மணித்தியாலங்கள் அல்லோலகல்லோல நிலைமை ஏற்பட்டது.
இலங்கை, இந்தியா, மியன்மார், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கரையோரப் பிரதேசங்களிலேயே இந்த அல்லோலகல்லோல நிலைமை ஏற்பட்டது.
அந்தமான் தீவுக்கு அருகில் கடலில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.6 ரிச்டர் அளவுக்கு நேற்று அதிகாலை 1.25 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்நில நடுக்கம் காரணமாக இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மியன்மார் ஆகிய ஐந்து நாடுகளும் சுனாமி பேரலை அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதாக பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் உடனடியாக முன்னெச்சரிக்கை விடுத்தது.
இதேநேரம் இந்தியா, மியன்மார், தாய்லாந்து, இந்தோனேசியா போன்று நாடுகளின் கரையோரப் பிரதேசங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடலூர், சென்னை, குமரி, நாகபட்டினம் உட்பட பல பிரதேசங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடங்களும் அதிர்ந்துள்ளது டன் உயரமான இடங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும் கீழே விழுந்துள்ளன.
திருமலையிலிருந்து 1450 கிலோ மீட்டர் வடகிழக்காக நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது எமது நிலையத்தில் பதிவானதும். இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்த சில நிமிடங்களில் வடக்கு, கிழக்கு உட்பட்ட கரையோரப் பிரதேச மக்களுக்கு சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப் பட்டதாகவும் இலங்கை வானிலை அவதான நிலையப் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஏ. ஜயசேகர நேற்றுத் தெரிவித்தார்.
கரையோரப் பிரதேசங்களில் பொலிஸார் ஊடாக சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடலுக்கடியில் நில நடுக்கம் ஏற்பட்டிருப் பதால் அது சுனாமி பேரலைத் தாக்கமாக இருக்கும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட தால் இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட்ட கரையோர பிரதேசங்களிலும் ஏனைய நாடுகளின் காரையோர பிரதேசங்களிலும் வாழ் கின்ற மக்கள் மத்தியில் அல்லோலகல் லோல நிலை ஏற்பட்டது.
இந்த நிலைமை நேற்று காலை வரையும் சுமார் நான்கைந்து மணித்தியாலயங்கள் நீடித்தன. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப் பட்டபோதும், மக்கள் தூக்கமின்றி பதற்றத்து டன் காணப்பட்டனர்.
கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் பாதுகாப்பு மிக்க உயரமான இடங் களை நோக்கி அலறி அடித்து ஓடிச் சென்றனர். 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்த பேரழிவே மக்களின் இவ்விழிப்பு நிலைக்குக் காரணம் என்று அவர் கூறினார். இருப்பினும் இந்நில நடுக்கத்தால் பாரிய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்படவில்லை.
அதனால் நேற்று காலை 5.00 மணியளவில் சுனாமி முன்னெ ச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாகவும் பிரதிப் பணிப்பாளர் ஜயசேகர கூறினார். இந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து தென்னிந்தியாவின் ஆந்திர முதல் குமரி வரையான கரையோரப் பிரதேச மீனவர்கள் பலர் வழமைக்கு மாறாக மீன்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்ப ட்டதை அவதானித்துள்ளனர்.
ஜப்பானிலும் நிலநடுக்கம்
இதேவேளை ஜப்பான் நாட்டின் ஷிசோகா கரையோரத்தின் நிலப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு 6.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 14 மைல் ஆழத்தில் இருந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர்.
இந்நில நடுக்கம் காரணமாக உயரமான கட்டடங்கள் காற்றில் தென்னை மரம் சாய்ந்து மீள்வது போன்று காட்சியளித்ததாக நேரில் பார்த்தோர் குறிப்பிட்டுள்ளனர். மக்கள் அச்சம் காரணமாக அலறியடித்தார்கள்.
இந்நிலநடுக்கம் இருதடவைகள் ஏற்பட்டுள் ளதுடன் சுமார் 85 பேர் காயமடைந்துள்ள தாகவும் ஜப்பானிய அதி காரிகள் கூறியுள்ள னர்.

0 commentaires :

Post a Comment