இலங்கையின் பொருளாதாரத்தின் மீது வெளிநாடுக ளுக்குப் பாரிய நம்பிக்கை ஏற்பட் டதன் காரணமாகக் கடந்த மூன்று தினங்களில் 900 மில்லியன் அமெரிக்கடொலர் முதலீட்டு வருமானமாகக் கிடைத்துள்ள தென்று ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
திறைசேரி உண்டியல்களை யும், பிணை முறிகளையும் கொள்வனவு செய்ததன் மூலம் திங்கட்கிழமை முதல் புதன்கி ழமை வரையிலான மூன்று தினங்களில் மிகப் பெரிய தொகை வருமானமாகக் கிடைத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், இந்தத் தொகையானது சர்வதேச நாணய நிதியம் வழங்கிய முதற்கட்ட கடனை விட மூன்றுமடங்கு அதிகமானது என்று குறிப்பிட்டார். இதன் மூலம் இலங்கை இனி சர்வதேச நாணய நிதியத்திலோ வேறு நிதி நிறுவனங்களிலோ தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது புலனாகுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் (20) பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுடன் கலந்து கொண்டு பேராசிரியர் பீரிஸ் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.“திங்கட்கிழமை270 மில்லியனும், செவ்வாய்க்கிழமை 297 மில்லியனும், புதன்கிழமை 300 மில்லியனும் வெளிநாட்டு வருமானமாகக் கிடைத்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு ஐந்து நன்மைகள் கிட்டியுள்ளன. புலிகளின் தொலைத் தொடர்பு மற்றும் பொருளாதார வலையமைப்புகள் சிதைக்கப்பட்டதையடுத்து, இலங்கையின் பொருளாதாரத்தின் மீது சர்வதேசத்துக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், கொழும்பு ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு எடுக்க முடியாத அளவுக்கு நிரம்பி வழிவதாகவும் குறிப்பிட்டார்.அமைச்சர் யாப்பா தகவல் தருகையில், திருகோணமலை, கிளிநொச்சி மாவட்டங்களில் இரண்டு முதலீட்டு வலயங்களை ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளதாக கூறினார். மேலும் பல வலயங்களை உருவாக்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment