8/14/2009

செம்மண்ணோடை மீள்குடியேற்றக் கிராமத்தில் 28.5 மில். ரூபா செலவில் 30 வீடுகள் நிர்மாணம்



கிழக்கு அபிவிருத்தியில் ஒரு மைல்கல்லாக கிழக்கு உதயத்தின் கீழ் வீடமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய ஐ. ம. சு. கூட்டமைப்பு அரசாங்கம் நாட்டின் துரித அபிவிருத்தியில் மிகுந்த கரிசனை கொண்டு செயல்பட்டு வருகின்றது. இவ் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடமைப்புப் பணிகளும் இடம்பெற்றுள்ளன.
வீடுகள் திறப்பு விழா நிகழ்வின் போது இடம்பெற்ற கூட்டத்தில் அதிதிகள்.
மட்டு. மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் கோறளை மத்தி – வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் செம்மண் ஓடைக் கிராம மீள்குடியேற்ற வீடமைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.
கல்குடாத் தொகுதியில் செம்மண் ஓடைக் கிராமம் வறிய மக்களைக் கொண்ட மீள்குடியேற்றக் கிராமமாகும். கடந்த கால பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக இக்கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் இப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.
குறிப்பாக 1985, 1990 காலப் பகுதி வன்செயல்களினால் தத்தமது இருப்பிடங்களை விட்டும் செம்மண் ஓடை மக்கள் வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தற்போதைய அரசின் கிழக்கு மீட்பின் பின் இது ஒரு மீள் குடியேற்றத்துக்குட்பட்ட நிலையில் இக்கிராமம் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் காலடி எடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாவட்ட பா. உம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான எம். எஸ். எஸ். அமீர்அலியின் முயற்சி காரணமாக செம்மண்ஓடை வீடமைப்பு துரிதமாக நடைபெற்றுள்ளது.
திஷிகி நிறுவனத்தினால் கட்டப்பட்டு கையளிக்கப்பட்ட வீடுகளில் ஒன்று.
ஜேர்மன் நாட்டின் திஷிகி சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி மூலத்தில் இக்கிராமத்தின் வறிய மக்களுக்காக 30 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீடும் ஒன்பதரை இலட்சம் ரூபா செலவினத்தில் கட்டப்பட்டுள்ளது. 28.5 மில்லியன் ரூபா இதற்கென ஒதுக்கப்பட்ட தொகையாகும்.
இவ் வீடமைப்புப் பணிகளை முன்னெடுப்பதில் இப்பிரதேசத்தில் பெரும் பங்காற்றிய அமைச்சர் அமீர்அலியின் இணைப்பாளரும் சாட்டோ விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான வை. எல். மன்சூர், மற்றும் திஷிகி நிறுவனத்தின் பிரதிநிதியான எம். எஸ். குறைஸ், சாட்டோ கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர்.
இவ் வீடமைப்புத் திட்டத் திறப்பு விழா வைபவம் வை. எம். மன்சூர் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 2ந் திகதி சிறப்பாக இடம்பெற்றது. வீடுகளை உரிய குடும்பங்களுக்கு கையளிக்கும் நிகழ்வின் பிரதம அதிதிகளாக அமைச்சர்களான எம். எஸ். எஸ். அமீர்அலி, வீ. முரளிதரன் ஆகியோருடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர், மட்டு – மாநகர மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் மற்றும் திஷிகி நிறுவன உயர் மட்டப் பிரதிநிதிகள், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

0 commentaires :

Post a Comment