அகில இலங்கை கிரிக்கெட் சம்மேளனம் கல்வியமைச்சின் அனுமதியுடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வயதடிப்படையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியினை நடாத்திவருகிறது.
பதுளை பொது விளையாட்டு மைதானத்தில் 15 வயதின் கீழ்பட்ட மாணவர்களுக்காக நடைபெற்ற போட்டியில் ஏறாவூர் அலிஹார் தேசியப் பாடசாலை மாணவர்களும் பதுளை எல்லே தமிழ் மஹா வித்தியாலய மாணவர்களும் பங்குகொண்டனர்.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அலிஹார் தேசியப் பாடசாலை அணி 46.2 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எல்லே அணியினர் 25வது ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று தோல்வி கண்டனர்.
ஏறாவூர் அலிஹார் தேசியப் பாடசாலை அணியினர் ஏற்கனவே மட்டக்களப்பு, அம்வாறை பிரதேச மாணவர்கள் மத்தியில் விளையாடி வெற்றிபெற்று 4ம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் யூ. எச். முகம்மது தெரிவித்தார்
0 commentaires :
Post a Comment