8/25/2009

14 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றிய பிடெல் காஸ்ட்ரோ



கியூபா முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, 14 மாதங்களின் பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சுகவீனமடைந்து அறுவைச் சிகிச்சையொன்றுக்கு ஆளாகிய பிடெல் காஸ்ட்ரோ, அது முதற்கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாது இருந்து வருகிறார்.வெனிசுலாவைச் சேர்ந்த மாணவர்களுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடும் மேற்படி காட்சியானது கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்டதாக அதிகõரிகள் தெரிவித்தனர். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிடெல் காஸ்ட்ரோ மிகுந்த ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் காணப்பட்டார். மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர், அந்நாட்டு அரச ஊடகமான "ஜுவென்டட் ரெபல்டி' பத்திரிகையானது பிடெல் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது.அந்த புகைப்படமானது ஈகுவடோரின் இடதுசாரி ஜனாதிபதி ராபயல் கொர்ரியாவுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடுவதை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது

0 commentaires :

Post a Comment