8/31/2009

பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கையால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்



இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் தமக்கு தொழில் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல வருடங்களாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தற்போது அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே மீனவர்கள் இது தொடர்பாக கவலையடைந்துள்ளனர்.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடம் பொருத்தமற்றது என கூறும் கல்குடா மீனவர் சங்கத்தின் தலைவர் மயில்வாகனம் சுந்தரராஜா இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள போதிலும் இது வரை சாதகமான பதில் கிட்டவில்லை என்று கூறுகிறார்.
பொருத்தமான மாற்று இடத்தை வழங்கினால் தொழில் ரீதியான பாதிப்பில் இருந்து தங்களால் விடுபட முடியும் என அச்சங்கத்தின் செயலாளரான பெரியதம்பி நடராஜா சுட்டிக் காட்டுகின்றார்.
இவர்களின் இந்தப் பிரச்சினை குறித்து மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு பொருத்தமான மாற்று இடத்தை ஒதுக்கீடு செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

»»  (மேலும்)

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் துரித வாக்களிப்பு






ஜப்பான் பாராளுமன்றத் தேர்தல் நேற்று ஞாயி ற்றுக்கிழமை நடந்தது. காலநிலை மோசமாக இருந்த போதும் பெருமளவான மக்கள் வாக்க ளித்தனர். தொழிற்கட்சியின் ஐம்பது வருட ஆட்சி முடிவுக்கு வந்து நீண்ட காலங்களாக எதிர்க்கட் சியாகவுள்ள ஜனநாயகக் கட்சி இம்முறை ஆட் சியைப் பிடிக்குமென பெரும்பானலான மக்கள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலமாக ஜப்பானில் நிலையான ஆட்சி இருக்கவில்லை. ஆளும் கட்சிக்குள் உண்டான கருத்து மோதல் களால் அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். உலக நிதி நெருக்கடியால் கடுமையாக ஜப் பான் பாதிக்கப்பட்டமை, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் பாராளுமன்றத்தின் மேல் சபைக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநா யகக் கட்சி வென்றமை போன்ற காரணங்க ளைக் காட்டி எதிர்க்கட்சியின் வெற்றி நிச்சயப்ப டுத்தப்பட்டுள்ளது.
முன்னூறுக்கும் மேலான ஆசனங்களை எதிர்க்கட்சி பெறுமென எதிர்பார் க்கப்படும் நிலையில் சிலர் இதை அளவுக்க திகமான மிகைப்படுத்தல் எனவும் கூறி யுள்ளனர். ஆளும் கட்சியான தொழிலாளர் கட் சியும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற கடும் பிரயத்தனம் செய் கின்றன.
நாட்டில் என்ன நடக்கப் போகிற தென்பதைக் கூற முடியாது. ஆனால் ஒரு மாற் றத்துக்காக ஜனநாயக கட்சிக்கு வாக்களித்தேன். இவ்வாறு கூறினார் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர். வாக்குறுதிகள் அளித்தாற் போல் அனைத் தையும் ஜனநாயகக் கட்சியினர் செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.
தொழிற் கட்சி யைவிட ஜனநாயகக் கட்சி சிறந்தது. என உணர் ந்து வாக்களித்ததாகக் கூறினார். மற்றொரு வாக் காளர். சிறுவர்களுக்கான முற்பணக் கொடுப்ப னவு வீட்ரிமையாளர்களுக்கான கடன்கள் விவ சாயிகள் ஹய்வூதியத் திட்டம் போன்ற பல நலத் திட்டங்களை ஜனநாயகக் கட்சி முன்மொ ழிந்துள்ளது.
நீண்ட கால (ஐம்பது வருட) ஆட்சியில் வெறுப்படைந்த மக்கள் ஆட்சி மாற் றத்தை விரும்புவதாகக் கருத்துக் கணிப்பீடுகள் தெரிவிக் கின்றன.
ஏற்றுமதி வரியை ஐந்து வீதத்துக்கு மேல் அதி கரிப்பதில்லை என்றும் சனத்தொகை வளர்ச்சிக் கேற்ப வீணான செலவுகளைக் குறைக்கவுள்ள தாகவும் தொழிலாளர் கட்சி விஞ்ஞாபனம் வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கட்சிகளின் வாக்குகள் அறிவிக்கப்படவுள் ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
»»  (மேலும்)

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில்ஆளணி ஒழுங்கமைப்புப் பணிகள்




கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் தற்பொழுதுள்ள ஆளணி வெற்றிடங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாக அலுவலகம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகம் கே. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆளணி மீளாய்வு தொடர்பாக ஆராயப்பட்டதாக உதவிச் செயலாளர் எம். ஏ. அனஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதித்துள்ள ஆளணி வெற்றிடங்களுக்கமைவாக மீள் ஒழுங்கமைப்புப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல் நிறைவுற்றதும் ஆளணி ஒழுங்கமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
»»  (மேலும்)

இறக்காமம் குளத்தில் நன்னீர் மீன்பிடிப்புக்கெனஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் இறால் குஞ்சுகள்

நன்னீர் மீன்பிடித் தொழிலாளரின் பிரச்சினைகள் கடந்த காலங்களில் ஓரளவு தீர்க்கப்பட்டாலும் அச்சமூகம் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து விடுபட்டு இவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்ததை உணர்த்த எமது மாண்பு மிக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இச்சமூகத்தின் பிரச்சினைகளை உள்வாங்கி உயர்ந்த அந்தஸ்துள்ள சமூகமாக மாற்றியமைப்பதில் அக்கறையுடன் உழைத்து வருகின்றார்.

)
அந்த வகையில் இறக்காமம் பிரதேச நன்னீர் மீனவர் சமூகத்தின் நன்மை கருதி புதிய தொழில் நுட்ப முறைக்கு ஏற்றவாறு மீனவ தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்பதிலிருந்து ஒரு படி மேல் சென்று இறால்களை வளர்ப்பதன் மூலம் இச்சமூகத்தின் வாழ்வாதாரத்தில் உச்சப் பயனைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக இறக்காமம் குளத்தில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் இறால் குஞ்சுகளை விடுவிக்கும் வைபவம் அண்மையில் இறக்காமம் நன்னீர் மீனவ சங்க அலுவலக முன்றலில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, கிராமிய கைத்தொழில் மீன்பிடித் துறை அமைச்சர் ரி. நவரட்ணராஜா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாணமும், கிராமிய மின்சாரம், மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறக்காமம் நன்னீர் மீனவர் சங்கத்தின் உப தலைவர் ஏ. எம். சதாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் ரி. நவரட்ணராஜா உரையாற்றுகையில் :-
நமது நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை முற்றாக ஒழிக்கப்பட்டு ஒரு சமாதான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் நிம்மதிப் பெருமூச்சை விடுவதற்கு வழியமைத்த எமது மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி கட்டமைப்பு வேலைகளில் தன்னை அர்ப்பணித்து இப்பிரதேசத்திற்காக இரவு பகலாக உழைத்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷவை என்றுமே மறக்க முடியாது.
கடந்த 30 வருடங்களாக கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி ஆகியவற்றில் மிகவும் பின்தங்கி காணப்பட்ட கிழக்கு மாகாணத்தை சகல துறைகளிலும் வளம் மிக்கதாக கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தி வருகின்றோம். மக்களின் நலனுக்காகவே இரவு பகலாக பணியாற்றி வருகின்றோம். மக்களின் காலடிக்கு வந்து நாங்கள் சேவையாற்றுவதால்தான் இன்று மத்திய அரசு அடிக்கடி எமது மக்களுக்காக வளங்களை தந்து கொண்டிருக்கின்றது.
இந்த இடத்தில் நான் உங்களிடம் மிகவும் வினையமாக வேண்டிக் கொள்ளும் விடயம் தமிழர் - முஸ்லிம் - சிங்களவர் என்ற இன வேறுபாடின்றி ஒரே கொடி, ஒரே மக்கள், ஒரே இல்லம் என்ற நமது ஜனாதிபதியின் கோரிக்கைக்கிணங்க செயற்படுங்கள்.
இந்த நாட்டில் மனித இனம் மட்டும்தான் வாழ முடியும். முஸ்லிம், தமிழர், சிங்களவர் என்ற இன வேறுபாடுகள் களையப்பட வேண்டும். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து நமது எதிர்கால சந்ததிகளுக்காக உழைக்க வேண்டும்.
நமது எதிர்கால சந்ததிகள் துப்பாக்கி என்றால் என்ன என்று கேட்கின்ற ஒரு காலம் வரவேண்டும். ஒன்றிணைந்து செயற்பட்டு பாரிய அபிவிருத்தியைக் காணுவோம் என்று எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடிக்கடி கூறுவதற்கேற்ப நாம் எமது நாட்டிலேயே உற்பத்திகளை மேற்கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தொடர்ந்தும் வெளிநாடுகளிலிருந்து அரிசியையும், பால் மாவையும் இறக்குமதி செய்ய இடமளிக்கக்கூடாது.
இக்குளத்தில் விடப்படுகின்ற ஒரு இலட்சத்து 25 ஆயிரம் இறால் குஞ்சுகள் 06 மாதங்களின் பின்னர் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் உங்களின் வாழ்வாதாரத்திற்காக அவை உதவும். எனவே மூன்று கோடி ரூபா பணத்தை இக்குளத்தில் இருப்புச் செய்திருக்கின்றோம்.
மஹிந்த சிந்தனைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தி மக்கள் பயனடைவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை உரை யாற்றுகையில்:- கிழக்கு மாகாணத் தில் மக்கள் நினைத்த படி தாம் விரும்பிய இடங்களுக்கு சுதந்திரமா கச் சென்று தமது காரியங்களை நிறைவேற்றி வருவதற்கு எங்களை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறு செயற்பட வாய்ப்பினைப் பெற்றுத் தந்தவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தான்.
இறக்காமம் பிரதேசத்திற்குத் தேவையான அனைத்தையும் பெற்றுத் தருவதற்கு நாம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் திருமதி ஆர். யூ. அப்துல் ஜலீல், மாகாண மீன்பிடி பிரதிப் பணிப்பாளர் சுதாகரன், மாவட்டட நீரியல்வள மீன்பிடி உத்தியோகத்தர் எம். எல். எம். இம்தியாஸ் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ். எல். எம். ஜமால்டீன், எஸ். ரி. நெய்ந்தர் லெவ்வை (சலீம்), ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சரின் இறக்காமம் பிரதேச இணைப்பாளர் ஜே. கலீலுர் ரஹ்மான், இறக்காமம் நன்னீர் மீன்பிடி சங்க செயலாளர் எஸ். அப்துல் லதீப், மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
»»  (மேலும்)

.கிழக்கில் ஐக்கியம்நிலவுகிறது. இங்கிருந்து தொடங்கித்தான் நாம் எமது பயணத்தை நகர்த்த வேண்டும்





மக்காவுக்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் பயணம் போன்றது நாட்டின் சமாதானப் பயணம். அதனைப் போன்று அமைச்சர் அதாவுல்லா இக்கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-
அமைச்சர் அதாவுல்லா பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் பேசிவருபவர். இலங்கைத் தீவில் அனைத்து மக்களினதும் அபிமானத்தை பெற்றவர்.
கடந்த யாழ் மாநாகர சபைத் தேர்தலில் அவர் அங்கு வந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை நாம் குறிப்பிட வேண்டும். அத்தகைய ஒருவரை நீங்கள் தலைவராகக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
டந்த கால வரலாறுகள் இரத்தத்தினால் எழுதப்பட்டவை. அந்த யுகம் முடிந்தது. நமக்கு இன்று ஒரு வரலாற்றுக் கடமையுள்ளது. நாம் ஒன்று திரண்டு இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
சகல இன, மத மக்களும் சரிசமமாக வாழும் சூழல் நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு சிறந்த அரசியல் தீர்வொன்று அவசியம்.கிழக்கில் இன்று சிறந்த மாகாண சபை உருவாக்கப்பட்டு ஐக்கியம் நிலவுகிறது. இங்கிருந்து தொடங்கித்தான் நாம் எமது பயணத்தை நகர்த்த வேண்டும்.
எமது எண்ணங்களை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் கட்டியெழுப்பப்படுகிறது.
புலிகளின் தலைமை பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்பதை நன்கு உணர்ந்தவர் நமது ஜனாதிபதி. புலிகளின் யுகம் முடிந்து விட்டது. ஜனாதிபதியின் கரத்தை நாம் அனைவரும் பலப்படுத்த வேண்டும். சகல தலைவர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

»»  (மேலும்)

8/30/2009

தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு


தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநா டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த் தும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று அக்கரைப்பற்று பொது விளையாட்ட ரங்கில் விமரிசையாக நடைபெற்றன.
நேற்றுப் பிற்பகல் 2.00 மணியளவில் தேசிய மற்றும் கட்சிக் கொடியேற்றலுடன் ஆரம்ப மான இந்நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட துடன் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா, அமைச்சர்கள் மேர்வின் சில்வா, டக்ளஸ் தேவா னந்தா, பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள் மத வழி பாடுகளை நிகழ்த்தினர். விழாவை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையில் கட்சிப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டு கட்சிக் கான நடப்பு வருட உறுப்பினர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. அத்துடன் அரசியல் கவுன் ஸில் உறுப்பினர்களின் பெயர்களும் வாசிக்கப்ப ட்டதுடன் இவ்வுறுப்பினர்களை அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா மேடையில் வரவேற்றார்.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலு மிருந்து சகல இன மதங்களையும் சார்ந்த பல்லா யிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இம்மாநாட் டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதான உரைநிகழ்த்தியதுடன் தேசிய காங்கிரசின் தலை வர் ஏ. எல். எம். அதாவுல்லா சிறப்புரை நிகழ் த்தினர். மாநாட்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ஏ. எல். எம். அதா வுல்லா விருது வழங்கி கெளரவித்தார்.
மாநாட்டில் கட்சியின் இதழான ‘பரிவ ட்டம்’ உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக் கப்பட்டது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி தமதுரை யில் மேலும் தெரிவித்ததாவது:
2005 ஆம் ஆண்டு நான் அக்கரைப்பற் றிற்கு வருகை தந்த போது இங்கு வீசிய காற்றைப் பாரமானதாக உணர்ந்தேன். இன்று அது இலகுவாகி சுதந்திரக் காற்று வீசு வதைக் காண முடிகிறது.
இந்த நாட்டை உடன்படிக்கை மூலம் துண்டாடிய யுகம் மாறி இந்த நாட்டை எம்மால் மீள ஐக்கியப்படுத்த முடிந்துள்ளது.
தேசிய காங்கிரஸின் மாநாட்டிற்கு இன்று வருகைதந்து இங்குள்ள மக்களை சந்தி ப்பதில் பெருமையும் மகிழ்ச்சியுமடைகின் றேன்.
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் போல் வாழ்கின்றனர். நாம் எல்லோரும் ஒரு தாயின் மக்கள் எம்மத்தியில் எந்தவித பேதமும் இருக்க முடியாது.
முப்பது வருடகால பயங்கரவாதம் முடி வுக்குக் கொண்டுவரப்பட்டு இன்று நாட் டில் சந்தேகமின்றி அச்சமின்றி சகலரும் வாழும் நிலை உருவாகியுள்ளது. காத்தான் குடி பள்ளிவாசலில் இடம்பெற்றது போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் இனி எங்கும் நடக்காது.
கிழக்கில் வயலுக்குத் தொழிலுக்குப் போகி ன்றவர்களும், பாடசாலைக்குப் போகின்ற மாணவர்களும் கூட அச்சத்துடனும் பயத் துடனும் வாழ்ந்த காலம் இருந்தது. இன்று அந்நிலை இல்லை.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன வாத அரசியல் இந்த நாட்டுக்கு உகந்த தல்ல. இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தேசத்தின் மீது அன்பு செலுத்தும் மக்கள் இந்த நாட்டின் பிள்ளைகளே.
நான் முதல் இரண்டாவது, மூன்றாவது என முழுமையாக நேசிப்பது இந்த நாட் டைத்தான். நாட்டு மக்களும் அப்படியே நாட்டை நேசிக்க வேண்டும். எந்தத் தீர் மானம் எடுத்தாலும் அது குறுகிய தீர் மானமாக இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் வேண்டாம்.
அமைச்சர் அதாவுல்லா ஒரு சிறந்த தலைவர். உங்கள் தலைவர் அவர் முழு நாட்டிற்கும் சேவை செய்யும் திறன் படைத்த செயல்வீரர்.
கிழக்கின் உதயம் மூலம் இப்பகுதி அபிவிருத்தி காணப்படுகிறது. உங்கள் எதிர் காலம் ஒளிமயமாவது நிச்சயம். இந்தவேளை யில் நாம் மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பை நினைவு கூருவது சிறந்தது.
முஸ்லிம் மக்கள் என்னிடம் கேட்டதை யெல்லாம் நான் நிறைவேற்றியுள்ளேன். இன்று எமது அரசில் உள்ள சகல முஸ்லி ம்களும் அமைச்சர்கள் என்பதை மறக்கக் கூடாது.
கிழக்கில் தனியான மாகாண சபையொ ன்று இப்போது இயங்குகிறது. ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இது உங்களுக்கான பெரும் வரப்பிரசாதம் ஆகும்.
நான் முஸ்லிம்களின் மத வழிபாட்டுக் குத் தடைபோடுவதாக பலர் பொய்ப் பிர சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனை நீங்கள் நம்பவேண்டாம். இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஐந்து தட வைகள் ‘பாங்கு’ சொல்வதற்கு வழிவகை செய்தவன் நானே என்பதை மறந்துவிட வேண்டாம். நான் உங்கள் உற்றதோழன் நீங்கள் என்னை நம்பலாம்.
இந்த மாகாணம் 30 வருடங்களாக பாதிக்கப்பட்டு இன்று முழு மாகாணத்தி லும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. உங்கள் வெற்றி உங்கள் பிள்ளைகளின் வெற்றியும் நாட்டின் வெற்றியுமாகும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

»»  (மேலும்)

ஹொன்டுராஸ் சதிப் புரட்சி திடீர்த் திட்டமிடலின் விளைவு:சிவில் யுத்தத்துக்கு வழிவகுக்கலாம்



ஹொன்டுராஸ் இராணுவம் அந்நாட்டு ஜனாதிபதி மனுவெல் ஷெலாயாவை யூன் 29ந் திகதி பதவியிலிருந்து இறக்கி இரவோடிரவாக அவரை ஒரு விமானத்தில் ஏற்றிக் கொஸ்ரா றிக்காவுக்கு நாடு கடத்தியது. உப ஜனாதிபதியாக இருந்த றொபேர்டோ மைக்கலெற்றி உடனடியாக ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இது ஒரு இரத்தம் சிந்தாப் புரட்சி என்று ஹொன்டுராஸ் இராணுவம் அறிவித்தது.
n~லாயா
ஹொன்டுராஸ் லத்தீன் அமெரிக்காவில் எழுபது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு வறிய நாடு. 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ஷெலாயா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இப்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மைக்கலெற்றியும் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர். லிபரல் கட்சி பணக்காரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி. இக் கட்சியின் வேட்பாளராக வெற்றி பெற்ற ஷெலாயா சில முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்க முனைந்ததையிட்டுக் கட்சியின் மேட்டுக்குடி முக்கியஸ்தர்கள் அதிருப்தியுற்றிருந்தனர்.
தொழிலாளரின் ஆரம்ப சம்பளத்தை ஷெலாயா மாதமொன்றுக்கு 170 டொலரிலிருந்து 280 டொலராக அதிகரித்தார். லிபரல் கட்சியின் முக்கியஸ்தர்களாக உள்ள தொழிலதிபர்கள் இதனால் சீற்றமடைந்தனர். இச் சீற்றத்தை அதிகரிப்பது போல அரசியலமைப்பில் மாற்றம் செய்வதற்கும் ஷெலாயா முன்வந்தார். அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிக்கு இவ்வாறான செயல்களே வித்திட்டன எனக் கூறலாம்.
ஷெலாயாவுக்கு எதிரான சதி திடீர்த் திட்டமிடலுடன் மேற்கொள்ளப்பட்டது போலவே தெரிகின்றது. அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கட்டுப்படுத்தாத (னிon binனீing) சர்வசன வாக்கெடுப்புக்காக வாக்குப் பெட்டிகளையும் ஏனைய ஆவணங்களையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல இராணுவம் மறுத்துவிட்டது. இதற்காக இராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்த ஷெலாயா வேறு ஏற்பாட்டின் மூலம் வாக்குப் பெட்டிகளையும் ஏனைய ஆவணங்களையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார். பிரச்சினை
ஹிலாரி
உடனடியாகவே உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. இராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்ததும் சர்வசன வாக்கெடுப்பும் சட்டவிரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஷெலாயா மதிக்கவில்லை. அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதில் ஷெலாயா தீவிரமாக இருந்தார்.
தற்போதைய அரசியலமைப்பு 1982ம் ஆண்டு இராணுவ ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்பட்டது. இராணுவத்துக்கும் மேட்டுக் குடியினருக்கும் சாதகமான முறையிலேயே இது தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து உச்ச நீதிமன்றம் இராணுவத்துக்கும் மேட்டுக்குடியினருக்கும் சார்பாகவே செயற்பட்டு வந்தது. சாதாரண மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வது ஷெலாயாவின் நோக்கம். பெரும்பான்மையான மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகுமென அவர் நம்பினார். ஆனால் இராணுவம் என்ன செய்யும் என்பது பற்றிச் சிந்திக்கவில்லை. சர்வசன வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்குச் சில மணித்தியாலயங்களுக்கு முன் இராணுவம் அவரின் பதவியைப் பறித்தது.
யூலை 5ந் திகதி நாட்டுக்குத் திரும்புவதற்கான ஒரு முயற்சியை ஷெலாயா மேற்கொண்டார். ஆனால் அவர் பயணம் செய்த விமானம் தரையிறங்குவதை ஹொன்டுராஸ் விமானப் படை தடுத்ததால் அந்த விமானம் நிகரகுவாவுக்குத் திரும்பிச் சென்றது. அவரை வரவேற்பதற்கு விமான நிலையத்துக்கு வந்திருந்த மக்கள் இராணுவத்தினால் அடித்து விரட்டப்பட்டனர்.
ஹொன்டுராஸ் இராணுவம் அமெரிக்காவின் ‘செல்லப்பிள்ளை’ எனக் கூறலாம். இராணுவச் செலவினங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வருவதோடு அதிகாரிகளுக்குப் பயிற்சியும் அளிக்கின்றது. இந்த வருடம் ஹொன்டுராஸ¤க்கு அமெரிக்கா ஐந்து கோடி டொலர் உதவி வழங்கியது. ஹொன்டுராஸ் தலைநகரிலிருந்து நூறு கிலோ மீற்றர் தூரத்துக்குள் அமெரிக்காவின் இராணுவத் தளமொன்று இருக்கின்றது. ஹொன்டுராஸில் ஷெலாயாவைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்ரன் சர்வசன வாக்கெடுப்பு பற்றியும் வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவெஸ்ஸ¤டன் அவர் கொண்டிருக்கும் நட்பு பற்றியும் அவரை எச்சரித்ததாகச் சில ஊடகங்களில் தகவல் வெளி யாகியிருக்கின் றது.
மைக்கலெற்றி
இவை எல்லாவற்றை யும் ஒன்றுசேர்த் துப் பார்க்கும் போது ஹொன்டுராஸ் சதிப் புரட்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு இருந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால், ஹொன்டுராஸ் ஆட்சி மாற்றம் சட்டவிரோதமானது என்றும் இதை அங்கீகரித்தால் ஜனநாயகம் அர்த்தமற்றதாகிவிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியிருக்கின்றார்.
ஒபாமா வெளியிட்ட கருத்து அமெரிக்காவின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடென்றால், இராஜாங்கத் திணைக்களம் அதை அறிவித்திருக்க வேண்டும். அப்படியான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. குறைந்த பட்சம் ஹொன்டுராஸ¤க்கான உதவிகளை நிறுத்துவதாகவாவது அறிவித்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. அமெரிக்கா வெளிப்படையாக என்ன சொன்னாலும் நடைமுறையில் ஹொன்டுராஸ் இராணுவத்துக்குச் சார்பாகச் செயற்படுகின்றது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
அமெரிக்க நாடுகளின் ஸ்தாபனம் (லி. தி. ஷி) ஹொன்டுராஸ் சதிப் புரட்சியை வன்மையாகக் கண்டித்திருப்பதோடு ஷெலாயாவை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்த இராணுவப் புரட்சியைக் கண்டித்திருக்கின்றன. உள்ளூரில் மக்களின் எதிர்ப்பும் பலத்து வருகின்றது. இதேநேரம் இராணுவத்தின் ஒரு பகுதியினர் புரட்சியாளருக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதற்கான சமிக்ஞைகள் தென்படுவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் ஷெலாயா ஏதேனுமொரு விதத்தில் நாட்டுக்குத் திரும்பினால் தங்களுக்கு ஆபத்து என்று இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். ஷெலாயா நாட்டுக்குத் திரும்புவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவுவது போல உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பொன்று அண்மையில் வெளியாகியிருக்கின்றது. ஷெலாயா நாட்டுக்குத் திரும்பினால் அரசியலமைப்பை மீறியதாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும், நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே அவர் நாட்டுக்குத் திரும்பலாம் என்றும் உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
பெரும்பாலான மக்கள் ஷெலாயாவுக்கு ஆதரவாக அணி திரண்டிருப்பதையும் இராணுவத்தில் ஒரு பகுதியினர் மத்தியில் தோன்றியுள்ள மறுசிந்தனையையும் உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பையும் நாட்டுக்குத் திரும்பி மக்களை அணிதிரட்டிப் பேராட வேண்டும் என்பதில் ஷெலாயா உறுதியாக இருப்பதையும் கவனத்தில் எடுத்துப் பார்க்கையில், ஹொன்டுராஸ் சிவில் யுத்தத்தை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வியே எழுகின்றது.


»»  (மேலும்)

அக்கரைப்பற்றில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இளம் குடும்பஸ்த்தர் மீது துப்பாக்கி சூடு

அக்கரைப்பற்று ஆர்.டி.எ. வீதி தம்பிலுவில்லைச்சேர்ந்த யோகநாதன் சுரேஸ்குமார்(31) என்பவர் தனது வீட்டில் இருந்தவேளை இன்று இரவு 10 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த இனந்தெரியாத ஆயுதம் தரித்த நபர்களினால் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கெண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இவர் தற்போது படுகாயம் அடைந்த நிலையில் அக்கரைப்ற்று எழுவட்டுவான் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

»»  (மேலும்)

அறுபது வருடத் தலைமை தோற்று விட்டது: மக்கள் மாற்றத்துக்கு தயாராக வேண்டும்




சுதந்திர இலங்கையில் ஆறு தசாப்தங்களுக்கு
மேலாகத் தமிழ் மக்களை வழிநடத்திய தலைமை ‘தோல்வியடைந்த தலைமை’ என்ற நிலைக்கு இன்று வந்திருப்பதால், தமிழ் மக்கள் தாங்கள் நடந்துவந்த பாதையை மீள்பரிசீலனை செய்து பொருத்தமான முடிவுக்கு வர வேண்டியவர்களாக உள்ளனர்.
தமிழ் பேசும் மக்கள் இன்றைய தங்கள் நிலையையும் அரசியல் நிலையையும் மிக நிதானத்துடன் கவனத்துக்கு எடுத்துத் தீர்மானத்துக்கு வர வேண்டியவர்களாக உள்ளனர். தேசிய அரசியலையும் சமூகம் சார்ந்த அரசியல் நிலையையும் தனித்தனியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேசிய அரசியலில் எதிர்க் கட்சி இல்லை என்ற நிலை இப்போது நிலவுகின்றது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றது. கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்டங்கட்டமாக அரசாங்கத்தில் இணைந்துகொள்வது ஒருபுறமிருக்க, அடிமட்ட ஆதரவாளர்களும் சாரிசாரியாகக் கட்சி மாறுகின்றனர். இந்த இறங்குபடிப் போக்கைத் தடுத்து நிறுத்தும் திறமை இல்லாதவராகக் கட்சியின் தலைவர் இருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் இருப்பது மக்கள் விடுதலை முன்னணி. இது செயற்கை அந்தஸ்து. இயல்பான பலத்தைக் குறிக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததாலேயே பாராளுமன்றத்தில் இவர்களுக்கு இந்த எண்ணிக்கை கிடைத்தது. அடுத்த தேர்தலில் தனியாகப் போட்டியிடும் போது குட்டு வெளிப்படும்.
தேர்தல் பந்தயத்தில் இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தான் உருப்படியான ஒரேயொரு குதிரை. எதிரணிக் கட்சிகள் தனித்தனியாக வந்தாலென்ன, கூட்டணி அமைத்து வந்தாலென்ன தலைதூக்கக் கூடிய நிலைமை இப்போது இல்லை. இந்தப் பின்னணியிலேயே தமிழ் பேசும் மக்கள் தங்கள் சமூகம் சார்ந்த அரசியலை நோக்க வேண்டியுள்ளது.
பல முஸ்லிம் தலைவர்கள் இன்று அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்களும் இருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் இன்றைய அரசியல் யதார்த்தத்தைச் சரியாக விளங்கிக்கொண்டுள்ளனர். அதனால் தான் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்குப் பொருத்தமான கட்சியுடன் சேர்ந்து செயற்படுகின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் ஸ்தாபகர் அஷ்ரஃபின் பெயரை உச்சரிப்பதன் மூலமே அரசியல் அரங்கில் தொடர்ந்து இருக்கின்றது. ஆனால் அவரது நோக்கத்துக்கு முரணாகவே செயற்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியினால் சிறுபான்மையினருக்கு விமோசனம் இல்லை என்பதில் அஷ்ரஃப் மிகவும் தெளிவானவராக இருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியின் நிழலில் சஞ்சரிப்பதையே விரும்புபவர் போல் தெரிகின்றது.
ஹக்கீம் தலைமையேற்ற பின் எந்தத் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்துப் போட்டியிடவில்லை. பெரும் பாலும் யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டது. மரச் சின்னத்தில் போட்டியிட்ட வேளைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அணியாகவே போட்டியிட்டது. முஸ்லிம் காங்கிரஸ் என்றால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் மறுபதிப்பு என்ற நிலைக்கு இன்றைய தலைமை காங்கிரஸைக் கொண்டு வந்துவிட்டது.
தமிழ் மக்களின் அரசியல் முக்கியமான ஒரு திருப்புமுனைக்கு வந்திருக்கின்றது. சுதந்திர இலங்கையில் ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் மக்களை வழிநடத்திய தலைமை ‘தோல்வியடைந்த தலைமை’ என்ற நிலைக்கு இன்று வந்திருப்பதால், தமிழ் மக்கள் தாங்கள் நடந்துவந்த பாதையை மீள்பரிசீலனை செய்து பொருத்தமான முடிவுக்கு வர வேண்டியவர்களாக உள்ளனர்.
அறுபது வருடங்களுக்கு மேலாகத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக் கட்சியும் தனித்தும் கூட்டாகவும் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகச் செயற்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இது போதுமான காலம். குறைந்தபட்சம் தீர்வை நோக்கிய நகர்வாவது இக் காலத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் தீர்வு முயற்சி வெகுவாகப் பின்தள்ளப்பட்டிருப்பதே இத் தலைமையின் அறுவடையாக உள்ளது. இந்த நிலைமைக்கான காரணம் என்ன என்பதையிட்டுத் தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.
தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக் கட்சியும் தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்குச் சென்றார்களேயொழியத் தமிழ் மக்களின் தலைவர்களாகச் செயற்படவில்லை. இக்கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளிலும் பார்க்கத் தங்கள் சொந்த அபிலாஷைகளுக்கே முன்னுரிமை அளித்துச் செயற்பட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் நல்லுறவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் இடதுசாரிக் கட்சிகளுடனும் முரண்பாடும் இவர்களினது அணுகுமுறையின் அடிப்படை அம்சமாக இருந்தது. தமிழரசுக் கட்சி அதன் ஆரம்ப நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் பங்கு பற்றிய போதிலும் அது அடிப்படையில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதெனத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே தமிழரசுக் கட்சி. அதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டைத் தமிழரசுக் கட்சி ஆரம்பத்தில் எடுத்தது.
காலப் போக்கில் நிலைமை மாறி இரண்டு கட்சிகளுமே ஐக்கிய தேசியக் கட்சியின் நேச அணிகள் போலச் செயற்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை இவ்விரு கட்சிகளும் இரண்டாவது இடத்துக்குத் தள்ளியதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் இடதுசாரிக் கட்சிகளினதும் கூட்டாட்சிக் காலத்தில் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அத் தீர்மானத்தைக் கைவிட்டு மாவட்ட சபைகளை ஏற்றுக்கொண்டதும், தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்து எதிர்க்கட்சி ஆகியதும் கூட்டணி மீண்டும் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலைத் தூக்கிப் பிடித்ததும் பிரதானமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை.
இத் தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்குத் தலைமை வகிக்கவில்லை. உண்மையாகவே தலைமை வகித்திருந்தால் இனப் பிரச்சினை இன்றைய அளவுக்கு வளர்ந்திருக்காது. இத் தலைவர்கள் ஆடிய நாடகத்தின் இறுதிக் கட்டம் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பட்டதாகும். இச் செயற்பாடு தமிழ் மக்களை அரசியல் அந்தகாரத்தில் தள்ளியதோடு அறுபது வருட காலம்u கோலோச்சிய தலைமையைத் ‘தோல்வியடைந்த தலைமை’ என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் புதிய தலைமை பற்றியும் புதிய பாதை பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.
மேலே கூறியது போல, இன்று அரசியல் அரங்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்திரமே ‘உருப்படியான குதிரை’. அரசியல் தீர்வுக்கான தமிழ் மக்களின் முயற்சி இதனுடன் இணைந்ததாக இருக்க வேண்டியது தான் இன்றைய யதார்த்தம்.
பிரதான அரசியல் கட்சிகள் என்ற வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் எடுத்துப் பார்த்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பக்கமே தமிழ் மக்கள் திரும்ப வேண்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி எந்தக் காலத்திலும் இனப் பிரச்சினையின் தீர்வுக்குச் சாதகமாகச் செயற்படவில்லை. இனப் பிச்சினை பற்றிப் பேசித் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் கண்ணுங்கருத்துமாக இருக்கின்றதேயொழியப் பிரச்சினையின் தீர்வுக்கு ஒத்துழைக்கும் நோக்கம் சிறிதளவும் இல்லை. தீர்வுக்கான திட்டம் எதையும் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படுத்தவில்லை. இனியும் வெளிப்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அதனிடம் ஒரு திட்டமும் இல்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்வு பற்றிப் பேசுகின்றது. அதனிடம் தீர்வுக்கான திட்டமும் இருக்கின்றது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதும் பின்னர் அதனிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்துவதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திட்டம். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மேலான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. அப்பெரும்பான்மையைப் பெறுவதற்கான சாத்தியம் இப்போது இல்லாததாலேயே கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு பின்போடப்படுகின்றது.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றாக்குறைத் தீர்வு என்பதால் அதை நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சில தீவிர இடதுசாரிகளும் கூறுகின்றனர். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் இனப் பிரச்சினைக்குப் போதுமான தீர்வல்ல என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்றைய நிலையில் அதை நிராகரிப்பது சரியானதா என்பதே நம் முன்னாலுள்ள கேள்வி.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை நடைமுறைப்படுத்துவதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை. இந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தத்தைத் தற்காலிகமான ஏற்பாடாக ஏற்பதால் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை. இப்போது அவர்கள் அனுபவிக்கும் துன்பம் தீர்வதற்கு இதனால் வழி ஏற்படும். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியும். வழமையான தொழில்களை இழந்தவர்கள் மீண்டும் அத் தொழில்களைப் புரிய முடியும். பாதுகாப்பு தொடர்பான சில நெருக்கடிகள் நீங்குவதற்கும் இடமுண்டு. இவற்றோடு மாகாண மட்டத்திலேயே சில விடயங்களைக் கையாள்வதற்கான புதிய அதிகாரங்களையும் மக்கள் பெறுவார்கள்.
எனவே, பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழான மாகாண சபையை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு அதனிலும் பார்க்கக் கூடுதலான தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிப்பது தான் இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை.
பதின்மூன்றாவது திருத்தம் போதாது என்றும் அதை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறுபவர்கள் அதனிலும் மேலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். அதை நிறைவேற்றுவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிவகைகளையும் மக்களுக்குக் கூற வேண்டும். அவ்வாறன்றி, அந்தத் திருத்தம் போதாது இந்தத் திருத்தம் போதாது என்று வெறுமனே பேசுவதும் எழுதுவதும் மக்களை உணர்ச்சிவசப்படுத்த உதவுமேயொழிய அவர்களுக்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை.
இப்படிப் பேசிப் பேசியே தலைவர்கள் தமிழ் மக்களை இன்றைய அவல நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். இந்த வரலாறு இனித் தொடரக் கூடாது. மக்கள் மாற்றத்துக்குத் தயாராக வேண்டும்.
»»  (மேலும்)

8/29/2009

முரண்பாடுகளுக்கான தீர்வின் படிக்கல் சிறுவர் ஒன்று கூடலாகும்



- J.M.அஸார் B.A (கந்தளாய்)
எமது நாடு வன்முறைகளாலும், அச்சுறுத்தல்களாலும், பேராசை, சூழல் மாசடைதல், பலவிதமான தொற்று நோய்கள் போன்றவற்றினாலும் அலைகழிக்கப்பட்ட வண்ணமுள்ளது. அது மாத்திரமன்றி, சுதந்திரம் கிடைத்த நாள் தொடக்கம் அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பயனற்ற திட்டங்களினாலும், செயல் திறனற்ற நிர்வாகக் கட்டமைப்பினாலும், பிறரது ஏளனத்திற்கும் நகைப்பிற்கும் நம் நாடு இலக்காகி வந்துள்ளது. வலுவடைந்து வரும் உலகமயமாக்கலின் சவால்களை வென்று எமது நாட்டை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் அவ்வாறெனின், புதியதொரு கண்ணோட்டத்தினூடாக, பன்முகக் கலாச்சாரங்களின் மீதும் பல்லினத் தன்மையின் மீதும் கட்டியெழுப்பபட்ட மனித நேய அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டடைய வேண்டியது இன்று நமக்கு மிக அவசரத் தேவையாக உள்ளது.இந்தளவிற்கு எண்ணிலடங்காத கொலைகளும் வன்முறைகளும் நடந்து முடிந்த பிறகும் கூட நீடித்த, உறுதியான சமாதானத்தை எவ்வாறு நாம் ஏற்படுத்துவது?இடைவிடாது தொடர்ந்த இந்த அர்த்தமற்ற மோதலின் காரணமாக சகல இன மக்களும் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். - J.M.அஸார் B.A (கந்தளாய்)

எமது நாடு வன்முறைகளாலும், அச்சுறுத்தல்களாலும், பேராசை, சூழல் மாசடைதல், பலவிதமான தொற்று நோய்கள் போன்றவற்றினாலும் அலைகழிக்கப்பட்ட வண்ணமுள்ளது. அது மாத்திரமன்றி, சுதந்திரம் கிடைத்த நாள் தொடக்கம் அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பயனற்ற திட்டங்களினாலும், செயல் திறனற்ற நிர்வாகக் கட்டமைப்பினாலும், பிறரது ஏளனத்திற்கும் நகைப்பிற்கும் நம் நாடு இலக்காகி வந்துள்ளது. வலுவடைந்து வரும் உலகமயமாக்கலின் சவால்களை வென்று எமது நாட்டை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் அவ்வாறெனின், புதியதொரு கண்ணோட்டத்தினூடாக, பன்முகக் கலாச்சாரங்களின் மீதும் பல்லினத் தன்மையின் மீதும் கட்டியெழுப்பபட்ட மனித நேய அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டடைய வேண்டியது இன்று நமக்கு மிக அவசரத் தேவையாக உள்ளது.

இந்தளவிற்கு எண்ணிலடங்காத கொலைகளும் வன்முறைகளும் நடந்து முடிந்த பிறகும் கூட நீடித்த, உறுதியான சமாதானத்தை எவ்வாறு நாம் ஏற்படுத்துவது?

இடைவிடாது தொடர்ந்த இந்த அர்த்தமற்ற மோதலின் காரணமாக சகல இன மக்களும் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனாலும், ‘அடைமழையும் ஒரு நாள் நின்றாக வேண்டும் அவ்வாறே நீடித்த யுத்தமும் ஒரு நாள் முடிவுக்கு வந்தாக வேண்டும்’ என்ற முதுமொழியில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த நம்பிக்கையுடன் சகல இன மக்களுக்கும் சௌபாக்கியத்தையும் சமாதானத்தையும் பெற்றுத் தருவது என்ற திடமான மன உறுதியுடன் மாற்று முன்மாதிரிகளை நாம் பயன்படுத்த வேண்டும். இந்த வகையில், இன்றைய முரண்பாட்டையும் தாண்டி எமது தேசத்தை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கு நம்மால் நிச்சயம் முடியும்.

தேசத்தை மீளக்கட்டியெழுப்பும் பணியானது மிகவும் சிக்கலானது சிரமமானது என்பதும், அவை நம்மை மிகவும் களைப்படையச் செய்யக்கூடிய கடினமான பணி என்பதும் நிச்சயம். இருப்பினும், சகல மதங்களையும் சார்ந்த மக்களும் ஒன்றுபட்டு ஈடுபடும் பட்சத்தில் அவ்வாறான கடினமான பணியையும் கூட நம்மால் நிச்சயம் செய்ய முடியும். இந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்றுக்கள் தற்போது நமக்குத் தெரிய ஆரம்பித்துள்ளன.

நமக்கு முன்னே இருக்கக்கூடிய பிரதான சவால், வன்முறையின் ஆவேசத்தை சமாதானம் மற்றும் சகவாழ்வின் ஊற்றுக்களாக மாறச் செய்தேயாக வேண்டும் என்ற திடசங்கட்பத்தை நாம் ஏற்படுத்திக் கொள்வதாகும். இந்த சவாலை நாம் வெற்றி கொள்வதற்கான ஆன்மிக பின்புலம் சிறிலங்காவில் வாழும் சகல இன மக்களுக்கும் உண்டு. ஆயினும், கடந்த பல தசாப்தங்களாக கண்களுக்குப் புலப்படாத பல்வேறு சக்திகள் இவ் ஆன்மீகத்தின் கூர்மையை மழுங்கச் செய்து அதன் வலிமையையும் இல்லாமலாக்கியுள்ளன. அத்தோடு, நாம் அனைவருமே ஒரே ஊற்று மூலத்திலிருந்து வெளிப்பட்ட ஆன்மாக்களே என்பதையும், இவ்வையகத்தில் நம் எல்லோருக்குமே இடமுண்டு என்ற உண்மைகளையும் உணர்ந்து அவ்வான்மீகத் தெளிவுகளை நாம் மீண்டும் கூர்மையாக்கிக் கொள்வது அவசியமாகும். பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தி அதனூடாக மானிட விழுமியங்களையும் கௌரவத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான வேலைத்திட்டங்களைத் தொடர்ச்சியாகச் செயற்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.

இது கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ம்,17ம், மற்றும் 18ம் திகதிகளில் பண்டாரநாயக்க சரவதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற “பாத்ஸ்”; எண்ணக்கருவின் முரண்பாடுகளுக்கப்பால் என்ற மாநாட்டில் பிரதானமாக நாம் கற்றுக்கொண்ட பாடங்களாகும் இது எமக்கு சரியான சந்தர்ப்பமாகும் நாம் இந்த தேசத்தின் முத்துக்கள் ஓர் சிறந்த முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக திகலலாம்.


நம் தேசத்தைக் கட்டியெழுப்ப சிறந்த வழிகளில் ஒன்று அடிப்படைகளில் இருந்து வருவதே சிறுவர்களை ஒன்றிணைக்க வேண்டும் இதற்கு பல முறைகள் உண்டாயினும் பாடசாலைகள் ரீதியாக ஒன்றிணைப்பது நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்

நமது நாட்டில் அழகாகக் காணப்படுகின்றது சிங்கள மகாவித்தியாலயம், முஸ்லீம் மகாவித்தியாலயம், தமிழ் மகாவித்தியாலயம். பொதுக்கல்வியையக் கற்பதற்கும் அரச செலவில் கற்பதற்கும் எதற்கு இனத்துவ லேபல் தனியார்ப் பாடசாலைகளில் இவைகளைக் கானமுடிவதில்லையே. இதன்மூலம் நடப்பது என்ன வளப்பங்கீடுகளில் குளறுபடிகளைக் காரணங் காட்டி அடிப்படைகளிலேயே முரண்பாடுகள் தங்களது நலன்களுக்காக மாணவர்களை வைத்து பாடசாலைப் பகிஸ்கரிப்புக்கள் இவைகள் எல்லாம் போதும் இது வரையில் இலங்கையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் என்ன ஒருவரது கையோங்கும் போது இன்னொருவரைக் குத்துவது இனி நாம் அந்தக் கசப்பான அனுபவங்களையெல்லாம் மறந்து சுதந்திர இலங்கை சுதந்திர தேசம். என்ற உணர்வுகளோடு அடிமட்டப் பராயத்திலிருந்து நாம் அழகியதொருதேசத்தைக் கட்டியெழுப்ப முயற்சிப்போம்.

ஆனாலும், ‘அடைமழையும் ஒரு நாள் நின்றாக வேண்டும் அவ்வாறே நீடித்த யுத்தமும் ஒரு நாள் முடிவுக்கு வந்தாக வேண்டும்’ என்ற முதுமொழியில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த நம்பிக்கையுடன் சகல இன மக்களுக்கும் சௌபாக்கியத்தையும் சமாதானத்தையும் பெற்றுத் தருவது என்ற திடமான மன உறுதியுடன் மாற்று முன்மாதிரிகளை நாம் பயன்படுத்த வேண்டும். இந்த வகையில், இன்றைய முரண்பாட்டையும் தாண்டி எமது தேசத்தை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கு நம்மால் நிச்சயம் முடியும். தேசத்தை மீளக்கட்டியெழுப்பும் பணியானது மிகவும் சிக்கலானது சிரமமானது என்பதும், அவை நம்மை மிகவும் களைப்படையச் செய்யக்கூடிய கடினமான பணி என்பதும் நிச்சயம். இருப்பினும், சகல மதங்களையும் சார்ந்த மக்களும் ஒன்றுபட்டு ஈடுபடும் பட்சத்தில் அவ்வாறான கடினமான பணியையும் கூட நம்மால் நிச்சயம் செய்ய முடியும். இந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்றுக்கள் தற்போது நமக்குத் தெரிய ஆரம்பித்துள்ளன.நமக்கு முன்னே இருக்கக்கூடிய பிரதான சவால், வன்முறையின் ஆவேசத்தை சமாதானம் மற்றும் சகவாழ்வின் ஊற்றுக்களாக மாறச் செய்தேயாக வேண்டும் என்ற திடசங்கட்பத்தை நாம் ஏற்படுத்திக் கொள்வதாகும். இந்த சவாலை நாம் வெற்றி கொள்வதற்கான ஆன்மிக பின்புலம் சிறிலங்காவில் வாழும் சகல இன மக்களுக்கும் உண்டு. ஆயினும், கடந்த பல தசாப்தங்களாக கண்களுக்குப் புலப்படாத பல்வேறு சக்திகள் இவ் ஆன்மீகத்தின் கூர்மையை மழுங்கச் செய்து அதன் வலிமையையும் இல்லாமலாக்கியுள்ளன. அத்தோடு, நாம் அனைவருமே ஒரே ஊற்று மூலத்திலிருந்து வெளிப்பட்ட ஆன்மாக்களே என்பதையும், இவ்வையகத்தில் நம் எல்லோருக்குமே இடமுண்டு என்ற உண்மைகளையும் உணர்ந்து அவ்வான்மீகத் தெளிவுகளை நாம் மீண்டும் கூர்மையாக்கிக் கொள்வது அவசியமாகும். பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தி அதனூடாக மானிட விழுமியங்களையும் கௌரவத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான வேலைத்திட்டங்களைத் தொடர்ச்சியாகச் செயற்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும். இது கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ம்,17ம், மற்றும் 18ம் திகதிகளில் பண்டாரநாயக்க சரவதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற “பாத்ஸ்”; எண்ணக்கருவின் முரண்பாடுகளுக்கப்பால் என்ற மாநாட்டில் பிரதானமாக நாம் கற்றுக்கொண்ட பாடங்களாகும் இது எமக்கு சரியான சந்தர்ப்பமாகும் நாம் இந்த தேசத்தின் முத்துக்கள் ஓர் சிறந்த முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக திகலலாம். நம் தேசத்தைக் கட்டியெழுப்ப சிறந்த வழிகளில் ஒன்று அடிப்படைகளில் இருந்து வருவதே சிறுவர்களை ஒன்றிணைக்க வேண்டும் இதற்கு பல முறைகள் உண்டாயினும் பாடசாலைகள் ரீதியாக ஒன்றிணைப்பது நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும் நமது நாட்டில் அழகாகக் காணப்படுகின்றது சிங்கள மகாவித்தியாலயம், முஸ்லீம் மகாவித்தியாலயம், தமிழ் மகாவித்தியாலயம். பொதுக்கல்வியையக் கற்பதற்கும் அரச செலவில் கற்பதற்கும் எதற்கு இனத்துவ லேபல் தனியார்ப் பாடசாலைகளில் இவைகளைக் கானமுடிவதில்லையே. இதன்மூலம் நடப்பது என்ன வளப்பங்கீடுகளில் குளறுபடிகளைக் காரணங் காட்டி அடிப்படைகளிலேயே முரண்பாடுகள் தங்களது நலன்களுக்காக மாணவர்களை வைத்து பாடசாலைப் பகிஸ்கரிப்புக்கள் இவைகள் எல்லாம் போதும் இது வரையில் இலங்கையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் என்ன ஒருவரது கையோங்கும் போது இன்னொருவரைக் குத்துவது இனி நாம் அந்தக் கசப்பான அனுபவங்களையெல்லாம் மறந்து சுதந்திர இலங்கை சுதந்திர தேசம். என்ற உணர்வுகளோடு அடிமட்டப் பராயத்திலிருந்து நாம் அழகியதொருதேசத்தைக் கட்டியெழுப்ப முயற்சிப்போம்.

»»  (மேலும்)

அக்கரைப்பற்றில் தேசிய காங்கிரஸின் வருடாந்த மாநாடு



நீர் வழங்கல் அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசின் வருடாந்த மாநாடு நாளை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள்,அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

»»  (மேலும்)

ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு சுற்றுப் பயணம்


இளைஞர் காங்கிரஸை பலப்படுத்துவதற்காக, ராகு ல்காந்தி தமிழ்நாட்டில் 3 நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக வருகிற 31 ஆம் திகதி அவர் சென்னை செல் கின்றார்.
காங்கிரஸ் பொதுச் செய லாளர் ராகுல் காந்தி, இளைஞர் காங்கிரஸை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள் ளார். மீனவ சமுதாய இளைஞர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்கள், பெண்கள், சுயதொழில் புரி யும் இளைஞர்கள், விவசா யிகள் மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளை ஞர்களை இளைஞர் கா ங்கிரஸில் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் அவர் திட்டங்களை வகுத்து செய ல்பட்டு வருகிறார்.
முதன் முதலாக பஞ்சாப் மாநிலத்திலும், அதைத் தொடர்ந்து குஜராத் மற் றும் புதுச்சேரியிலும் இளை ஞர் காங்கிரஸில் முறை ப்படி உறுப்பினர்களை சேர்த்து ஜனநாயக முறை ப்படி தேர்தலை நடத்திய பிறகு தற்போது தனது கவனத்தை தமிழகத்தின் மீது திருப்பி உள்ளார்.
3 நாட்கள் அவர் 18 பார ¡ளுமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கும் நடவடிக்கை களை தீவிரப்படுத்துகிறார்


»»  (மேலும்)

சீனாவின் கோபத்துக்கு அஞ்சாமல் தலாய்லாமாவை அழைக்க தாய்வான் முடிவு





திபேத் புத்தமத தலைவர் தலாய்லாமாவை தாய்வான் நாட்டுக்கு அழைப்பது என்று அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்து உள்ளது. சீனா வின் கோபத்துக்கு அஞ்சா மல் இந்த முடிவை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்து ள்ளது.
தாய்வான் நாட்டை மொரா கோட் எனப்படும் புயல் தாக்கியதில் ஏற்பட்ட வெள் ளம் மற்றும் நிலச்சரிவு ஆகி யவற்றால் 500 பேர் பலி யானார்கள். கடந்த 50 ஆண்டு களில் இப்படிப்பட்ட மோச மான புயல் பாதிப்பை அந்த நாடு சந்தித்தது கிடையாது.
இறந்தவர்களுக்காகவும் காயம் அடைந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதற்காக வும் ஆறுதல் கூறுவதற்கா கவும் தலாய்லாமாவை அழைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஜனாதிபதி மாயிங் ஜியோயூ ஏற்றுக்கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவருக்கு அழைப்பு விடப்பட்டது. அவர் வரு கிற 31ந் திகதி திங்கட்கிழமை தாய்வான் வருகிறார். அவர் 4 நாட்கள் தாய்வானில் தங்கி இருக்கிறார்.
தலாய்லாமாவை எந்த நாடு அழைத்தாலும் அந்த நாட் டின் மீது கோபக்கணை களை வீசுவது சீனாவின் வழக்கம். தலாய்லாமாவை திபேத்தின் விடுதலைப் போராட்ட தலை வராக சீனா பார்க்கிறது. இத னால் அவரை பிற நாடுகள் அழைப்பதையும் உலக தலை வர்கள் சந்திப் பதையும் சீனா எதிர்த்து வருகிறது.
திபேத்தை சீனா தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கருதி வருகிறது. சீனா கோபப்ப டலாம் என்பதையும் பொரு ட்படுத்தாமல் தாய்வான் அவரை அழைத்து உள்ளது.

»»  (மேலும்)

கிழக்கில் மூவின கலாசார விழாக்களான ஆடிப்பெருவிழா, முஹர்ரம் விழா, மற்றும் பொஷன் விழாக்கள் நடாத்துவதற்கு அமைச்சர் வாரியத்தில் தீர்மானம்

மூவின மக்களுக்குமான கலாசார விழாக்களை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான அமைச்சர் வாரியக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
விழாக்களை 2010 ஆம் ஆண்டு முதல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கான நிதியினை 2010 இல் மாகாண விசேட நிதியிலிருந்து 30 மில்லியன் ரூபாவினை ஒதுக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

»»  (மேலும்)

ஜே.வி.பி. சந்திரசேகரன் ஐரோப்பிய வருகை.


மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சந்திரசேகரன் ஐரோப்பாவிற்கு வருகை தந்துள்ளார். நாளை மாலை (ஞாயிறு) 3.00 மணிக்கு பிரான்ஸ் பாரிஸ் நகரில் இவருடனான சந்திப்பொன்று நடைபெற இருக்கின்றது.
»»  (மேலும்)

8/28/2009

மட்டு.- கொழும்பு கடுகதி ரயில் சேவையில் மாற்றம்

மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான கடுகதி ரயில் சேவையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாற்றம் கொண்டு வரப்படவிருப்பதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.பயணிகளின் நலன் கருதியே இம்மாற்றத்தைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் தற்போது காலை சேவையில் ஈடுபட்டுள்ள 'உதயதேவி' கடுகதி ரயில் சேவை இரவு ரயில் சேவையாக மாற்றப்படும்.ஆனால் உறங்கல் வசதிகள் இதில் இருக்க மாட்டா. அப்பெட்டிகளுக்குப் பதிலாக இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கை ஆசன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.தற்போது இரவு நேர சேவையில் ஈடுபட்டுள்ள ரயில், காலை நேர சேவையாக, இதற்குப் பதிலாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள இம் மாற்றம் காரணமாக மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான ஆசன முன்பதிவுகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
»»  (மேலும்)

மட்டக்களப்பில் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு உப அலுவலகம் திறப்பு


கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் உப அலுவலகமொன்றை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெலகம இன்று மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத் தொகுதியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள கைத்தொழில்அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலேயே மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சருடன் நெசவுக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த ரத்னதிலக்க, தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ்வைபவத்தில் ஒரு தொகுதி நெசவுக் கைத்தொழிலாளர்களுக்கு நெசவுக் கைத் தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன. மேற்படி நிகழ்வின் பின்பு மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்ட சந்திப்பொன்றிலும் அமைச்சர்கள் கலந்து கொண்டு கைத்தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர் தேசிய கடதாசி கம்பனியின் வாழைச்சேனை ஆலை ஊழியர்கள் மாதாந்தச் சம்பளம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஊழியர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் குமார வெலகமவைச் சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து அமைச்சர் கொழும்பு திரும்பும் வழியில் காகித ஆலைக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார்.


»»  (மேலும்)

மாவோயிஸ்ட் சிறுவர்களை விடுவிக்கும் பணிகள் நிறுத்தம்





மாவோயிஸ்ட் போரா ளிச் சிறுவர்களை விடுவி க்கும் பணிகள் நிறுத்தப்பட் டுள்ளதாக நேபாளத்தின் அமைச்சர் தெரிவித்தார். இந் நிலைமைக்கு தீவிர இடதுசாரிகளின் ஒத்துழைப்பின்மையே காரணமென்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
நேபாளின் மன்னராட்சிக் கெதிராக ஒரு தசாப்த காலம் போராடிய மாவோயி ஸ்ட்கள் 2006 ம் ஆண்டு சமாதான உடன்படிக் கையை ஏற்று ஜனநாய கத்தில் இணைந்தனர்.
பின்னர் நேபாளில் அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட்ட வேளை முன்னாள் மாவோயிஸ்ட் போராளிகளை பொலிஸ், இராணுவத்தில் சேர்க்க முயற்சிக்கப்பட்டது. கூட்டரசாங்கத் திலிருந்த ஏனைய கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த் ததால் முயற்சிகள் கைவிடப்பட் டன.
இதையடுத்து அரசாங் கத்திலிருந்து மாவோயிஸ் டுகள் வெளியேறினர். பின் னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மாவோயிஸ்ட் போராளிகளை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுகையில் தீவிர இடது சாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமையால் இது இழுபறி நிலைக்குச் சென்று ள்ளது.
இதைச் சுட்டிக்காட்டியே அமைச்சர் தீவிர இடது சாரிகளைக் குற்றம் சாட்டி யுள்ளார்.
மாவோயிஸ்ட்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் கூட இதற்கான நடவடிக் கைகளில் அக்கறை செலுத் தப்படவில்லை யென்பதை யும் அமைச்சர் குறிப்பிட்டுள் ளார்.
சுமார் 24 ஆயிரம் மாவோ யிஸ்ட் போராளிகள் நேபாள முகாம்களில் உள்ளனர். ஐ. நா. இம் முகாம்களை மேற் பார்வை செய்கின்றது.
அண்மையில் வெளி யான அறிக்கையின்படி இம் முகாம்களில் 2973 சிறுவர்களும் 1035 போரிட முடியாத வீரர்களும் உள் ளமை தெரிய வந்துள்ளது.
மாவோயிஸ்டுகள் சிறு வர்களைப் படையில் சேர்த்துள்ளமை இதனூடா கத் தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் இவர்களை முகாம்களிலி ருந்து விடுவிக்கவும் ஏனை யோருக்குப் புனர்வாழ்வளிக் கவும் நேபாள அரசாங்கம் உறுதியளித்துள்ளது.



»»  (மேலும்)

வெனிசூலாவுக்கெதிராக கொலம்பியா அமெரிக்க ஒன்றியத்தில் முறைப்பாடு



கொலம்பியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெனிசூலா தலையிடுவதாகக் குற்றம் சாட்டி யுள்ள கொலம்பிய அரசாங்கம் இது குறித்து அமெரிக்க நாடுகளின் ஒன்றியத்திடம் முறையிட் டுள்ளது. கொலம்பியாவின் இராணுவத் தளங் களை அமெரிக்க இராணுவம் பாவிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டதால் வெனிசூலா கடும் கோபமடைந்துள்ளது.
சென்ற புதன்கிழமை வெனி சூலா ஜனாதிபதி சாவெஸ் தொலைக்காட்சியில் உரையாற்றும் போது கொலம்பிய, ஒரு போதை வஸ்து நாடு எனக் குறிப்பிட்டார். வெனிசூலா வில் இயங்கும் கொலம்பியக் கம்பனிகளின் செயற் பாடுகளை உளவு பார்த்து அறிக்கை சமர்ப்பிக் கும்படி சாவெஸ் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

வெனிசூலாவின் நலன்களுக் கெதிராக இயங்கும் அனைத்துக் கொலம்பியர்க ளையும் நாடு கடத்தவும் ஜனாதிபதி சாவெஸ் உத்தரவிட்டார். இதனையடுத்தே கொலம்பியா இக் குற்றச்சாட்டைச் சுமத்தியது. அமெரிக்க நாடுகள் ஒன்றியத்துக்கான கொலம்பியாவின் தூதர் லூயிஸ் ஹொய்ஸ் வெனிசூலாவின் நடவடிக் கைகளைக் கண்டித்தார்.
தென்னமெரிக்காவில் அமெரிக்காவின் செல் வாக்கு வளர்வதைத் தடுக்க கியூபாவும், வெனி சூலாவும் இணைந்து செயற்படுகின்றன. கொலம் பியாவின் இராணுவத் தளங்களில் இருந்து அமெரிக்கப் படைகள் தாக்குதல்களை நடத்த அனுமதியில்லை. போதைவஸ்து ஆயுதக் கடத்தல் களைக் கண்காணித்து தகவல்களை வழங்குவதே அமெரிக்காவின் பணி. இவை பற்றி வெனி சூலா அச்சம் கொள்ளத் தேவையில்லையென லூயிஸ் ஹொய்ஸ் சொன்னார்.
அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை தென்னமெரிக் காவுக்குள் அனுமதிப்பதால் ஏற்படவுள்ள பாரிய கெடுதல்களையும் அபாயங்களையும் கொலம்பிய மக்களுக்குத் தெரியப்படுத்த தொடர்ந்தும் முயற் சிக்கவுள்ளதாக சாவெஸ் சொன்னார்.
இராணுவ, பொருளாதார நலன்களுக்காகவே அமெரிக்கா, கொலம்பியாவுக்குள் நுழைந்துள்ளதென்றும் சாவெஸ் கூறினார். இன்று வெள்ளிக்கிழமை ஆர்ஜன்டீனாவில் நடைபெறும் தென்னமெரிக்க நாடுகளின் மாநாட்டில் கொலம்பியாவுக்கெதி ராக பல நாடுகளை அணித்திரட்டவுள்ளதாகவும் சாவெஸ் குறிப்பிட்டார்.


»»  (மேலும்)

திருகோணமலை வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கை

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்று திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் முதலில் இப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பின்னர் வார்ட்டுகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலதிக சிகிச்சை தேவையில்லாதவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இப்பிரிவில் நோயாளர் ஒருவர் ஒருநாள் மாத்திரம் தங்க வைக்கப்படுவார். இங்கு 27 பேர் ஒரே நேரத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
8 வைத்தியர்கள், 16 தாதிகள் 24 மணி நேரமும் இங்கு சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு ஒன்றினை திறந்து வைத்து மாகாண அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், திருகோணமலை வைத்தியசாலை மிக விரைவில் சகல வசதிகளும் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்படும்.
அமெரிக்க நிதி உதவியுடன் 250 மில்லியன் செலவில் 150 படுக்கைகள் கொண்ட வார்ட் விரைவில் அமைக்கப்படும். இதன் ஆரம்ப பணிகள் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படும். தேசத்தைக் கட்டி எழுப்பும் அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் 150 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை இதற்கு ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது.
கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின்னர் மூடப்பட்டிருந்த சகல வைத்தியசாலைகளும் திறக்கப்பட்டுள்ளது. எமது மாகாணத்தில் கிராமங்கள் தோறும் வைத்திய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
சில கிராமங்களில் வைத்தியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக பல மைல்கள் கடந்து மாவட்ட வைத்தியசாலைகளை தவிர்த்து மக்கள் சிகிச்சைக்காக அங்கு செல்கின்றார்கள். வைத்தியர்கள் தங்களால் ஆன சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்
»»  (மேலும்)

பூநொச்சிமுனை குடிநீர்த் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

கிழக்கு மாகாணத்தில் பல தசாப்தங்களாக சுத்தமான குடிநீரின்றி அவதியுற்ற பிரதேசங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் யுத்தம் மற்றும் சுனாமியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசமான பூநொச்சிமுனையில் குடிநீர் விநியோகத் திட்டம் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
58 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினூடாக இப்பிரதேசத்தில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்கள் நன்மையடைந்துள்ளனர்

»»  (மேலும்)

8/27/2009

இலங்கை கொலைகள் தொடர்பாக வெளியாயுள்ள வீடியோ குறித்த சர்ச்சை

இலங்கையின் வடக்கே போர் நடந்த காலத்தில், ஜனவரி மாதத்தில், இலங்கைப் படையினர் போல் தோன்றும் சிலர், நிராயுதபாணிகள் சிலரை, கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட மற்றும் நிர்வாண நிலையில், குறைந்த தூரத்திலிருந்து தலைக்குப் பின்னாலிருந்து அவர்களை சுட்டுக்கொல்வது போல் தோன்றும் வீடியோ காட்சிகளை ஜெர்மனியிலிருந்து இயங்கும் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து வெளிவந்து ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் ஊடகவியலாளர்கள் உறுப்பினர்களாகக் கருதப்படும் இந்த அமைப்பு அனுப்பிய இந்த வீடியோ குறித்து, அந்த அமைப்பிடம் இருந்து மேலும் கூடுதல் தகவல்களைப் பெற முயன்றும், அவர்கள் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக பேச முடியாது என்று மறுத்துவிட்டனர்.
இந்த வீடியோ காட்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை வெளியுறவுச் செயலர் டாக்டர் பாலித கோஹன இது முற்றிலும் புனையப்பட்ட ஒரு வீடியோ என்றும் ஜனநாயகத்துக்கான செய்தியாளர்கள் என்கிற அமைப்பு குறித்து தாங்கள் இதற்கு முன்னர் கேள்விப்பட்டது இல்லை என்று கூறுகிறார். bbc

»»  (மேலும்)

ஈரானில் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா உதவியது;

ஈரானில் கிளர்ச்சியை உண்டுபண்ணும் வேலை களுக்கு அமெரிக்கா உதவியதாக சுன்னிக் கிளர்ச்சியாளர் அமைப்பின் முக்கியஸ்தர் ஒரு வர் தெரிவித்தார். ஈரானின் பஜுலுஸ்தான் மாகாணத்தில் சுன்னி முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழ்கின்றனர்.
பாகிஸ்தானை அண்மித்துள்ள இம்மாகாணத்துக்கு தனியா ட்சி கோரி சுன்னி முஸ்லிம் அமைப்புக்கள் போராடுகின்றன.
இவற்றில் ஜுண்டல்லா என்ற அமைப்பு பிரதானமானது. இதன் தலைவர் அப்துல் மலிக் ஊடகவியலாளர்களி டம் தங்கள் அமைப்பு ஈரானில் முன்னெடுத்த வன்முறைகள் தாக்குதல்களுக்கு அமெரிக்கா உதவியதாக கூறினார். நான்கு வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானிலுள்ள அமெரிக்கத் தூத ரகத்தில் அமெரிக்க அதிகாரிகளைத் தாங்கள் சந்தித்ததாகவும் அப்துல் மலிக் கூறினார். உங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள் நாங்கள் தருகிறோம் என அமெரிக்க அதிகா ரிகள் கூறினர். பின்னர் ஆயுத உதவிகளையும் வழங்கினர். ஆனால் நாங்கள் அமெரிக்கர் களால் ஏமாற்றப்பட்டோம் என்று ஜுண்டல்லா அமைப்பின் முக்கியஸ்தர் ஊடகவியலாளர் களிடம் சொன்னார்.
பஜுலுஸ்தான் மாகாணத்துக்கு இவரை ஈரான் அரங்சாங்கம் அழைத்துச் சென்று பல ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தியது.
இதில் ஈரானின் ஷியா முஸ்லிம்கள் கொல் லப்பட்டமை படையினருக்கெதிரான தாக் குதல் சம்பவங்கள் என்பன ஒளிநாடா மூலம் காண்பிக்கப்பட்டது. ஈரான் அரசாங் கத்தை ஆதரித்தமைக்காக சொந்த உறவினர்கள் குடும்பத்தவர்களைக் கொலை செய்ததாகவும் அப்துல் மலிக் தெரிவித்தார்.
அல்கைதாவு டன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஜுண்டல்லா அமைப்பு ஈரான், பாகிஸ்தான் நாடு களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயுதம் போதைவஸ்துக் கடத்தல்களில் இந்த அமைப்பு ஈடுபடுவதாகவும் சந்தேகிக்கப்படு கின்றது. ஈரானில் ஷியா முஸ்லிம்களின் பள்ளி வாசல்களில் நடந்த தாக்குதல்களை ஜுண் டல்லா அமைப்பே நடத்தியிருந்தது. ஈரா னில் ஷியா முஸ்லிம்களே அதிகமுள்ளனர்.



»»  (மேலும்)

இளைஞர் கழகங்களுக்கு புத்தகங்களைவழங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை

மட்டக்களப்பில் இளைஞர் சேவை மன்றத்தின் கீழ் இயங்கும் 50 இளைஞர் கழகங்களுக்கு கிழக்கு மாகாண சபை புத்தகங்களை அன்பளிப்பு செய்யவுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் இணைப்புச் செயலாளர் பூ. பிரசாந்தனின் முயற்சியால் இப்புத்தகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் இளைஞர் கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இப் புத்தகங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அண்மைக் காலமாக இளைஞர் கழகங்கள் தங்கள் பகுதிகளில் வாசிகசாலை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. புத்தக அன்பளிப்பானது அவர்களின் இந்த முயற்சிக்குப் பெரும் ஊக்குவிப்பாக இருப்பதாக இளைஞர் சேவை மன்றங்கள் தெரிவிக்கின்றன.
(ஐ - க)


»»  (மேலும்)

மட்டக்களப்பு-கிரான் வெள்ளநீரோட்டபாதையை புனரமைக்க நடவடிக்கை

சுமார் 25 இலட்சம் ரூபா முதற்கட்ட நிதியில் மட்டக்களப்பு கிரான் வெள்ள நீரோட்டப் பாதையினைப் புனரமைக்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வேலைத் திட்டத்திற்குத் தேவை யான கொங்கிaட் குழாய்களை முதல மைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர் எம். எஸ். உதுமாலெ ப்பை ஆகியோர் வழங்கிவைத்தனர்.
செங்கலடி- நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் இது தொடர்பாக இடம்பெற்ற வைபவத்தில் மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர், கலாநிதி வீ. அமீர்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கிரான் ‘கோஸ்வே’ புனரமைக்கப்படுவதனால் சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் மாரி காலத்திலும் இலகுவாகப் போக்குவரத்துச் செய்வதற்கான வசதியினைப் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது
»»  (மேலும்)

ஜமால்தீனின் கொலையுடன் தொடர்பு;

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பணிப் பாளர் பொலிஸ் அத்தியட்ச கர் ஜமால்தீனின் படுகொலை சம்பவத்து டன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இரு வர் கல்முனை துறைநீலாவணை களப்புப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள னர்.
அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரக சிய தகவல் ஒன்றையடுத்து களப்புப் பகுதிக்கு அண்மி த்துள்ள காட்டில் மறைந்தி ருந்த சந்தேக நபர்களை பிடிப் பதற்காக சென்ற போது இருதரப்பினரு க்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பதில் தாக்கு தல்களிலேயே இருவர் கொல்லப்பட்டுள்ள னர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதி வக்க தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு 9.00 மணியள வில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி, மகஸின்கள் மற்றும் ரவைகளை மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவர் கந்தப்பிள்ளை அல்லது கந்தகுடி என்ற பெயருடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மற்றவரின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சா ளர் மேலும் தெரிவித்தார்.


»»  (மேலும்)

8/26/2009

மடகஸ்காரில் இடைமாற்று அரசாங்கம் அமைக்க இணக்கம்; 2010 இல் தேர்தல் நடத்தவும் தீர்மானம்

மடஸ்காரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை முடி வுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுக்களில் ஈடுபட்ட அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் இடைமாற்று அரசா ங்கமொன்றை அமைக்க இணங்கியுள்ளனர். மொஸாம்பி யாவில் இப்பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன. நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகளில் இதற் கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் 2010 ம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மடஸ்காரில் கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி ரவோ லாமானா பதவி கவிழ்க்கப்பட்டார். இராணுவத்தின் உத வியுடன் முன்னாள் மேயர் ரஜோலினா இந்தப் புரட்சி யைச் செய்தார். தற்போதுள்ள இடைமாற்று அரசாங்கத் தின் ஜனாதிபதியாக ரஜோலினா கடமையாற்றுகின்ற நிலை யில் பதவி கவிழ்க்கப்பட்ட ரவோல்மானா தென்னாபிரி க்காவில் உள்ளார். மொஸாம்பியாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இடைமாற்று அரசின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமை ச்சர்கள், அரசின் பணியாளர்களை மீண்டும் நியமனம் செய்ய வென நான்கு பேரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இந்நால் வருமே மேற்சொன்ன பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமனம் செய்வர். இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய மடஸ்காரின் தற்போ தைய ஜனாதிபதி ரஜோலினா தேசிய தொலைக் காட்சியில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
2010 இல் தேர்தல் நடாத்தப்படும் வரை தானே ஜனா திபதியெனப் பிரகடனம் செய்தார். தென்னாபிரிக்காவி லுள்ள மடகஸ்காரின் முன்னாள் ஜனாதிபதி ரவோல் மானா இடை மாற்று அரசில் நேரடியாகப் பங்கேற்கப் போவதில்லையெனக் கூறியுள்ளார். இவ்வாறான நிலைமை களால் அங்கு மேலும் வன்முறைகள் தலைதூக்கலா மென்று அஞ்சப்படுகின்றது.



»»  (மேலும்)

படுவான்கரை மக்களின் கல்வி வரலாற்றின் ஒரு மைல்கல். முதலமைச்சர் சந்திரகாந்தனின் தனி கல்வி வலையம் அமைக்கும் முயற்சி.



மட்/படுவான் கரைக்கென தனியான கல்வி வலயம்.


-->
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக கல்வி வலயமாக “படுவான்கரை வலயம்” தாபிப்பதற்கு கிழக்கு மாகாண அமைச்சர் வாரியம் ஏகமனதாக தீர்மானம். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நெடுங்காலமாக படுவான் கரைப் பிரதேசம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது. இதனைக் கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், படுவான்கரை பிரதேசத்திற்கான தனியான கல்வி வலையமாக “படுவான்கரை வலயம்” தாபிப்பது தொடர்பில் நேற்று (24.08.2009) நடைபெற்ற அமைச்சர் வாரியத்தின் அங்கிகாரத்திற்காக கோரப்பட்டது. இதற்கான முழு அங்கிகாரத்தினையும் அமைச்சர் வாரியம் அங்கிகாரம் வழங்கியுள்ளது.தற்பொழுது மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் கல்குடா, பட்டிருப்பு, மட்டக்ளப்பு வலய அலுவலகங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. ஆயினும் பிரயாணக் கஷ்ட்டங்கள் காரணமாக இவற்றை நகரிலிருந்து நிர்வகிப்பது சிரமமாய் இருந்து வந்துள்ளது. எனவேதான் இப்பாடசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளன.படுவான்கரை பிரதேசத்திலையே கல்வி வலய அலுவலகத்தைத் தாபித்து அங்கிருந்து படுவான்கரையிலுள்ள பாடசாலைகளை நிர்வகிப்பதனால் அப்பாடசாலைகளின் கல்வித்தரத்தை வெகு விரைவில் விருத்தி செய்வதுடன் சமூகத்தின் கல்வித்தரத்தினையும் உயர்த்த முடியும்.மட்டக்களப்பு கல்வி வலயத்துள் அடங்கும் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 27 பாடசாலைகள், பட்டிருப்பு கல்வி வலயத்துள் அடங்கும் மண்முனை வடமேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 பாடசாலைகள், மட்டக்களப்பு கல்வி வலயத்துள் அடங்கும் ஏறாவூர் பற்றிலுள்ள 20 பாடசாலைகளில் 11 பாடசாலைகளையும் கல்குடா கல்வி வலயத்துள் அடங்கும் ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள 24 பாடசாலைகளுள் 7 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய கல்வி வலையமான “படுவான்கரை” கல்வி வலயத்தை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான வலய அலுவலகம் வவுணதீவில் இருக்கும்.புதிய “படுவான்கரை” வலயம் தாபிக்கப்பட்டதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வலயங்கள் பின்வருமாறு பாடசாலைகளின் தொகையினைக் கொண்டு இயங்குமு; வகையில் இயங்கவும் உள்ளது.மட்டக்களப்பு வலயம் 66 பாடசாலைகள்
மட்டக்களப்பு மத்தி வலயம் 64 பாடசாலைகள்
படுவான்கரை வலயம் 63 பாடசாலைகள்
கல்குடா வலயம் 71 பாடசாலைகள்
பட்டிருப்பு வலயம் 66 பாடசாலைகள

»»  (மேலும்)

8/25/2009

14 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றிய பிடெல் காஸ்ட்ரோ



கியூபா முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, 14 மாதங்களின் பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சுகவீனமடைந்து அறுவைச் சிகிச்சையொன்றுக்கு ஆளாகிய பிடெல் காஸ்ட்ரோ, அது முதற்கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாது இருந்து வருகிறார்.வெனிசுலாவைச் சேர்ந்த மாணவர்களுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடும் மேற்படி காட்சியானது கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்டதாக அதிகõரிகள் தெரிவித்தனர். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிடெல் காஸ்ட்ரோ மிகுந்த ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் காணப்பட்டார். மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர், அந்நாட்டு அரச ஊடகமான "ஜுவென்டட் ரெபல்டி' பத்திரிகையானது பிடெல் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது.அந்த புகைப்படமானது ஈகுவடோரின் இடதுசாரி ஜனாதிபதி ராபயல் கொர்ரியாவுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடுவதை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது

»»  (மேலும்)

வன்னியில் யுத்தப் பிரதேசத்தில் பணியாற்றியிருந்த தமிழ் மருத்துவர்கள் பிணையில் விடுதலை


இலங்கையில் போர்ப்பகுதிகளில் பணியாற்றி பின்னர் அரச தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மருத்துவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தியமூர்த்தி, வரதராஜா, ஷண்முகராஜா, இளம்செழியன் ஆகிய இம்மருத்துவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் போர்ப்பிரதேசங்களில் பணியாற்றிவந்தனர்.
அங்கிருந்து தப்பிவந்த இவர்கள் பின்னர் அரச படைகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
யுத்த சேதங்கள் குறித்து மிகையான செய்திகளை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் மீது புலன்விசாரணை நடத்தப்பட்டுவந்தது.
இவர்கள் பிணையில் செல்ல கொழும்பு நீதிமன்றம் ஒன்று தற்போது அனுமதித்திருக்கிறது.
பிணையில் வெளிவர மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து மருத்துவர்களில் இருவர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஈ.தம்பையா தெரிவிக்கும் விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்


»»  (மேலும்)

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் கிழக்கு பிரதேசத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசத்திலும் விவசாய செய்கை பண்ணுவதற்கு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி.

அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் குழாம் திரியாய் பிரதேசத்தில் அமைந்துள்ள நீலப்பனிக்கன் குளத்தினை புனரமைப்பது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டார்கள். இதன் பிரகாரம் அங்கு விவசாயச் செய்கையினை மேற்கொள்ள இருக்கின்ற மக்கள் தங்களிடம் விடுத்த வேண்டுகோளின்படி அப்பரதேசத்தில் விவசாய செய்கையினை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு தரப்பு தமக்கு இடையூறாக இருப்பதாக அப்பிரதேச விவசாய பெருமக்கள் அமைச்சர்கள் குழாமின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். இதற்கிணங்க இன்று (24.08.2009) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் பாதுகாப்பு பிரிவினருடன் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெஃப்பை பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள் என பலர் கலந்துர் கொண்டனர்.மேற்படி கூட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் கிழக்கைத் தவிர (அதாவது உயர்பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசம்) ஏனைய அனைத்துப்பிரதேசத்திலும் பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கி இருக்கின்றார்கள் எதிர்வருகின்ற 05.09.2009 அன்று திரியாயில் சம்பிரதாய பூர்வமாக ஏர்பூட்டு விழா விவசாய அமைச்சர் து. நவரெட்ணராஜா தலைமையில் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக அப்பிரதேச மக்கள் சுமார் 10000 ஏக்கர் காணியில் விவசாயச் செய்கையினை மேற்கொள்ள முடியும்.
இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் திருமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற உயர்மட்டக்கலந்துரையாடலில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. திரியாய் பிரதேசத்தில் அமைந்துள்ள நீலப்பனிக்கன் குளத்தை புனரமைப்பு செய்து அப்பிரதேச மக்களை விவசாய செய்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் திரியாய் பிரதேசத்தில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மத்தியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்பு மிகவும் தேவையாக உள்ளதாக அப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மேற்படி கூட்டம் இன்று(24.08.2009) கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கலந்துரையாடலில் மாகாண விவசாய அமைச்சர் து. நவரெட்ணராஜா, மாகாண நீர்ப்பாசண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அமைச்சின் செயலாளர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான உய்ர்பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்ட விவசாய மற்றும் நீர்ப்பாசணப்பணிப்பாளர்கள் குறித்த பிரதேசத்தின் விவசாய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்


»»  (மேலும்)

8/24/2009

தோட்டத் தொழிலாளரின் ஜீவனோபாயப் பிரச்சினை




மலையகப் பெருந்தோட்டத் தொழி லாளர்களின் சம்பள உயர்வு தொடர் பான சர்ச்சை தற்போது மீண்டும் உருவெடுத்திருக்கிறது.
தோட்டத் தொழிலாளர்களின் நாள்சம் பளத்தை உயர்த்துவது உட்பட ஏனைய பல்வேறு விடயங்கள் அடங்கிய கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதா லேயே மீண்டும் சர்ச்சைகள் தோன்றியு ள்ளன.
கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக முதலாளிமார் சம்மேள னத்துக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கம் எதுவும் ஏற்படாத நிலையில் ஒத்திவைக் கப்பட்டுள்ள இந்நிலையில், புதிய ஒப்பந்த மானது நன்மைகளை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் இன்று உள்ளனர்.
நியாயமானதொரு சம்பள அதிகரிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கை தோட்டத் தொழிலாளர் மத்தியில் இல்லை. நாள் சம்பளத்தை ஐநூறு ரூபாவாக அதிகரிப்ப தென்ற யோசனையை முதலாளிமார் சம் மேளனம் நிராகரித்ததையடுத்து தொழிலா ளர்கள் இப்போது நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர்.
அதேசமயம் முதலாளிமார் சம்மேள னத்தின் நிராகரிப்பையடுத்து மலையக தொழிற்சங்கங்களும் ஏமாற்றமடைந்துள் ளன. தொழிற்சங்கங்கள் அடுத்த கட்ட நடிவடிக்கைக்குத் தயாராவதாகவும் தகவ ல்கள் வெளிவருகின்றன. இவ்விடயம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் நாளை செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளரின் வாழ் க்கை நிலைமை திருப்தியளிக்கக் கூடிய நிலைமையில் இல்லையென்பதை அனை வரும் அறிவர். இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அவர்களின் சம்பளம் இல் லாததன் காரணமாக வாழ்க்கையில் துன்ப ப்படுகின்றனர். அவ்வப்போது வழங்கப் படுகின்ற சம்பள உயர்வுகள் குடும்பச் சுமையைக் குறைப்பதற்குப் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் ஜீவனோபாயம் மோச மான நிலைமையிலேயே இருந்து வருகிறது.
நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக முதலாளிமார் சம்மேள னத்துடன் தோட்டத் தொழிற்சங்கங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகள் எதிர்பார் க்கும் பலனைத் தந்து விடுவதில்லை. முரண்பாடுகளின் மத்தியில் கூட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதே வழ மையாகிவிட்டது.
இன்றைய நிலைமையிலும் கூட்டு ஒப்பந் தத்தைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற் போது கிடைக்கின்ற அடிப்படைச் சம்பளம் 195 ரூபாவாகும். மேலதிகமாகக் கிடைக்கும் கொடுப்பனவான நூறு ரூபாவுடன் நாளொ ன்றுக்கு 295 ரூபாவை தோட்டத் தொழி லாளர்கள் சம்பளமாகப் பெறுகின்றனர்.
இச்சம்பளமானது குடும்பத்தைக் கொண்டு நடத்துவதற்குப் போதுமானதல்ல என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தினச் சம்பளத்தை ஐநூறு ரூபாவாகவாவது அதி கரிக்க வேண்டுமென்பதே தொழிற்சங்கங் களின் கோரிக்கையாகும். ஆனால் ஐநூறு ரூபா சம்பளக் கோரிக்கையை முதலாளி மார் சம்மேளனம் நிராகரித்துவிட்டது.
அதேசமயம் நாள் சம்பளத்தை முப்பத்தைந்து ரூபாவினால் அதிகரிப்பதே முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானமாக உள்ளது. முப்பத்தைந்து ரூபாவுக்கு மேல் சம்பள உயர்வு வழங்க முடியாதென்பதில் முதலாளிமார் சம்மேளனம் விடாப்பிடியாக உள்ளதாகவும் தெரிகிறது.
இச்சம்பள உயர்வானது தோட்டத் தொழி லாளர்களின் கஷ்டங்களைத் தீர்த்து வைக்கப் போவதில்லை. அவர்களது வறுமை நிலை மையைப் போக்கும் வகையிலான நியாய மான சம்பள உயர்வொன்றே இன்றைய சூழ்நிலையில் அவசியம்.
தொழிலாளர்களுக்கு நியாயமான தீர் வொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் தோட் டத் தொழிற்சங்கங்கள் பொது இணக்கப் பாடொன்றுக்கு வருவதும் முதலில் முக்கியம்.


»»  (மேலும்)

செப்டம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்க முடியாது

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை செப்டம்பர் மாதம் 03ம் திகதிக்குப் முன்னர் எதிர்பார்க்க முடியாதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஹமீத் அல்கர்ஸாயியும் மற்றொரு வேட்பாளரான முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லாவும் அறிவித்துள்ளதால் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.
* ஆதரவாளர்களிடையே வன்முறை பெருகும் அபாயம்
* வன்முறை, மோசடிகள் நிறைந்த தேர்தல் என கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு
* உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை வெற்றிக்கு உரிமை கோரவேண்டாமென வேட்பாளர்களிடம் வெளிநாடுகள் வேண்டுகோள்.
முதல் சுற்றில் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக இவ்விருவரும் உரிமைகோரியுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல் திணைக்களம் இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டியுள்ளதாக அறிவித்துள்ளது முதலாம் சுற்றில் இருவரும் சம அளவான வாக்குகளைப் பெற்றால் அல்லது வெற்றி தெளிவில்லாமல் இருந்தால் மாத்திரமே இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டும்.
தேர்தல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இவ்விரண்டில் ஒன்று நடந்திருக்க வேண்டும். இதை வைத்து வெற்றி தங்களுக்கேயென இரண்டு வேட்பாளர்களும் உரிமை கோருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்யோக பூர்வ முடிவுகள் வரும் வரை வெற்றிச் செய்திகளை பொது மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டாமென இரு வேட்பாளர்களையும் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கமான நேச நாடுகள் கேட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் தேர்தல்கள் (ஜனாதிபதி மாகாண சபை) வன்முறைமிக்கதென்றும் மோசடியானதென்றும் தெரிவித்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வாக்குப் பெட்டிகளைக் கைமாறும் விடயத்திலுள்ள அதிகாரங்கள் மாற்றப்படவேண்டும். இதைச் செய்ய அரசியலமைப்பில் மாற்றங்கள் தேவையென்றும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2001ம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் இது. தலிபானிகளின் அச்சுறுத்தல் வன்முறைகளுக்கு மத்தியிலும் மக்கள் வாக்களித்துள்ளமை ஆப்கான் வரலாற்றின் முக்கிய மைல்கல் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளால் பெரும் வன்முறைகள் எழவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
»»  (மேலும்)

245 ஓட்டங்கள் பெற்று ஏறாவூர் அலிகார் வித்தியாலயம் வெற்றி

அகில இலங்கை கிரிக்கெட் சம்மேளனம் கல்வியமைச்சின் அனுமதியுடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வயதடிப்படையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியினை நடாத்திவருகிறது.
பதுளை பொது விளையாட்டு மைதானத்தில் 15 வயதின் கீழ்பட்ட மாணவர்களுக்காக நடைபெற்ற போட்டியில் ஏறாவூர் அலிஹார் தேசியப் பாடசாலை மாணவர்களும் பதுளை எல்லே தமிழ் மஹா வித்தியாலய மாணவர்களும் பங்குகொண்டனர்.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அலிஹார் தேசியப் பாடசாலை அணி 46.2 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எல்லே அணியினர் 25வது ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று தோல்வி கண்டனர்.
ஏறாவூர் அலிஹார் தேசியப் பாடசாலை அணியினர் ஏற்கனவே மட்டக்களப்பு, அம்வாறை பிரதேச மாணவர்கள் மத்தியில் விளையாடி வெற்றிபெற்று 4ம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் யூ. எச். முகம்மது தெரிவித்தார்

»»  (மேலும்)

8/23/2009

ஜhதிக ஹெல உறுமய கட்சியை இனவாதக் கட்சி என்பது தவறு''

ஹெல உறுமய கட்சியன் ஒரே தமிழ் உறுப்பினரும் மாத்தளை நகர சபை உறுப்பினரும் கட்சியின் மத்திய குழு அங்கத்தவருமான
எஸ். ராஜலிங்கம்
மனம் திறக்கிறார்.
உரையாடியவர்:
அருள் சத்தியநாதன்


“சிலர் என்னை நூதனமாகப் பார்க்கிறார்கள். இவருக்கு என்ன கேடு நடந்திருக்கிறது? என்று எண்ணுவது எனக்குத் தெரியும்” என்கிறார் எஸ். ராஜலிங்கம்.
யார் இந்த ராஜலிங்கம்?

பலரும் இவரை ஒரு மாதிரி பார்ப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாதுதான். ஏனெனில் ஜாதிக ஹெல உறுமய என்ற பிக்குகளின் கட்சியின் ஒரே தமிழ் உறுப்பினர் இவர். கடும்போக்கு சிங்கள தேசிய வாதக் கட்சியாக அறியப்படும் ஜாதிக ஹெல உறுமய கட்சியில், இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்கின்ற மாதிரி, அதன் செயற்குழு உறுப்பினராக இவர் செயல்பட்டால் ஆச்சரியத்துடன் ஏறெடுத்துப் பார்க்காமலா இருப்பார்கள்? மேலும் இவர் 2006 ஆம் ஆண்டு நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு 2618 வாக்குகளைப் பெற்று கம்பளை நகர சபையில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இத்தேர்தலில் வெற்றிபெற 500 - 600 வாக்குகளே போதும், எனினும் தமிழரான இவருக்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
இதனால்தான் ராஜலிங்கம் வித்தியாசமான அரசியல் வாதியாக அல்லது ‘தமிழினத் துரோகி’யாகப் பார்க்கப்படுவது ‘தவிர்க்க’ முடியாததாகி இருக்கிறது.
சரி, இவர் என்ன சொல்கிறார்?
“எனக்கு பெளத்தத்தில் ஆழ்ந்த அறிவு இருக்கிறது. சிங்கள மக்களையும் எனக்கு நன்றாகவே தெரியும். பெளத்த சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் வசித்துக் கொண்டு எனக்கு பெளத்தமும் புரியாது. சிங்களவனையும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? பிரான்ஸில் உட்கார்ந்து கொண்டு பிரெஞ்சு தெரிந்து கொள்ளவும் மாட்டேன்; பிரெஞ்சுக்காரனை புரிந்து கொள்ளவும் மாட்டேன் என்று சொல்லலாமா? உங்களுடன் நெருக்கமாக வசிக்கும் மற்றொரு இனத்தைப் பற்றி நாம் புரிந்து, தெரிந்து வைத்திருந்த வேண்டும். அவர்களின் மொழி, கலாசாரம் இவற்றின் பின்னணியான பெளத்தம் என்பனவற்றில் பரிச்சம் இருக்க வேண்டும். இருந்திருந்தால் பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். எந்தச் சிங்களவனும் தமிழன் சிங்களவனாக மாற வேண்டும் என எதிர்பார்ப்பதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் எதிர்பார்ப்பதைப் போலவே அவர்களும் நீங்கள் அவர்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். நாம் முழுத் தமிழனாக இருந்து கொண்டே சிங்களவர்களுடன் நல்லுறவையும் புரிந்துணர்வையும் வளர்த்துக் கொண்டால் எந்தச் சிக்கலும் ஏற்பட வாய்ப்பில்லை. நீங்கள் சிங்கள வழிக் கல்வி பயின்று சிங்களப் பெண்ணை மணந்து தான் சிங்களவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது!”
இப்படி வித்தியாசமானதும் ஆக்கபூர்வமானதுமான கருத்துக்களை கொண்டிருக்கும் ராஜலிங்கம் மாத்தளை மாவட்டம் எல்கடுவ உன்னஸ்கிரிய தோட்டத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் தோட்டப் பாடசாலை ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் இவர் நான்காவது. இவரது அண்ணாதான் கவிஞர் அழகுப்பிள்ளை. தன் தந்தைக்கு கல்வி அறிவின் மகத்துவம் தெரிந்திருந்ததால், சிரமங்களுக்கு மத்தியில் பிள்ளைகளைப் படிக்க வைத்ததாகக் கூறுகிறார். 1959 இல் தான் முதல் தடவையாக கொழும்புக்கு வந்ததாகவும் அச்சமயத்தில் கொழும்பில் டிராம் வண்டிகள் ஓடிக் கொண்டிருந்ததாகவும் நினைவு கூருகிறார் ராஜலிங்கம்.
எல்லா மலையக பிரமுகர்களையும் போலவே இவரும் ஆரம்பத்தில் இ. தொ. கா. வில் இருந்தவர்தான். இவர் கொழும்பில் தன் சகோதரன் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த போது அந்த வீட்டுக்கு வி. கே. வெள்ளையன், ராஜலிங்கம், ஜேசுதாசன் (செனட்டர்) ஆகியோர் வந்து போவார்களாம். இவரும் சந்தடி சாக்கில் அவர்களுடன் பேசி பழக்கம் வைத்துக் கொண்ட போது தொழிற்சங்க இயக்கம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இ. தொ. கா.வுக்கு இன்னொரு ராஜலிங்கம் தேவை என்று மலையகக் காந்தி ராஜலிங்கம் இவரிடம் சொல்லவே, 1962 ஆம் வருடம் இவர் தன்னை இ. தொ. கா. வில் இணைத்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஏற்பட்டதுதான் இவரது தொழிற் சங்க உறவு.
1991 இல் இவர் வாழ்க்கையில் மற்றொரு குறிப்பிடத்தக்க சிந்தனை மற்றாம் நிகழ்ந்தது. தொழிற்சங்கங்கள், பொதுவாழ்க்கை, அரசியல், விளைவுகள் - எதிர்விளைவுகள் என்று பல்வகையான அனுபவங்களை வாழ்க்கையில் பார்த்துணர்ந்த பின்னர் சிங்கள அரசியலின் பால் இவரது பார்வை திரும்பியிருக்கிறது.
“தமிழ்த் தலைவர்கள், போராளிகள் என்று 1948 முதல் எத்தனையோ வகையான அணுகு முறைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. தமிழர் சிங்களவர் மத்தியிலான பிரிவையும், சந்தேகத்தையும் தப்பபிப்பிராயத்தையும் நீக்கியப்பாடாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் நிலைமைகள் மோசமாகி வருவதாகவே உணர்ந்தேன். இந்த நிலையில் நாம் என்ன செய்கிறோம்? நமது பிரச்சினைகளை நாமே நமக்குள் பேசுகிறோம். ஏசுகிறோம். தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரித்து ரசிக்கிறோம். எனினும் மாற்றி யோசிக்க மட்டும் முன்வருவதில்லை. எவனை சண்டைக்காரன் என்று கருதுகிறோமோ அவனையே நண்பனாக்கிக் கொண்டால் என்ன? அவர்களுடன் இணைந்து அவர்களை என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கூடவே தமிழர்களின் கூடாரங்களில் உண்மையாகவே என்ன நடக்கிறது என்பதை இக்கடும் போக்காளர்களிடம் எடுத்துச் சொன்னால் என்ன?
“இந்த சிந்தனை தான் என்னை இக்கட்சியில் இணைத்தது” என்கிறார் ராஜலிங்கம்.
இதன் பின்னர் பெளத்த மத நூல்களைப் படிக்கத் தொடங்கி இருக்கிறார். பல பெளத்த பிக்குமாருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுடன் பழகி வந்திருக்கிறார். தமிழர்கள் தொடர்பான பல தப்பான அபிப்பிராயங்களை உண்மை நிலையை எடுத்துச் சொல்வதன் மூலம் கனைய முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். அவர்களின் கண்ணோட்டங்களையும் இவரால் அறிய முடிந்திருக்கிறது. சில பிக்குமாரை தோட்டங்களுக்கு அழைத்துச் சென்று தமிழ்த் தொழிலாளர்களின் அவல நிலையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார். இவர்கள் அப்பாவிகள், நாட்டின் வளங்கள் இவர்கள் மத்தியில் பங்கிடப்படாமல் இருக்கின்றன என்பதை பிக்குமாருக்கு சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தொண்ணூறுகளின் இறுதியில் வீர விதான, பின்னர் சிஹல உருமய போன்ற பெளத்த சிங்கள பேரினவாதக் கட்சிகள் தோற்றம் பெற்று, வடக்கில் நிகழ்ந்த தனிநாட்டுக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஆயுத போராட்டத்தையே உரமாகக் கொண்டு வளர்ந்த போது, தமிழர்களின் உண்மை நிலையை தீவிரவாதத் தன்மை கொண்ட சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ராஜலிங்கம் முன்னைவிட அதிகமாகவே புரிந்து கொண்டார்.
“பெளத்தர்கள் தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். இதேசமயம் பெளத்த பிக்குமார் அரசியலில் மிகுந்த அதிகாரம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறக்கின்றன. எனவே, நமது பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்வதுதான் சரியானது என்பதைப் புரிந்து கொண்டேன்” என்கிறார் ராஜலிங்கம்.
ஜாதிக ஹெல உறுமயவில் இவர் இணைந்து கொள்வதற்கு இது தான் காரணமாக இருந்திருக்கிறது. ஏற்கனவே மாத்தளையில் பெளத்த பிக்குமாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் பெளத்த மத அறிவும் இதற்கு பின்புலமாக அமைந்திருந்தன.
இம்மாதத்தின் முற்பகுதியில் ஜாதிக ஹெல உருமையின் ஆறாவது மாநாடு கொழும்பில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய வண. அத்துரெலியே ரத்தன தேரோ, இந்நாட்டின் மூவின மக்களும் சகல உரிமைகளுடனும் சரிசமனாக வாழ்வதற்கு உரிமை உடையவர்கள் என்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
“ஜாதிக ஹெல உறுமய கட்சி ஆறு வருடங்களுக்கு முன் னர் எப்படி இருந்ததோ அப்படி இன்று இல்லை. அக்கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வந்ததன் பலனாக சிறுபான் மையினர் தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் மாற்றமும் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறும் ராஜலிங்கம், ஹெல உறுமய இப்போதெல்லாம் முன்னரைப் போல இனவாதம் பேசுவதில்லை என்பதைக் கவனித்தீர்களா? என்று கேட்கிறார் ராஜலிங்கம்.
விடுதலைப புலிகளின் செயற்பாடுகளினால் பெளத்த பிக்குகள் அச்சமடைந்திருந்தது உண்மை. இதுவே சிங்கள பெளத்த தீவிரவாதம் உரம் பெறக் காரணமாயிருந்தது. இப்போது நிலைமை மாறிவிட அவர்களின் கண்ணோட்டங்களும் மாறி வருகின்றன என்கிறார் இவர்.
பெளத்த பிக்குமாருடன் சுலபமாக பழகலாம். நல்லவர்கள். உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களின் உதவியுடன் அரசாங்கத்தில் பல விடயங்களை சாதித்துக் கொள்ளலாம். நாம் நமது உரிமைகளைப் பெறுவதில் முக்கிய தடை இந்தப் பிக்குகள் தான் என்றால் அவர்களது உள்ளங்களைத் தானே முதலில் வெற்றிகொள்ள வேண்டும்! என்று கேட்கும் ராஜலிங்கம், சமஸ்த லங்கா பெளத்த மஹா சபா என்றழைக்கப்படும் அகில இலங்கை பெளத்த மகா சபையால் நியமனம் செய்யப்பட்ட ‘பிற மதங்களினால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் இடையூறுகளையும் கண்டறியும் ஆணைக் குழு’வில் அங்கத்துவம் வகித்திருக்கிறார். மூன்று ஆண்டுகளாக இக்குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து தகவல்களைச் சேகரித்தனர். இந்த ஆணைக் குழுவில் அங்கம் வகித்து பணிசெய்ததன் மூலம் தனக்கு நல்ல பல அனுபவங்கள் கிடைத்தன என்று சொல்லும் ராஜலிங்கம், பெளத்தர்களுக்கு இந்துக்கள் மீது எந்தத் தப்பபிப்பிராயமும் கிடையாது என்கிறார்.
“ஹெல உறுமயவின் உயர் மட்டத் தலைவர்கள் இன்று தமக்குத் தமிழ் தெரியாது என்பதற்காக வெட்கப்படுகிறார்கள். பிக்குமார் தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் இரண்டாவது மாநாடு நடைபெற்றபோது, ‘அனைத்துத் தமிழர்களையும் ‘கொட்டியா’ என்று பார்க்கிaர்கள். அது உண்மையல்ல. உங்களுக்குத் தமிழ் தெரியாது என்பதே இதற்குக் காரணம். நீங்கள் ஏன் தமிழ் கற்கக் கூடாது? சிங்களவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதற்காகத் தமிழர்கள் கஷ்டப்பட முடியாது’ என்று நான் பேசினேன். இது அவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளவில்லை” என்று ஒரு நிகழ்வை ஞாபகமூட்டவும் செய்தார்.
சரி மிஸ்டர் ராஜலிங்கம், ஹெல உறுமயவின் தமிழர்கள் - தமிழ்ப் பிரச்சினை தொடர்பான கொள்கை என்ன?
‘பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பிரதான முதன்மையான கொள்கையாக இருந்தது. அது முற்றுப் பெற்றிருப்பதால் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். மொழி உரிமை, தமிழில் வேலை செய்யும் உரிமை, தமிழ் மொழி பாவனை உரிமை என்பன வழங்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. தமிழர்களுக்கு சம உரிமை வழங்கி பயங்கரவாதம் மீளவும் தலைதூக்கவிடக் கூடாது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. தமிழர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. இவை தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை இக் கட்சி ஜனாதிபதியின் பார்வைக்கு சமர்ப்பித்திருக்கிறது. தமிழனாக இருப்பதால் என்னால் இந்த விஷயங்களைப் பற்றி அவர்களிடம் பேசி விளக்க முடிகிறது’ என்று பதில் சொல்கிறார் ராஜலிங்கம்.
ஹெல உறுமய கட்சி தற்போது பெளத்த - இந்து நல்லிணக்க சபையை உருவாக்கியுள்ளது. கடந்த 11ம் திகதி இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் இந்து மத விவகார திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்விரு மதங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை இணைத்து மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கி சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இந்து - பெளத்தம், தமிழன், சிங்களவன் எனத் தொடர்ந்தும் பேதங்களை வளர்த்துச் சென்றால் அதன் எதிரொலியாக அரசியல் மற்றும் பொருளாதார நலிவையே நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என்பதோடு, வெளிநாட்டுச் சக்திகள் இதன் கதகதப்பில் குளிர்காய இங்கே வந்துவிடலாம் எனவும் ஜாதிக ஹெல உறுமய கவலை கொண்டிருக்கிறது என்கிறார் ராஜலிங்கம்.
கடைசியாக அவரிடம் ஒரு கேள்வி : இந்த இலங்கையிலேயே அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போன ஒரே தமிழன் நீங்கள் மட்டுந்தானா?
‘இது பற்றியும் நான் சொல்லியிருக்கிறேன். ஹெல உறுமயவில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக மேலும் பல தமிழர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்பது என் நம்பிக்கை’ என்றார் ராஜலிங்கம் முத்தாய்ப்பாக!

thinakaran
»»  (மேலும்)

திருக்கோயிலில் அமைக்கப்படவிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான அரசியல் பணிமனை தீக்கிரை




அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் பிரவேசத்திறகான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என அம்மாவட்ட மக்கள் கட்சியின் தலைமையினை கேட்டுக்கொண்டதற்கிணங்க மேற்படி காரியாலயமானது திருக்கோயிலில் மாவட்ட அமைப்பாளர் வி. சத்தியசீலன் தலைமையில் அமைக்க ஏற்பாடாகி இருந்தது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் பிரவேசம் மக்கள் மத்தியிலே தற்போது மிக வேகமாக சென்றடைந்து கொண்டிருக்கின்றது. இந்நிலைமையினை பொறுத்து கொள்ள முடியாத சில நய வஞ்சகர்கள் திட்டமிட்டு அவர்களது அடியாட்களை ஏவி, த.ம.வி.பு கட்சியின் அமைப்பாளர், ஆதரவாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததோடு அவர்களது காட்டுமிராண்டித்தன வேலைகளையும் கட்டவிழ்த்து வி;ட்டிருக்கின்றார்கள். இதற்கு சிறந்த சான்றாக அம்பாறை மாவட்டத்தின் தாதா என தன்னையே தான் தனிக்காட்டு ராஜா என கூறிக்கொண்டிருக்கும் நயவஞ்சகர் ஒருவரால் திறக்கப்பட்விருந்த த.ம.வி.பு மாவட்ட காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் உரிய முறைப்பாட்டினை பொலிசாரிடம் செய்திருந்த போதும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் மிகவும் அச்சத்துக்குள்ளாகிய நிலையில் இருக்கின்றார்கள். அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கே இவ்வாறான நிலை என்றால், சாதாரண ஒரு குடிமகனுக்கு என்ன நிலை? இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் ஜனநாயகம் எங்கு செல்லுமோ தெரியவில்லை.
»»  (மேலும்)

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு நேசக்கரம் நீட்டிய கிழக்கு மாகாண சபை




கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரேரணையின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் அரச துறையில் சேவையாற்றுகின்ற அனைவரினதும் ஒரு நாள் ஊதியத்தினை வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வழங்குவதற்கென முடிவெடுக்கப்பட்டது இதற்கமைய கிழக்கு மாகாணசபை முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாணத்தில் சேவையாற்றுகின்ற அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரினதும் ஒருநாள் வேதனம் அம்மக்களுக்காக வழங்கப்பட்டது. இது தொடர்பாக சேகரிக்கப்பட்ட பணத்தினை கையளிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. சேகரிக்கப்பட்ட மொத்தப்பணம் 7,679,433 ரூபா 38 சதம் பெறுமதியான காசோலை கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
»»  (மேலும்)

8/22/2009

திருகோணமலை மாவட்டத்தின் விவசாயத்துறையில் ஓர் புரட்சி



திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளிப்பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திரியாய் பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்ப்பாசனக் குளம் இம்மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய குளங்களில் ஒன்றாகும். இது பல வருடமாக புனரமைக்கப்படாத நிலையில் காடு மண்டிக் காட்சி தருகின்றது. இக்குளத்தை புனரமைப்பது தொடர்பில் அண்மையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதனை புனரமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இக்குளத்தின் அமைவிடம் அதன் தற்போதைய நிலை தொடர்பாக அறிந்து கொள்ளும் பொருட்டு கிழக்கு மாகாண அமைச்சர்கள் குழு கடந்த 19.08.2009 அன்று நேரடியாக அப்பிரதேசத்திற்குச் சென்று அக்குளத்தினை பார்வையிட்டனர். ஆக்குளத்தினை முழுமையாக புனரமைப்பதற்கு சுமார் 75 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், ஆனால் முதற்கட்டமாக சுமார் 50மில்லியன் ரூபாவிற்கான வேலைகளைச் செய்து குளத்தினை புனரமைத்து இம்முறை விவசாயச் செய்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திற்கு விவசாயப் பெருமக்கள் போய் வருவதில் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகள் இருப்பதாகவும் அக்கிராம மக்கள் அமைச்சர் குழுவிடம் தெரிவித்தார்கள். இது தொடர்பில் பாதுகாப்பிற்கு பொறுப்பான பாதுகாப்பு அதிகாரிகளுடன் எதிர்வருகின்ற 24ம் திகதி முதலமைச்சர் தலைமையில் முதலமைச்சர் செயலகத்தில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இக்குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் சுமார் 1500 ஏக்கர் சிறுபோகத்திற்காகவும், மகாபோகத்தில் 3000 ஏக்கரும் செய்கை பண்ண முடியும். இக்குளத்தினை பார்வையிடுவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாகாண அமைச்சர்கள் என பலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

»»  (மேலும்)

சுற்றுலா, ஹோட்டல் முகாமைத்துவத்தில் கிழக்கில் 82 இளைஞர்,யுவதிகள் பயிற்சி பூர்த்தி



கிழக்கு மாகாணத்தில் உள்ள தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கென தொழில் துறைப்பயிற்சி நெறியினை வழங்கும் திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் சம்மந்தமான பயிற்சியினை நிறைவு செய்த ஒரு தொகுதியினர் வெளியேறியுள்ளனர்.கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி நிலையமும் அனுராதபுரத்தில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நிலையமும் இணைந்து இப்பயிற்சி நெறியினை வழங்கின. நிக்கோட் மற்றும் நெக்டப் ஆகிய நிறுவனங்களின் நிதி உதவியன் மூலம் நடைபெற்ற இந்த பயிற்சி நெறியினை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 82 இளைஞர் யுவதிகள் பூர்த்தி செய்திருந்தனர். இவர்களுக்கென சான்றிதள் வழங்கும் வைபவம் கிழக்கு தமாகாண முகாமைதத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் வி.திவாகரசர்மா தலைமையில் திருகோணமலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதள் வழங்கி வைத்தார்

»»  (மேலும்)

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் ஹமீட் கர்ஸாய் மாபெரும் வெற்றி




ஆப்கானிஸ்தான் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயே முன்னிலையில் உள்ளதாகவும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பொன்றை எதிர்கொள்ள அவசியமற்ற வகையில் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று உள்ளதாகவும் அவரின் பிரசார தலைவர் டீன் மொஹமட் தெரிவித்தார். அதேசமயம் ஹமீட் கர்ஸாயின் பிரதான போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவும் தானே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக உரிமை கோரியுள்ளார். உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில் தேர்தல் வெற்றி தொடர்பில் இவ்வாறு தகவல்கள் வெளியிடுவது தொடர்பில் அந்நாட்டு தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேற்படி உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளிவர இரு வாரங்கள் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் நிறைவு பெற்று விட்டதாக ஆப்கான் தேர்தல் ஆணையகம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. உத்தியோகபூர்வத் தேர்தல் முடிவுகளை எதிர்வரும் வாரம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையக அதிகாரியான ஸெக்ரியா பராக்ஸாய் கூறினார்
»»  (மேலும்)

வெளிநாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்கவும் - கோத்தபாய




வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அவர்களது கோடிக் கணக்கான அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களையும், குறித்த நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். மேற்குலக நாடுகள், உண்மையில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதனால் விடுதலைப்புலிகள் போன்றதொரு பயங்கரவாத இயக்கத்திற்கு அந்த நாடுகள் புலிகளிடம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் புதிய தலைவருமான குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு சிவ வாரங்கள் கழிந்த நிலையில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். புலிகளின் முதலீடுகள் சில்லறை வியாபாரக் கடையிலிருந்து, ரியல் எஸ்டேட் வரைக்கும், பெற்றோல் நிலையத்திலிருந்து கோயில் வரைக்கும், வர்த்தக கப்பல் சேவையிலிருந்து சினிமாவுக்கு நிதியளிப்பது வரை பரந்து விரிந்துள்ளது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை வேறு பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. எப்படி எனினும் புலிகளின் சொத்துக்களின் பெறுமதி கிட்டத்தட்ட 300 மில்லியன் டொலர்களிலிருந்து 1 பில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் எனவும், இதுபற்றிய போதிய தகவல்கள் கே.பி க்கு தெரிந்திருக்கும் எனவும் கோத்தபாய மேலும் கூறுகிறார், இந்த சொத்துக்கள் விடுதலைப்புலிகளினது என்று நிரூபிக்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட நாடுகள் அவற்றையும் மீதமுள்ள புலி உறுப்பினர்களையும் இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும்
»»  (மேலும்)