7/24/2009

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.



மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நேற்று முதல் (22.07.2009) வாகன பாஸ் நடைமுறை இரத்துச்செய்யப்பட்டுளதாக நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்தார்.மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தகர்களை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வைத்து நேற்று சந்தித்த போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தல் இருந்து கொழும்பு போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் பாஸ் எடுத்து செல்லும் நடைமுறை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தது. இன்று முதல் இப்பாஸ் நடைமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.இனிமேல் எந்த வாகனங்களும் பாஸ் எடுக்கத்தேவiயில்லை. நாட்டில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இந்த வாகன பாஸ் நடைமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியினதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினதும் அறிவுறுத்தலுக்கும், ஆலோசனைக்கு ஏற்பவுமே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment