தமிழர் விடுதலை கூட்டணி என்றும் தனது தனித்துவத்தை விட்டு விலகி செல்லவில்லை. வவுனியாவில் தமிழர் விடுதலைக்கூட்டணி (TULF), ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (EPDP) ஆதரிப்பதாக வெளிவந்த செய்தி எமக்கு ஆச்சரியத்தை தருகிறது. எமது கட்சி வவுனியாவில் அண்மையில் ஒரு கிளை அலுவலகத்தை திறந்து வைத்துள்ளதே தவிர நிர்வாக கட்டமைப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை.இவ்வாறு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி நேற்றையதினம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF) வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (EPDP) ஆதரிக்கும் என்று நேற்றையதினம் பத்திரிகைகளில் வெளியான செய்தி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணி(TULF) வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை(EPDP) ஆதரிப்பதாக வந்த செய்தி எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. எமது கட்சி வவுனியாவில் அண்மையில் ஒரு கிளை அலுவலகத்தை திறந்துள்ளதே தவிர நிர்வாக கட்டமைப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் எமது கிளைகள் பல ஆண்டுகளாகவே இயக்கவில்லை என்பதே யாவரும் அறிந்த உண்மை. இவ்வாறன விஷமப் பிரச்சாரங்கள் தேர்தல் காலங்களில் வருவது வழமைதான். இதனை பொது மக்கள் எவரும் நம்பவேண்டாம் எனவும் தமிழர் விடுதலை கூட்டணி என்றும் தனது தனித்துவத்தை விட்டு விலகி செல்வதில்லை என்பதையும் தெரியப்படுத்தி கொள்கின்றேன் என தமிழர் விடுதலை கூட்டணி (TULF) தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
0 commentaires :
Post a Comment