7/19/2009

எமது கிழக்கு மாகாண சமூகங்களின் ஒற்றுமையின் ஊடாக கிழக்கிற்கான அரசியல் பலத்தை ஏற்படுத்த வேண்டும். – கிழக்கு முதல்வர்.



கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற தமிழ் பேசுகின்ற மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிகள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாகவே எதிர் காலத்தில் கிழக்கிற்கான ஓர் நிலையான அரசியல் ஸ்த்தரத்தினை ஏற்படுத்த முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று அக்கரைப்பற்று அஸ் சிராஜ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காடசியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதல்வர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் எமது மூதாதையர்கள் எவ்வாறு தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பேணி வந்தார்களோ அவ்வாறே நாம் எமது உறவுகளைப் பேண வேண்டும் அதற்கான சரியான தருணமாக இக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன். எமது கிழக்கு மாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கது. அத்தோடு நிலையானதும் நீண்ட காலத்திற்கு எமது சமூகத்திற்கான அபிவிருத்தி என்று பார்க்கின்ற போது அதனை நாம் இன்னும் எட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது என்றார். காரணம் எமது தமிழ் பேசும் சமூகம் அதிலும் குறிப்பாக தமிழ் சமூகம் அரசியலில் மிகவும் பின் தங்கியே காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்களில் அதிகமானவர்கள் அரசியல் சிந்தனைகளில் நாட்டம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். இதற்கான காரணம் காலம்காலமாக இம்மக்கள் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்ட வரலாறுகளும் உண்டு. எது எவ்வாறு இருந்த போதிலும் நாம் இனிவருகின்ற காலங்களில் ஒற்றுமையாகவும் இன நல்லுறவோடும் வாழ்வதன் மூலமே எமக்கான அரசியல் தனித்துவத்தினைப் பேன முடியும் எனக் குறிப்பிட்டார்.
2009ம் ஆண்டிற்கான உள்@ராட்சி வாரத்தினை முன்னிட்டு அக்கரைப் பற்று பிரதேசசபை நூலகங்களுக்கடையிலான புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் தவாம் தலைமையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச சபை நூலகங்களில் திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நாவிதன்வெளி, ஆலயடிவேம்பு, காரைதீவு போன்ற பிரதேச சபைகள் பற்குபற்றின. இதில் பிரதம அதிதகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன், தேசிய காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய மின்சாரம் வீடமைப்பு அமைச்சர் எம். எஸ் உதுமாலெவ்வே,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வி. சுத்தியசீலன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment