பலநெடுங்காலமாக வாழைச்சேனைப் பிரதேசத்தில் பொதுநூலகம் ஒன்று இல்லாது இருந்தது. இதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்த பேத்தாழை மக்களின் வேண்டுதலுக்கமைய 350.000ரூபா பெறுமதியான நூலகம் ஒன்றிற்கான அடிக்கல் நேற்று (11.07.09) பேத்தாழையில் நாட்டப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சி; சந்திரகாந்தன் தனது பொது அபிவிருத்தித் திட்டத்தின் ஓர் அங்கமாக அனைத்து மக்களும் பயன் பெறக் கூடியதும் எதிர்காலத்தின் தேவை கருதியும் மேற்படி நூலகமானது இப் பிரதேசத்தில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இப் பிரதேசத்தில் கல்வி கற்கின்ற பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனப் பலர் தங்களது ஓய்வு நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் பொன்னான நேரத்தினை வாசிப்பிற்காக ஒதுக்குவதன் மூலம் பூரண அறிவைப் பெறலாம். அத்தோடு சமூகத்திற்கு தேவையான பல விடயங்களையும் கற்றுக்கொள்ளலாம்.
எமது மட்டக்களப்பு மாவட்டம் கல்லியில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணமாக வாசிப்பின்மையும் ஓர் காரணமாக அமையலாம். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகன் ஏற்படாத வண்ணம் இந்நூலகம் பயன் தரும். இந் நிகழ்வில் உள்ளூராட்சி ஆணையாளர் மா.தயாபரன், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் து. சத்தியானந்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment