7/15/2009

எல்லைக்கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன


அம்பாறை மாவட்டத்துடன் கடந்த பதினெட்டு வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கிராமங்கள் நிர்வாக ரீதியாக மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு செங்கலடி- பதுளை வீதியிலுள்ள கெமுனுபுர,மங்களாகம போன்ற கிராமங்கள் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலும் கெவிலியாமடு, புலுகன்னாவை போன்ற கிராமங்கள் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலும் சேர்க்கப்பட்டு மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது எல்லைக் கிராமங்களிலுள்ள மக்கள் தமது சிவில் நிர்வாக அலுவல்களின் நிமித்தம் அங்கு செல்ல முடியாத நிலையில் இருந்ததாகவும். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள அதிகாரிகள் தமது சுய பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களினால் அங்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டதாகவும். இதன் காரணமாகவே சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட எல்லைக் கிராம மக்கள் தற்காலிகமாக அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தனர். இக்கிராம மக்கள் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர சகல திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

Categories: செய்திகள்

Tags:

-->

0 commentaires :

Post a Comment