7/11/2009

மக்களை அகதிகள் ஆக்கியவர்கள் கண்ணீர் வடிப்பதில் அர்த்தமில்லை


புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்க ப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் மூலதனமாக்கும் முயற் சியில் எதிரணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட் டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இன பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் பங்கே ற்க மறுத்து ஒதுங்கியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமன்றி, பதின்மூன்றாவது திருத் தம் நடைமுறைக்கு வருவதை உயிரைக் கொடு த்தும் தடுக்கப்போவதாக வீரவசனம் பேசும் மக்கள் விடுதலை முன்னணிகூட நிவாரணக் கிராமங்களிலுள்ள தமிழ் மக்களுக்காகக் கண் ணீர் வடிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளும ன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் நிவா ரணக் கிராமங்களிலுள்ள மக்களின் ‘துன்பங் கள்’ பற்றிப் பாராளுமன்றத்தில் அழுதழுது பேசி யதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின் றன. இம் மக்களின் நலன்கள் பற்றிப் பேசும் தார்மீக உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கு உண்டா என்ற கேள்விக்கு வருவதற்கு முன், நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களு க்கு வழங்கப்படுகின்ற வசதிகள் பற்றிப் பார் ப்போம்.
நிவாரணக் கிராமங்களில் பெருந்தொகை யான மாணவர்கள் உள்ளனர். இவர்கள் தங் கள் கல்வியைத் தொடர்வதில் எவ்விதத் தட ங்கலும் இல்லாத நிலையை அரசாங்கம் ஏற் படுத்தியிருக்கின்றது. இம் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களும் அப்பியாச கொப்பிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள் ளன.
ஆரம்பக் கல்வி, இடை நிலைக் கல்வி, உயர் கல்வி என மூன்று பிரிவுகளாக இம் மாணவர்களுக்குக் கல்வி புகட்டப்படுகின் றது. க.பொ.த உயர்தர பரீட்சைக்கும் ஐந் தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை க்கும் தோற்றும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மீட்டல் வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இக் கிராமங்களிலுள்ள இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இடம் பெயர்ந்த மக்கள் உள்ளூரிலும் வெளிநாடுகளிலுமுள்ள தங்கள் உறவினர்களுடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கான வசதியும் அங்கு உண்டு. பிரிந்திருந்த பல குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெருந்தொகையான மக்கள் உள்ள இடங்களில் சில குறைபாடு கள் இருக்கவே செய்யும். ஆனால் குறை பாடுகளிலும் பார்க்க நிறைவுகள் மிகக் கூடு தலாக உள்ளன. நிவாரணக் கிராமங்களிலு ள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய் வதற்காக அரசாங்கம் நாளொன்றுக்கு இருப த்தைந்து கோடி ரூபா செலவிடுகின்றது என் பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்று வதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக மேற் கொள்ளப்படுகின்றன. வவுனியா வடக்கிலு ள்ள எட்டுக் கிராமங்கள் மீள்குடியேற்றத்துக் குத் தயாரான நிலையில் இப்போது உள் ளன. அடுத்த வாரமளவில் இந்த எட்டுக் கிரா மங்களிலும் மீள்குடியேற்றம் இடம்பெற விருக்கின்றது.
நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக் காக இப்போது கண்ணீர் வடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தாங்க ளும் இம் மக்களின் அவல நிலைக்குப் பொறு ப்பாளிகள் என்பதை மறந்து பேசுகின்றனர்.
இவ்வளவு பெருந்தொகையான மக்கள் அக திகளாகியதற்குப் புலிகளின் பிழையான அர சியல் கொள்கையே காரணம். இந்தப் பிழை யான அரசியல் கொள்கையை ஏற்றுப் புலிக ளின் பதிலிகளாகச் செயற்பட்டதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சம அளவில் பொறுப்பேற்க வேண்டும்.
இன்று அகதிகளாக நிவாரணக் கிராமங்க ளில் தங்கியிருப்போர் புலிகளால் பலவந்த மாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள். இவ ர்களை விருப்பத்துக்கு மாறாகப் புலிகள் தடு த்து வைத்திருந்ததற்கு எதிராக ஒரு வார்த்தை கூடக் கூட்டமைப்புத் தலைவர்கள் பேசவி ல்லை. புலிகளின் சகல செயற்பாடுகளுக்கும் இவர்கள் அங்கீகாரம் வழங்கியதன் மூலம் மக்களின் துன்பங்களுக்குப் பொறுப்பாளிக ளானார்கள்.
மக்களை அகதிகளாக்கிவிட்டு அவர்களுக் காகப் பரிந்து பேசுவதில் அர்த்தமில்லை. இடம் பெயர்ந்த மக்களின் நலன்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளு க்கு ஒத்துழைப்பு வழங்குவது செய்த பாவ த்துக்குப் பரிகாரமாக அமையும்.

0 commentaires :

Post a Comment