7/10/2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய அரசியல் நிலைப்பாடு


நாட்டின் ஐக்கியம், இறைமை, சமத்துவம் என்பனவற்றுக் குப் பங்கம் ஏற்படாத வகை யில் அரசியல் தீர்வொன் றைக் காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு தயாராக உள்ளதெனக் கூட்டமை ப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா நேற்று முன்தினம் பாராளுமன்ற த்தில் கூறியிருப்பது கூட்டமைப்பின் அரசி யல் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின் றதா என்ற கேள்வியைப் பலரிடம் தோற்று விப்பது இயல்பானதே.
புலிகள் இயக்கம் முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை யின் இறைமைக்கும் ஐக்கியத்துக்கும் முர ணான நிலைப்பாட்டுடன் செயற்பட்டதென் பது இரகசியமல்ல.
தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இல ங்கை தமிழ்க் காங்கிரஸ், ரெலோ, ஈ. பி. ஆர்.எல்.எப். (சுரேஷ் அணி) என்பன இணை ந்து உருவாகியதே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு. பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்கு எதி ர்ப்புத் தெரிவிப்பதற்காக இக் கட்சிகளி டையே ஏற்பட்ட கூட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவெடுத்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர்கள் மேற்படி தீர்வுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் எதிர்த்தார்கள். நாட்டின் ஐக்கியம், இறைமை, சமத்துவம் என்பன வற்றுக்குப் பங்கம் ஏற்படாத வகையில் சம ஷ்டித் தன்மை கொண்டதான இந்தத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்ததன் மூலம் ஐக்கியத்து க்கும் இறைமைக்கும் முரணான பாதையில் கூட்டமைப்பு பயணிக்கத் தொடங்கியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்க ப்பட்ட நாளிலிருந்து புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்பட்டு வந்தது. புலிகள் இலங்கையின் இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் அங்கீகரிக்க வில்லை. தனிநாடு தான் அவர்களின் ஒரே இலக்காக இருந்தது. புலிகளின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப் பிரச் சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் சிறித ளவேனும் அக்கறை செலுத்தவில்லை. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவையும் அதன் செயற் பாடுகளையும் கூட்டமைப்பு நிராகரித்தது.
அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கு ஜனா திபதி அளித்த பல சந்தர்ப்பங்களைக் கூட்ட மைப்பு பயன்படுத்தவில்லை. தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் புதிய நிலைப்பாட் டைப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய ஸ்ரீகாந்தா கூட, புலிகளுக்கு எதிரான இரா ணுவ நடவடிக்கை இடம்பெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்து புலிகளுக்கு ஆதரவான பிரசாரத்தை ஊக்குவித்தவர்.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு இலங்கையின் இறைமைக்கும் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது என்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் தோன்றியிரு ப்பது புதுமையானதல்ல. தவறான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கட்சிகள் சூழ்நிலை மாற்றத்துக்கு ஏற்ப நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வழமையான நடைமுறை க்கமையத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வ தில் புதுமை எதுவும் இல்லை.
புதிய நிலைப் பாட்டுக்கு விசுவாசமாகச் செயற்பட வேண் டியது மிகவும் முக்கியமானது. அப்போது தான் நம்பகத்தன்மையை வளர்க்க முடியும். மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா வெளி ப்படுத்திய புதிய நிலைப்பாடு ஐக்கிய இல ங்கையில் அரசியல் தீர்வு என்ற அடிப்படை யிலேயே அமைந்துள்ளது. எனவே அந்த வழி யில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற் பாடு அமைய வேண்டியது அவசியம்.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சி பல தசாப்தங்கள் பின்தள்ளப்பட்டி ருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண் டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலை வர்களின் தூரநோக்கற்ற செயற்பாடு இதற் குக் காரணமாக உள்ளதெனிலும், இப் போது அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப் பதால் எந்தப் பலனும் ஏற்படப் போவ தில்லை. நடைமுறைச் சாத்தியமான அணுகு முறையைப் பின்பற்றி அரசியல் தீர்வை அடைவதே இன்றைய தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அடிப்படை யில் செயற்படுவதற்கு முன்வருமென நம்பு கின்றோம்.
நன்றி - தினகரன்



0 commentaires :

Post a Comment